செய்தி : ஆர்.தசரதன்
மே : 30.05.2017
ஜூரு
ஜூரு தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழா கோலாகல திருநாளில் அனைவரும் சங்கமம்
பள்ளி மேன்மைக்கு ஜூரு வாழ் பொது மக்களின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன் டத்தோ க.அன்பழகன்
ஜூரு தமிழ்ப்பள்ளியின் நுற்றாண்டுவிழா கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.இவ்விழாவினை பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக் குழு தலைவர் முனைவர் டத்தோ க.அன்பழகன் தொடக்கி வைத்தார்.ஒரு கூட்டு பறவைகளாக தாய் வீட்டீல் சங்கமிக்கும் இடமாக சனிக்கிழமை அன்று நடந்த கொண்டாட்டத்தில் ஜூரு தமிழ்ப்பள்ளி திருளால் கோலம் பூண்டது.பல ஆண்டுகளாக பல்வேறு பகுதியில் இடம்மாறி சென்று மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற உன்னத நோக்கில் அனைவரும் வருகையளித்து நூற்றாண்டு விழாவினை சிறப்பித்தனர்.இவ்விழாவில் பள்ளியின் பிதா மகன்களாக கருதப்படும் முன்னாள் தலைமை ஆசிரியர்களான கு.மோகன் மற்றும் டேவிட் பாபு அவர்களுக்கு பொன்னாடை போற்றி மலர் மாலை அணிவித்து ஏற்பாட்டுக் குழுவினர் சிறப்பு செய்தனர்.
நூற்றாண்டுகளை கடந்து பினாங்கு மாநிலத்தில் தன்னிகற்ற நிலையில் செழுமையுடன் வாழ்த்து வரும் ஜூரு தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு கை கொடுத்த ஜூரு வாழ் பொது மக்களுக்கு பாராட்டையும் நன்றியையும் முனைவர் அன்பழகன் தெரிவித்துக் கொண்டதுடன்.பள்ளியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய முன்னாள் இந்நாள் ஆசிரியர்களுக்கும் அவர் தமது நன்றியை கூறினார்.பினாங்கு மாநிலத்தில் பல சிறப்பு அம்சங்களை கொண்ட பள்ளியாக ஜூரு தமிழ்ப்பள்ளி திகழ்வதுடன்,மாநில அரசாங்கத்தின் சிறப்பு நிதி ஒதுக்கீடும் உதவிகளும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பள்ளியின் வாரிய குழு தலைவர் டாக்டர் சரவணன் தமது வரவேற்புரையில் குறிப்பிடுகையில்,நூற்றாண்டு காலமாக ஒரே இடத்தில் செயல்படும் பள்ளியாக ஜூரு தமிழ்ப்பள்ளி விளங்குவது சாதாரண விஷயம் இல்லை என்றும் பள்ளியின் முன்னேற்றத்துக்கு அர்பணிப்புகளை செய்த அனைவரையும் எண்ணுவது சிறப்புடைத்து என்றும் குறிப்பிட்டார்.
இந்நூற்றாண்டு விழா சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம்,பள்ளி வாரிய குழுவினர்,பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர்,பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள்,பள்ளியின் தற்போதைய ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் த.முனியாண்டி தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.4மாடி கொண்ட கட்டிடமாக ஜூரு தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியை மேலும் தூரிதப்படுத்த மாநில அரசாங்கம் ஒரு நிலத்தை ஜூரு தமிழ்ப்பள்ளிக்கு அவனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அவரின் உரையில் டத்தோ க. அன்பழகன் அவர்களின் கவனத்திற்கு அவர் முன் வைத்தார்.
நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொண்ட பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் டேவிட் பாபு ,தமது நினைவலைகளை மலேசிய நண்பனிடம் பகிர்ந்து கொண்டதில் பள்ளி கடும் புயலினால் பாதிக்கப்பட்டது விழுந்த நிலையில் அதற்க்கு மாற்று கட்டிடம் வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் முடிவு செய்த வேளையில்,ஜூரு தோட்டத்தில் பிறந்து வளர்ந்த அச்சமயத்தில் காட்டிட நிர்மாணிப்பாளர் இருந்த மா .ராஜகோபால் அவர்கள் ஜூரு பள்ளியின் புதிய பரிணாம வளர்ச்சி தோற்றுனராக திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.
நுற்றாண்டு விழாவில் முன்னாள் மாணவர்களின் சிறப்பு வருகை நூற்றாண்டு விழாவுக்கு பெருமை சேர்த்து மட்டும் அல்லாமல் கொண்டாட்டத்திற்கு உறு துணையாக இருந்து செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.என்றும் நீங்கா நினைவுகளுடன் பழைய நினைவுகளை வரவழைத்து அக்கால பள்ளி பருவ நினைவலைகள் மனதில் நிழலாடி அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு தங்களுக்கு கல்வி கண்ணை திறந்த ஆசிரியர்கள் நூற்றாண்டு விழாவில் வருகையால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நூற்றாண்டு விழாவில் முனைவர் டத்தோ க. அன்பழகன்,ஜூரு தமிழ்ப்பள்ளி வாரிய குழு தலைவர் டாக்டர் பெ.சரவணக்குமாரன்,வாரிய ஆலோசகர் மா.ராஜகோபால் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வீ.சந்திரசேகரன்,ஜூரு தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் த.முனியாண்டி ஷான் பூர்ணம் மெட்டல் நிறுவன உரிமையாளர் எஸ்.செல்வகுமாரன்,பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் இயக்குனர் திருமதி.சகுந்தலா,சக்குரா நிறுவனர் எம்.சந்தனதாஸ்,முன்னால் தலைமையாசிரியர்கள் கு.மோகன்,டேவிட் பாபு,திருமதி தமிழ்ச்செல்வி,போத்தா ராஜு,ஜெயவேலு,என்.வீராசாமி,ஜாவி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சௌந்தராஜன்,சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் நாதன், மற்றும் அழைக்கப்பட்ட பிராமுகர்கள் பலரும் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பட விளக்கம்
ஜூரு தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை தொடக்கி வைக்கும் டத்தோ க.அன்பழகன்
சிறப்பிக்கப்பட்ட முன்னால் ஜூரு தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் கு.மோகன் மற்றும் டேவிட் பாபு அவர்கள்
டத்தோ க.அன்பழகன் அவர்களுக்கு பள்ளி வாரிய தலைவர் .சரவணகுமார் நினைவு சின்னம் வழங்கிய போது
பள்ளி மாணவர்களின் கலை படைப்பு
முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களை குழுப் படம்
பினாங்கு மாநில தமிழ் பிரிவு கல்வி இயக்குனர் திருமதி சகுந்தலா நினைவு சின்னம் பெறுகிறார்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home