இந்திய மாணவர்களிடையே தமிழ் மொழியை வளர்க்க உதவிய கவிப்படும் தென்றல்
பினாங்கு இந்திய
அண்மையில் இங்கிருக்கும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்களின் கூட்டு முயற்சியில் 6ஆம் ஆண்டாக வழி நடத்தப்பட்ட ‘கவிபாடும் தென்றல்' என்ற நிகழ்ச்சிக்கு சிறப்புப் பிரமுகராக புலவேந்திரன்
வருகையளித்திருந்தபோது, இந்திய மாணவர்கள் சமுதாய நலன் கருதி, பல்வேறான துறைகளில் சிறப்பான ஆற்றலை புலப்படுத்துவது அவசியமென்று வேண்டுகோள் விடுத்தார்.
பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழ் மாணவர்கள் தமிழ்மொழி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டு, தமிழுக்கு தொண்டாற்றுகின்ற அதே வேளையில் இனப் பற்றுடன் செயல்பட்டு, மொழி வளர்ச்சிக்கு பங்காற்றும் விதமாக அர்ப்பண உணர்வு கொண்டிருக்க வேண்டுமென்று, அவர் கேட்டுக் கொண்டார்.
இந்திய மாணவ்ர்களிடம் குடி கொண்டிருக்கும் அபாரத் திறனை வெளிக் கொணரும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த ‘கவிபாடும் தென்றல்’ நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி, புதிர்ப் போட்டி, சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி, ஆகிய ஐந்திறன் கொண்ட போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பினாங்கு மாநிலத்துடன், கெடா மற்றும் பேராக் மாநிலங்களைச்
சேர்ந்த தமிழ் மற்றும் தேசிய இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று தங்களின் ஆற்றலை சிறப்பாக வெளிப்படுத்தி பரிசுகளை வாகை சூடிய பட்சத்தில் வெற்றியாளர்களுக்கு டத்தோ [உலவேந்திரனும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் மேம்பாட்டுப் பிரிவின் துணைப் பதிவதிகாரியும் இணைந்து, பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினர்.
,
——————
1) ‘கவி பாடும் தென்றல்’ போட்டி நிகழ்ச்சியினை டத்தோ புலவேந்திரனுடன் அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சுதர்சன் சந்திரன் திறந்து வைப்பதைக் காணலாம்.
2) மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்
மாணவர்களால் நடத்தப்பட்ட ‘கவிபாடும் தென்றல்' நிகழ்ச்சியில் வாகை சூடிய மணவர்களுக்கு டத்தோ புலவேந்திரன் பரிசளிக்கும் காட்சி.
------------------------------ --------------------------
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home