பினாங்கு தொடங்கி நாடெல்லாம் தமிழ் பணியாற்றிய சுவாமி இராமதாசருக்கான நூற்றாண்டு விழா
ஈடு இணையில்லா சேவைக்கு தலைவர்கள் புகழ் மாலை
பினாங்கு மாநிலம் தொடங்கி நாடெல்லாம் தமிழுக்கும், தமிழருக்கும் தோண்றற்றிய புலவர் மொழி செம்பல் தவத்திரு சுவாமி இராமதாசர் அவர்களின் நூற்றாண்டு பெருவிழாவில் நாடுத் தழுவிய அளவில் இருந்து வருகை அளித்திருந்தபொது அமைப்புகளின் தலைவர்கள் சுவாமி இராமதாசருக்குப் புகழாரம் சூட்டினர்.
பினாங்கு மாநிலத்தின் செந்தமிழ் கலா நிலையத்தின் தோற்றுனர் முதுதமிழ் பெரும்புலவர் தவத்திரு டாகடர் சுவாமி இராமதாசரின்நூற்றாண்டு பெருவிழா,அண்மையில் பினாங்கு ஈமான் பேரவையின் மண்டபத்தில் முத்தமிழ் அறிஞர் பெருமக்கள் புடைசூழ மிக கோலாகலமாக நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு தமிழக பெரும் புலவர் பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன் தலைமையில், பினாங்கு செந்தமிழ் கலா நிலையம்,பினாங்கு ஈமான் பேரவை இணைந்து பினாங்கு சுற்றுவட்டார பொது இயக்கங்களின் துணையோடு சிறபாக நடைபெற்றது.,
நிகழ்சியாக தொடக்க அங்கமாக தமிழ் வாழ்த்தினை பினாங்கு மாநில கலைஞரும், பாடகருமான சாகுல் ஹமீட் அவர்களின் "நீராடும் கடலெடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் எனும் தமிழ் வாழ்த்தினை பாடி துவக்கினார்.அதனை
தொடர்ந்து கவியரங்கம் நிகழ்சி செந்துறை கவிஞர் சோலை முருகன் அவர்களின் தலைமையில் 8 கவிஞர்கள் கவிப்பாடினார்கள். இன்நிகழ்வுக்கு தலமையேற்றிருந்த பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன் அவர்கள் தமது வரவேற்புரையை கவிதை நடையில் தனக்கே உரிய பாணியில் ஆற்றி வருகையாளர்களைகவர்த்ததுடன்,சுவாமி இராமதாசர் அவர்கள் இளம் பருவத்திலேயே தமிழகத்தில் இருந்து மலேசியாவிற்கு வந்துசெந்தமிழ்க் கலாநிலையம் என்ற பெயரில் ஒரு இலக்கிய அமைப்பை 1930 ஆம் ஆண்டு அமைத்து, அதன் வழியாக தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பள்ளி நடத்திப் பல மாணவர்களை சிறந்த தமிழ்ப் பற்றாளர்களாகவும், இலக்கிய வாதிகளாகவும்உருவாக்கியுள்ளார் என்றும் கூறினார்.
பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் இராமசாமியின் பிரதிநிதியாக வந்து கலந்துக்கொண்ட பினாங்கு தமிழ்எழுத்தாளர் சங்க பொருலாளர் கு.கிருஷ்ணசாமி, இனம் மொழி இலக்கியம் தொடர்பாக சிறப்புரை நிகழ்தியதுடன், தமிழுக்கு கரைகண்டவர் என்று பலர் இங்கு புகழாரம் சூட்டியதற்கு சுவாமி இராமதாசம் மிகப்பொருத்தமனவராகவும், 64 கலைகளில் 54 கலைகளைகற்றுத் தேர்ந்தவர் என்றால் அது மிகையாகாது என்று விவரித்தார். தமிழகத்தில் இருந்து வருகை அளித்திருந்த மூத்த வழக்கறிஞர் முத்துக்கண்ணன் சுவாமி இராமசாசின் சிறப்புகளை தொகுத்து மிக அற்புதமாக உரையாற்றியதுடன், கூடிய விரைவில் தமிழகத்தில்சுவாமி இராமதாசருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று கூறினார்.
நாடகப் பேராசிரியர் ஜி.எஸ்.மணியம், ஈமான் பேரவையின் தலைவர் டத்தோ முகமது இராபி, கவிஞர் அ.கி.டேவிட், தமிழ்த்திருத.மதிராசன், கே.கே.இஅரவீந்திரன், பெலித்தா தமிழ் முஸ்லிம் சாங்க தலைவர் முகமது நசீர், மலேசிய சமுகநலவியல் சங்கதலைவர் டாக்டர் ஹஜி ஹபீப் ரஜ்மான் மேலும் பலர் சிறப்பு வருகை அளித்து நிகழ்சியை சிறப்பாக நடத்தினர். ஈப்போ ஆசிரியர் மாணிக்கம் நிகழ்சிய சிறப்பாகதொகுதித்து வழங்கினார்.
இதனிடையே இந்த நூற்றாண்டு விழாவினை சுவாமி இராமதாசார் அவர்களுக்கு நடத்த வேண்டும் என்ற வேட்கையில்,பெரும் முயற்சி செய்த தமிழகத்தின் பெருங்கவிகோ வ.மு.சேதுராமன் வழக்கறிஞர் சாகுல் அமீட் அவர்களை பினாங்கு வாழ் தமிழர்கள் தங்களின் நன்றியை அந்நூற்றாண்டு விழாவில் கலந்துக்க கொண்டவர்கள் தெரிவித்துக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home