பினாங்கு முத்தமிழ் சங்க ஏற்பாட்டில் கின்னஸ் சாதனை புரிந்த நடனமணிகளுக்கு பாராட்டு விழா .
ஜூலை 01.07.2017
பட்டர்வொர்த்
ஆர்.தசரதன்
ஜூலை 01.07.2017
பட்டர்வொர்த்
ஆர்.தசரதன்
அண்மையில் தமிழகம் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த உலக பரதநாட்டிய சாதனை நிகழ்ச்சியில் பினாங்கு மாநில முத்தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த கோகிலா நடனக் குழுவைச் சேர்ந்த நடனமணிகள் சாதனை புரிந்ததுடன் கின்னஸ் சாதனை விருதையும் பெற்றனர்
அவர்களை பாராட்டும் இகழ்வு ஒன்று அண்மையில் இங்கு செபராங் ஜாயாவில் அமைந்துள்ள உணவாக ஒன்றில் சிறப்புடன் நடைபெற்றது
பினாங்கு மாநிலத்தில் இந்தியக் கலைகளை பாதுக்காத்தும் அதனை அழியாமல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு குறிப்பாக அக்கலைகள் இளைய தலைமுறையினர் பயின்றுவித்து வரும் பலம் பெரும் இயக்கமாக திகழும் பினாங்கு முத்தமிழ் சங்கம் இந்த பாரட்டு விழாவினை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வுக்கு சங்கத்தின் தலைவர் கா.வு இளங்கோவன் அவர்கள் தலைமையேற்ற வேலையில்,உடன் இந்நிகழ்வில் சமூக சேவையாளர் டத்தோ நவநீதன் அவர்கள் சிறப்பு பிரமுகரான கலந்துக்க கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய பினாங்கு மாநில முத்தமிழ்ச் சங்க தலைவர் முத்தமிழ் மணி கா.வு.இளங்கொவன் அவர்கள், இந்தியக் கலைகள் இந்த மண்ணை விட்டு மறையாமல் காப்பது அவசியம் என்றும்,இளைய தலைமுறையினர் அக்கலைகளை காற்றுக்க்கொள்வதன் மூலமாக தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியும் என்பதுடன் அக்கலைகளை அழியாமல் காக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வை தொடக்கி வைக்க வந்திருந்த டத்தோ நவநீதன் அவர்கள் தமதுரையில் கின்னஸ் சாதனை புரிந்துள்ள பினாங்கு முத்தமிழ் சங்கத்தை சேர்ந்த நடனமணிகள் பினாங்கு மாநிலத்துக்கு மட்டும்மின்றி மலேசிய திருநாட்டுக்கு உயரிய கௌரவித்தை ஏற்படுத்தி தந்துள்ளதை அவர் வெகுவாக பாரட்டினார்.
நிகழ்வில் இறுதியில் கின்னஸ் சாதனை புரிந்த நடனமணிகளான தே.யோகவர்தினி,சா.மிஷாந்தினி இ.திவ்யதர்ஷினி ஆகியோருக்கு கின்னஸ் புத்தகத்தின் நற்சான்றிதழ்,முதுதமிழ் சங்கத்தில் சார்பில் நற்சான்றிதழ் கொடுக்கப்பட்டது மாலை அணிவித்து அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக டாக்டர் குணா,பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக தலைவர் தமிழ் மறவன் பாலன்,நடன மாஸ்டர் கோகிலா உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home