ஆட்டோமோபில் தொழில் துறையில் இந்தியர்கள் ஈடுபட அறியுறுத்து
மேலாளர் ரமேஷ் சந்திரன் அறைகூவல்
பாயான் லெப்பாஸ்
ஆர்.தசரதன்
இந்தியர்கள் ஆட்டோமோபில் துறையில் ஈடுபாடு காட்டுவது அவசியம் என்று இயோன் ஓட்டோ மார்ட் கார் நிறுவன மேலாளர் ரமேஷ் சந்திரன் வேண்டுக்கோள் விடுத்தார்.எதிர்காலத்தில் ஓட்டமோபில் தொழில் துறை அதிக மேம்பாடும்,வளர்ச்சியும் வரவேற்பும் பெரும் என்பதால் அதனை இந்தியர்கள் நன்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுடன் அதன் சம்பந்தமான பட்டப்படிப்பில் இந்தியழமாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நாட்டைப் பொருத்தவரை அதிகமான கார் தொழிர்சாலைகள் வெளிநாட்டினரால் முதலீடு செய்யப்படுள்ளது என்றும் ஜப்பான் நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி ரக கார் மலேசியர்கள் விரும்பும் கார் என்பதுடன்,அதில் நாடு தழுவிய நிலையில் ஹாய் கோம் நிறுவன அக காரின் வெளியீட்டு நிருவனமாக திகழ்ந்து வருதாகவும அவர் கூறினார்.
இந்தியர்கள் மற்ற இனங்களை காட்டிலும் மிகுந்து குறைந்த நிலையில் கார் சம்பந்தமான தொழில்துறைகளில் ஈடுபாடு காட்டுவது குறைந்து வருவதை வருத்தத்துடன் கூறிய அவர்,கொஞ்சம் அக்கறையும் அத்தொழில் நுட்பத்தை கற்றுக்கொண்டால் வளமான வழக்கை என்பது நிச்சயம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆட்டோமோபைல் துறை என்பது ஒரு சிறந்த தொழில் துறை அதில் பலமடங்கு பிரிவுகள் இருப்பதால்.இந்திய மாணவர்கள் அத்துறையில் மிளிர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.திறன் பயிற்சிகளை கொண்டுள்ள ஒருவருக்கு கார் தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் செயல்படும் கார் பட்டறைகள் நல்ல சம்பளம் வழங்குவதுடன்,பல சலுகைகளையும் வழங்குகின்றன அதை நமது இந்திய சமுதாய மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உதவு முன்வர வேண்டும் என்றும் 20 ஆண்டுகாலமாக ஆட்டோமோபைல் தொழில் துறையில் பரந்த அனுபம் பெற்ற ரமேஷ் சந்திரன் மலேசிய நண்பனிடம் கூறினார்.
அக்கால கார் பழுது பார்ப்பு துறைக்கும் இப்பொழுது மேம்பாடு கண்டுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியானது நிபுணத்துவ நிலையில் கார்கள் பழுதுகளை மின்னியல் முறையிலான முறைக்கு மாற்றம் கண்டுள்ளது என்பதால் அந்த புதிய துறையில் நிபுணத்தும் பெற்றால் மட்டுமே கார்களை பழுது கண்டுபிடித்து பழத்துப்பார்க்க முடியும் என்ற நிலை உருகியிருப்பதாக அவர் விவரித்தார்.
நேற்று இங்குள்ள பாயான் லெப்பாஸ் கார் தொழில் பேட்டை பகுதியில் மிட்சுபிஷி ரக கார்களை ஓட்டி பார்க்கும் நிகழ்வில் கலந்துக் கொண்ட அவர் தங்களின் நிறுவனம் வழங்கும் வேலை வாய்ப்பு,தங்கள் நிறுவனம் கொண்டுள்ள கார்களுக்கான பழுது பார்ப்பு சேவைகள்,வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சலுகைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கையில் அவர் தமது கருத்துக்களை இந்திய சமூக இளைஞர்கள் தேர்வு செய்ய கார் தொழில் நுட்பத்துறை கை கொடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நாட்டின் மோட்டோர் ஸ்போர்ட் கார் பந்தய துறையில் ஜொலிக்கும் பெண் வீரரும் மிட்சுபிஷி கார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தூதர் லியோனா சின்,மிட்சுபிஷி கார் நிறுவன வாடிக்கையாளர் சேவை தலைமை மேலாளர் ஜிவேந்திரன் சிவா ஆகியோர் உடன் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.கார் பற்றிய துறைதனில்ல ஈடுபாடு காண நினைக்கும் இந்திய இளைஞர்கள் ஆலோசணைகள் பெற ரமேஷ் சந்திரன் அலுவலக தொலைபேசி என் 04-6421988 என்ற என்னில் தொடர்புக் கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home