101 குழந்தைகளுக்கு காதணி விழா
தமிழரின் பெருமையை பறைசாற்றும் உன்னத கலாச்சாரங்களில் ஒன்றான காதணி விழாவினை,அண்மையில் இங்குள்ள தண்டாயுதபாணி நாட்டு கோட்டை செட்டியார் ஆலயத்தில் 101 குழந்தைகளுக்கு இனிதே நடைபெற்றது .
தமிழர் பண்பாடுகளில் வீரத்தின் மரபினை மெய்பிக்கும் இந்த உன்னத கலாச்சாரம் கலா ஓட்டத்தில் தொய்வு கண்டுவிட்ட நிலையில் பினாங்கு மாநில இந்து இளஞர் பேரவை அதற்கு புத்துயிர் அளிக்கும் விதமாக இங்குள்ள 101 குழந்தைகளுக்கு அதனை இலவசமாக நடத்தி சாதனை புரிந்தனர் .
இந்த இலவச காதணி விழாவுக்கு மாநிலத்தில் ஆதரவற்ற குழந்தைகளும்,வசதி அற்ற இந்திய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .
இந்த நிகழ்வே மாநில இந்து இளைஞர் பேரவை தலைவர் ஆர்.ரமணி அவர்களின் தலைமையில் நடந்ததுடன்,இந்த நிகழ்ச்சின் ஏற்பட்டு குழுவின் தலைவராக சூரியாகுமார் செயல் ஆற்றினார் .
இந்த விசேச நிகழ்வுக்கு மாநில கேரகன் கட்சி சார்பில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கோ கலந்து கொண்ட வேளையில்,மலேசியா இந்து இளைஞர் பேரவை தலைவர் கா.ராசசெல்வம், மாநில மா இ கா தொடர்புக்குழு தலைவர் டத்தோ பி.கே சுப்பையா,இளைஞர் பிரிவு தலைவர் தினகரன் , நாட்டு கோட்டை செட்டியார் ஆலய அறங்காவலர் டத்தோ ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
101 குழந்தைகள் ஒரே இடத்தில காதணி விழா நடைபெறுவது முதல் தடவை என்பாதல் அதிகமான் மக்கள் இந்த வைபவத்தை காண வந்திருந்தனர்.மயில் ஆட்டம் ,பொய்கள் குதிரை,உருமிமேளம் வருகைபுரிந்த வருகையாளர்களை மிகவம் கவர்திருந்தது.
காதணி விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home