Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Wednesday, 2 March 2016

செய்தி : ஆர்.தசரதன்

மார்ச்    : 03.03.2016


ஜார்ஜ்டவுன்


பினாங்கு மலை பகுதிகளில் மேம்பாடுகள் குறித்து பொதுமக்கள் கேள்வி

மாநில அரசு அறிவிக்க வேண்டும்






பினாங்கு தீத்தி கேராவாங் பகுதியில் உள்ள மலை ஒன்றில்,ஆக்கரமிப்பு  செய்து வரும் தரப்பினர் மீது,மாநில அரசாங்கமும்,பினாங்கு நகராண்மை கழகமும் பதில் அளிக்க வேண்டும் என்று பினாங்கு பசுமை தோழமை கழக தலைவர் எஸ்..முகம்மது இட்ரிஸ் கேள்வி எழுப்பினார்.இந்த மலைபகுதியில் உள்ள மரங்கள் வெட்டபட்டு மலையின்  இயற்கை அழகை சீர்குலைத்து வருவது யார் என்றும் அவர் கேள்வி கணைகளை தொடுத்தார்.

இது போன்ற மன்றொரு சம்பவம் மாநில அரசுக்கு சொந்தமான விடுதிக்கு முன் புறமுள்ள,பத்து பிரிங்கியில் உள்ள மலை ஒன்றில்,மரங்களை அளி க்கும் நடவடிக்கையில் இயந்திரங்கள் கொண்டு  வேலையில் ஒரு தரப்பினர் ஈடுபட்டு வருவதாக மேலும் அவர் மேற்கோள் காட்டி சொன்னார்.அப்பகுதில் எந்த வகையிளான மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன என்பதற்கான எவ்வித அறிவிப்பு பலகையும் பொறுப் படாத நிலையில்,அப்பகுதில் உள்ள இயற்கை வளங்களை அழிந்து போவதுடன்,இயற்கை நிலை நீர் தடாகங்களினால் அந்த மலை பகுதில் மண் சரிவும் ஏற்படுவதுடன்,திடீர் வெள்ளம் மற்றும் கடல் நீர் தூய்மைக்கேடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக  முகம்மது இட்ரிஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

பினாங்கு மாநில  வனத்துறை அப்பகுதில் நடக்கும் மேம்பட்டு பணிகள் மாநில அரசாங்க அணைக்கு ஏற்ப நடக்கின்றதா? என்பதை சோதிக்க வேண்டும் என்றும்,அப்படி இல்லை என்றால்,மாநில அரசாங்கமும் உள்ளூர் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரிவினரும் இந்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும்,சட்டத்துக்கு மீறிய செயலில் ஈடுபாடும் தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அந்த மேம்பாட்டு பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பினாங்கு மாநில  அரசாங்கம் மாநிலத்தில் உள்ள மலை பகுதிகளில் மேற்கொள்ளபட்டு வரும் இயற்கை வளங்கள் அழிப்பு  நடவடிக்கைளை உடனுக்குடன் தடுக்கும் நடைமுறையை மேன்படுத்தி,மாநில அரசாங்கம் இயற்கை வளங்களை குறிப்பிடப்பட்ட மலை பகுதிகளில் மேற்கொள்ளப் படுகிற நடவடிக்கைகள் குறித்து பொது மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும்  எஸ்..முகம்மது இட்ரிஸ் கேட்டுக்கொண்டார்.


பட விளக்கம்


தீத்தி கேராவாங் பகுதியில் உள்ள மழையின் தோற்றம்


 எஸ்..முகம்மது இட்ரிஸ்









0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home