Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Wednesday 7 October 2009

தமிழ் நாட்டிற்க்காண முதல் பயணம்





அன்புள்ள நண்பர்களே வணக்கம்.

அண்மையில் எல்லாம் வல்ல முருகன் திருவருளால் தமிழ் நாட்டிற்க்கு சுற்றுலா ஒன்றில் கலந்துக் கொள்ள மலேசிய இந்து இளைஞர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.இப்பயணத்தில் 12 பேர் கொண்ட குழுவிற்க்கு பேரவையின் தேசிய தலைவர் கா.ராச்செல்வம் தலைமை ஏற்றார்.

24.7.2009 காலை 7.30 கோலாலம்பூர் அனைத்துலக நிலையத்திலிருந்து புரப்பட்ட நாங்கள் 3.45 மணி இடைவேளைக்கு பிறகு திருச்சிரபள்ளி விமான நிலையத்தில் நாங்கள் பயணித்த ஏர் ஏசிய விமானம் தரையிரங்கியது.எனக்கு தமிழ் நாட்டிற்க்காண முதல் பயணம் என்பதுடன், எங்களின் பயணக் குழுவில் சிலருக்கு அது புது அனுபவத்தை தந்தது.

இப்பயணத்தில் திருச்சி,மதுரை,பழநி,பிள்ளையார் பட்டி,தஞ்ஞாவூர்,
அகிய இடங்களுக்கு   நாங்கள் பயணபட்டோம்.

எங்களின் பயணத்தில் நாங்கள் தரிசித்த முதல் ஆலயமாக ஸ்ரீ ரங்கம் ஆலயம் அமைந்தது, அதனை தொடர்ந்து சமையபுர மாரியம்மனை தரிசித்தோம் அதன் பிறகு நாங்கள் பழநீக்கு பயணமானோம்.
 பழநீ முருகனின் மூன்றாம் படை வீடாகிய  பழநீக்கு செல்லும் வழியில் பசுமையான விலை நிலங்களை காண நேரிட்டது.சாலையில் இருமருங்கிலும் தென்னை தோப்புகள் காட்சியளித்தது,பசுமை எழில் கொஞ்சும் வண்னம் இயற்கை வனப்பு கொண்டது பழநீ. நாங்கள் பழநீயை அடைந்த போது இரவாகிவிட்டதால் ஆலயத்திற்க்கு செல்லவில்லை.மலையின் அடிவாரத்தில்  உள்ள தங்கும் விடுதியில் அணைவரும் தங்கினோம்.

காலையில் முருக பெருமானை தரிசணை செய்ய அன்றைய இரவே ஆயுத்தமானோம்.நாளைய தரிசணத்திற்கான ஏற்பாட்டிணை எங்களுக்கு உதவியாக பழநீ திருதளத்தின் அனுமதி பெற்ற ஆடவர் ஒருவர் தேவையான ஏற்பாட்டை செய்தார்.

மறுதினம் காலையில் எங்கள் குழுவில் இருந்த 2பெண்கள் மற்றும் 6 ஆடவர்கள் பழநீ முருகனை தரிசிக்க புரபட்டோம்.எனது வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளை தங்கிய இந்த தரிசணம் அடங்கும் என்று, இன்று எனது வாழ்வில் நடந்த மாற்றத்தை என்னி பூரிப்பு அடைகிறேன்.

எனது வாழ்வில் எனக்கு தெரிந்து முடிக் காணக்கை செய்த்தே இல்லை என்னை அறியாமல் அந்த பழநீ ஆண்டவனுக்கு முடியை காணிக்கை செய்தேன்.               நாதஸ்வர மேல தாளங்கள் முழங்க பழநீ மலையை நோக்கி நாங்கள் புரப்பட்டோம்.

எங்களின் ஏற்பாட்டாளர் நாங்கள் சிறப்பு தரிசணம் செய்ய போதிய ஏற்பாட்டை செய்திருந்தார்.காலையில் சென்றதால் ஆலயத்தில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.சிறிது நேரத்திற்க்கு  பிறகு பழநீ முருகனை அருகில்   தரிசித்த   அந்தக் கண் கொள்ளா காட்சியை இன்று நிணைத்தாலும் மனம் ஏங்குகிறது.

முருகனை அருகில் நின்று தரிசிக்க அவன் திருஉருவத்தை காண கண் கோடி வேண்டும்.தரிசணம் முடிந்த பிறகு ஆலய வாலகத்தை நாங்கள் சூற்றி வலம் வந்தோம்.அதனுடன் பஞ்ஞாமிருதம்,திருநீறு மற்றும் இதர பொருட்களை    
அங்கு இருந்த கடைகளில்  நாங்கள் வாங்கினோம்.

பழநீ முரிகனை தரிசித்த பிறகு, எங்களின் பயணக்குழு தமிழகத்தின் நெட்களஞ்ஜியமான தஞ்ஜாவூரை நோக்கி புரப்பட்டது.இரண்டு மணி இடைவேளைக்கு பிறகு தஞ்ஜாவூரை அடைந்தோம், அங்கு உள்ள உணவகம் ஒன்றில் நாங்கள் மதிய உணவு உட்கோண்டோம்.தொடரும்.........

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home