Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Tuesday, 5 January 2016

செய்தி : ஆர்.தசரதன்
ஜன       : 06.1.2016
பட்டர்வோர்த் 



பினாங்கு இந்து அறப்பணிய வாரிய மீது போலீஸ் புகார் ஆதரமற்றது 

இயக்குனர் ராமச்சந்திரன் பதில் அடி 


பத்து காவன் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய விவகாரம் தொடர்பாக அந்த ஆலய நிர்வாகம்,பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி போலீஸ் புகார் செய்திருப்பதாக அந்த அறப்பணிய வாரியத்தின் இயக்குனர் எம்.இராமச்சந்திரன்,நேற்று நண்பகல் 12.00 மணியளவில் இங்குள்ள தேவான் மாரியம்மன் மண்டப அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் இந்த ஆலய  விவகாரத்தை பெரிதுபடுத்த நினைக்கவில்லை மாறாக,அறப்பணிய வாரியத்தின் மீது ஆதாரமற்ற குற்ற சாட்டினையும்  பொய்யான போலீஸ்  புகரையும் செய்துள்ள  ஆலய தலைவர் கோ.மனோகரன் மற்றும் ஆலய அரங்காவளர்  மு.வீ.மதியழகன் மற்றும் என்னய்யா 33 பேரின்  நடவடிக்கை குறித்தும்,அறப்பணி வாரியத்தின்   நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதின் பேரில் தாம் மௌனம் கலைந்திருப்பதாக அவர் சொன்னார்.

ஆலய நிர்வாகம்  செய்திருக்கும் போலீஸ் புகாரில் அரப்பணி வாரியத்தின் செயலாளர் ஆர்.சுரேந்திரன் ஆலய சாவியை 27.12.2015 ஆம் நாள் ஒப்படைப்பதாக கூறியிருந்தது  பொய்யான தகவல் என்றும்,தமது செயாலாளர் ஆலய நிர்வாகதிடம் அந்த வாக்குறுதி வழங்க வில்லை என்றும் 
எம்.இராமசந்திரன் தெளிவு படுத்தினார். 

போலீஸ் புகாரில் அம்மனுக்கு போடபட்டிருந்த நகைகளை அரப்பணி வாரியதிடம் யார் கொடுத்தது,காணமல் போல உடமைகளை யார் கணக்கு எடுத்தது,அறப்பணி வாரியத்தை சேர்த்த யார்?இவையனைத்தையும் பெற்றுக்கொண்டார் என்பதை ஆலயம்  நிர்வாகம் கூற வேண்டும் என்றும் எம்.இராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே 30 ஆயிரம் வெள்ளியை அறப்பணி வாரியம் திருவிழாவை முன்னிட்டு வசூல் செய்திருப்பதாக கூறப்பட்ட போலீஸ்  புகாரில்,யார் அந்த பணத்தை வசூல் செய்தது,நிதி கொடுத்த நபர்கள் யார்?போன்ற  விபரத்தை ஆலய நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்றும்  எம்.இராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே மற்றொரு இணைக்க பட்ட போலீஸ் புகாரில் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்துக்கு 86 .000 ஆயிரம் வெள்ளியை அறப்பணி வாரியம் வசூல் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த வாரிய இயக்குனர் எம்.இராமச்சந்திரன்,இந்த ஆலய திருப்பணி வேலைகளை தனியார் நிறுவனம் ஒன்று முழுவதும் பொறுப்பேற்று ஆலய திருப்பணியை செய்து வருவதுடன்  அந்த தனியார் நிறுவனம்   எந்த வித பண  வசூலையும் மற்றவர்களிடம் வசூலிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுக்கு இணங்க அறப்பணி வாரியம்  எந்த வித நிதி வசூளையும் வாரியம் மேற்கொள்ள வில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.


மற்றொரு விவகாரத்தில் அறப்பணி வாரியம் பொறுப்பேற்ற காலத்தில் 20 பிரேதங்கள் இடுகாட்டில் புதைக்கபட்டுள்ளதாக கூறியிருக்கும் போலீஸ் புகாரும் அடிப்படையற்றது  எப்போது அந்த பிரேதங்கள் தகனம் செய்யபட்டன,நல்லடக்கத்திற்காக யாரிடம் பணம் செலுத்தபட்டது,யார் அதை வசூளித்தது போன்ற விவரங்களையும் ஆலயநிர்வாகம்  வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  ஆதரமிள்ளாது பொய்யான போலீஸ் புகாரை செய்திருக்கும் ஆலய தலைவர் கோ.மனோகரன்,மு.வீ.மதியழகன் மற்று ஏனைய 33 பேர்களின் மீது தகுந்த  விசாரணையை போலீசார் மேற்கொள்ளுவார்கள்என்றும் அவர்  நம்பிக்கை தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் எம்.இராமச்சந்திரன் அவர்களுடன் அறப்பணி வாரிய செயலாளர் ஆர்.சுரேந்திரன்,வாரிய திட்டமிடல் பிரிவு தலைவர் எஸ்.நடராஜா மற்றும் பினாங்கு மாநில குடும்ப உரிமைக்  குழு அதிகரி கே.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


பட விளக்கம் 

 பினாங்கு இந்து அறப்பணிய வாரிய இயக்குனர் எம்.இராமச்சந்திரன்,
மற்றும் செயலாளர் ஆர்.சுரேந்திரன்









0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home