Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Monday, 17 August 2009

இருதரப்பு ஒத்துழைப்பு கம்போங் புவா பலாவை காக்கட்டும்





பினாங்கு மாநிலத்தில் ஒரு பாரம்பரிய கிராமத்தை பாதுகாக்க ஒரு கிராமத்து மக்களே தொடுத்த அரப்போராட்டம் இது.கம்போங் புவா பலாவை பிரச்சணை ஒரு இனத்தின் பிரச்சணை என்று ஒதுங்கிக் கொன்ட மாநில அரசாங்கம், அம்மாநில பொதுத் தேர்தல் வெற்றிக்கு கிடைத்த தர்மகாரியமா இது?கிராமத்தை 1.09.2009க்குள் காலி செய்ய வேண்டும் என்ற கெடு.

கிராமத்தை பாதுகாக்க எத்தனையோ அரப்போராட்டகளை சந்தித்த இந்த கிராமத்து
மக்கள் கொண்ட சோதணைகள் கணக்கில் அடங்கா.காலத்தின் கட்டாயம்,இரு தரப்பையும் அழைத்து பேச வேண்டிய கடப்பாடு பினாங்கு மாநில அரசுக்கு தேவை.நாமும் அதை நாமும் வரவேற்போம்.

பினாங்கு மாநிலத்தை பொருத்தவரை சீனர்களுக்கும்,மலாய்காரர்களுக்கும் பாரம்பரிய கிராமங்களை மாநில அரசாங்கம் ஒதுக்கிது போல் இந்தியர்ளுக்கு கம்போங் புவா பலாவை
இந்தியர்களான தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை நியமானதே.கம்போங் புவா பலா வீட்டுன் உரிமையாளர்களை அழைத்து சுமுகமான தீர்வை கொண்டா ஒழிய அங்கு எதிர்வரும் 1.09.2009 க்குள் நிரந்தர தீர்வு பிரக்கும் என்று நம்பலாம்.

வீடமைப்பு நிருவனத்திர்க்கு சாதகமாக உயர்நீதிமன்றம் வீட்டுன் உரிமையாளர்கள்
காலி செய்ய உத்தரவு விடுத்ததை தொடர்ந்து கடந்த வாரம் சனிக்கிழமை வீடுகளை உடைக்க வந்த வீடமைப்பு நிருவனம்,தற்காலிகமாக ஒத்தி வைத்தது என்பது குறிப்பிடதக்கது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home