Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Wednesday, 5 October 2016

செய்தி  : ஆர்.தசரதன் 

அக்       : 01.10.2016

செபெராங் ஜெயா 



கிதா தொண்டூழிய அமைப்பின் ஏற்பாட்டில் தலைமைத்துவ பயிலரங்கம் 


குளோபல் இண்டர்கிரேடட் திரான்ஸ் செண்டென்டல் ( GITA ) சங்கதின் ஏற்பாட்டில் குழந்தைகளுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் அண்மையில் செபெராங் ஜெயா கிருஷ்ணர் ஆலயத்தில் சிறப்புடன் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளை சேந்த 150 மாணவர்கள் கலந்துக்க கொண்டனர்.எதிர்வரும் 2025  ஆண்டுக்குள் சிறந்த  தலைமைத்துவம் கொண்ட தலைவர்களை உருவாக்கும் முயற்ச்சியில்  தொடக்க பயிற்சியின் அங்கமாக இந்த குழந்தைகளுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டதாக இந்த கிதா  அமைப்பின் ஏற்பாட்டுக்கு குழு தலைவர் மதுசூதனன் தாஸ் சொன்னார்.

இந்த பயில் அரங்கில் பகவத் கிதை சார்ந்த கேள்வி பதில் நிகழ்வு நடைபெற்றது.இந்த போட்டியில் சிறந்த போட்டியாளராக பிறை தமிழ்ப்பள்ளியை சேந்த தனசீலன் ரவிச்சந்திரன் சிறந்த மாணவனாக தேர்வு செய்யப்பட்டதுடன்,சிறந்த மாணவியாக ஜூரு தோட்ட தமிழ்ப்பள்ளியை சேந்த தர்ஷினி பூபாலன் தேர்வு செய்யப்பட்டார்.இதனிடையே நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டியில் ஜூரு தோட்ட தமிழ்ப்பள்ளியை சேந்த ஜனனி முதல் நிலையிலும்,இரண்டாம் நிலையில் பிறை தமிழ்ப்பள்ளியை சேந்த எம்.தனேஷ் வெற்றி பெற்றதுடன்,மூன்றாம் நிலையில் புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப்பள்ளியை சேந்த ஸ்ரீ ராம் அவர்கள் வெற்றி பெற்றார்.


தலைமைத்துவ பயிலரங்கில் கலந்துக்கொண்ட மாணவர்களின் ஒரு பகுதி

பரிசு பெற்ற மாணவர்களின் ஒரு பகுதியினர்.

முதல் பரிசு வென்ற ஜனனி,இரண்டாம் பரிசு வென்ற எம்.தனேஷ்  மற்றும் மூன்றாம் பரிசு வென்ற ஸ்ரீ ராம்







0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home