அம்மா பஹவான் ஸ்ரீமூர்த்தி
புருஷோத்தம பரமாத்மா
ஸ்ரீ பஹவதி சமேத
ஸ்ரீ பஹவதே நமஹ
எனது சேவகர்கள் மனித குலத்தின் மாற்றத்திற்கு மிகவும் ஆர்வத்துடன் செயல்புரிபவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். கண்களைத் திறந்து உங்களை சுற்றியுள்ள உலகைக் கூர்ந்து கவனியுங்கள். எங்கு பார்த்தாலும் துயரமும் கண்ணீரும் தானே… இந்த உலகம் சீராக இல்லை. இந்த உலகத்திற்கு ஏதோ ஒரு வழியில் உதவ வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவரிலும் தவறாமல் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட தவிப்பு உங்களுக்குள் இருந்தால் என்னுடைய சக்தியை உங்களுக்குள் பாயச்செய்வேன்!
மாற்றமடைவதற்கு உலகம் அனைத்தும் இங்கு வரமுடியாதல்லவா… அதற்காகவே, இந்த சக்தியைப் பெற்று நீங்களே மக்களிடம் செல்ல வேண்டும். தீட்ஷை சக்தி மூலம் மற்றவர்களை மாற்றக்கூடிய சக்தியை அறுபத்து நான்காயிரம் பேருக்கு வழங்க இருக்கிறேன்! நீங்கள் வளர்ச்சி அடைந்தவுடன் அந்த சக்தியை உங்களுக்கு வழங்குவேன். அதன் மூலம் நீங்கள் இந்த உலகத்தை மாற்றுவீர்கள்!
இது நடைபெறுவதற்கு “இவ்வுலகம் மாறவேண்டும்” என்ற தவிப்பு உங்களுக்கு இருக்க வேண்டும். அது போன்ற கருணை இருந்தால் மட்டுமே இந்த தீட்ஷை சக்தி உங்களுள் பரிபூரணமாக நிலைத்து நிற்கும்!
அது போன்ற சேவகர்கள் மூலம், மனிதர்களுள் தவறாமல் மாற்றம் நிகழும்! உங்களைச் சுற்றி எத்தனையோ பேர் இதற்கு நேரடி சாட்சிகள்… மனிதன் மனிதனாக இல்லாமல், தெய்வீகத்தை வளர்த்துக் கொண்டால் ஒழிய, இவ்வுலகத்திற்கு விமோக்ஷனம் இல்லை. இதைத்தானே ரமண மகரிஷி, பரமஹம்சர், மகாத்மா காந்தி போன்றோர் காட்டினார்கள்.
ஒரு முறை உங்களுடைய நாட்டைப் பாருங்கள். இந்த நாட்டிற்கு ஏதாவது ஒரு வகையிலாவது உதவி புரிய முடிந்தால் செய்யுங்கள். இந்த நாட்டை நாம் மாற்றமுடியும்… மாற்றமுடியும் என்பதை செயல்முறையில் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.ஸ்வர்ணயுகம்உதயமாகவேண்டும்… உதயமாகிக்கொண்டிருக்கிறது!!!
- ஸ்ரீ பகவான் -
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home