Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday, 4 March 2011

பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் 50 ஆம் ஆண்டு பொன் விழா

பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் 50 ஆம் ஆண்டு பொன் விழா அண்மையில் இங்குள்ள சிட்டி டெல் தங்கும் விடுதியில் மிக விமரிசையாக நடந்தது.

இந்த விழாவை மனித வள அமைச்சருமான மாண்புமிகு டாத்தோ எஸ்.சுப்ரமணியம் அவர்கள் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.இந்த வரலாற்று நிகழ்வில் மாநில பேரவையின் முனோடிகளான சிங்கபூபுருக்கான முன்னால் தூதர் கே.கேசவபாணி,மாநில பேரவையின் முதல் தலைவர் குமரகுரு,முன்னால் தலைவர் டாத்தோ சிதம்பரம்,பி.ராஜந்திரன்,ஆர்.ரமணி இவர்களுடன் டாத்தோ வைதளிங்கம்,முதல் மாநில பேரவையின் செயலாளர் பெரியவர் ராமச்சந்திரன்,தேசிய பேரவை முன்னால் தலைவர்கள் ரசசெல்வம் மற்றும் திரளான பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பொன் விளைவை முன்னிட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடு கண்டது.இந்த நிகழ்வின் சிறப்பு அங்கமாக 50 ஆம் ஆண்டை நினைவு கொள்ளும் விதத்தில் தபால் தலையும்,மாநில தலைவர்கள் அடங்கிய போஸ்ட் கார்டும் சிறப்பாக வெளியிட்டு மாநில பேரவையின் தலைவர்களுக்கு மரியாதையை செய்யபட்டுது.

இரவு விருந்துடன் கூடிய நிகழ்வாக அமைந்த இந்த பொன் விழாவில் சிறப்பு  அங்கமாக  விருதுகளும்  வழங்கி சேவை செய்தவர்களுக்கு பாரட்ட பட்டனர்.முதல் விருதாக ரத்னா ஸ்ரீ விருது கே.கேசவபணிக்கும்,டாத்தோ சிதம்பரம் அவர்களுக்கும் வழங்க பட்டன .

மற்ற சிறப்பு விருதான இளைஞர் திலகம் விருது மாநில பேரவையின் ஆலோசகர் எம்.பார்த்திபன் அவர்களுக்கும்,முன்னால் மாநில பேரவை தலைவர் ஆர்.ரமணி அவர்களுக்கும்,போக்காக் மச்சாங் இந்து இளைஞர் முன்னால் தலைவர் சுப்ரமணியம் அவர்களுக்கும் வழங்க பட்டது.

மற்ற சிறப்பு விருதான இளைஞர் சேகவர் விருது சமுக பணியாளர் சி.தி.ராமசாமிக்கும்,சமய பணியாளர் ராம,இந்து சபா செவையாளார் முனியாண்டி அவர்களுக்கும் வழங்க பட்டன.


 ரத்னா ஸ்ரீ கே.கேசவபாணி அவர்கள்
 ரத்னா ஸ்ரீ டத்தோ வீ.சிதம்பரம்
 இளைஞர் திலகம் ஆர்.ரமணி
 இளைஞர் திலகம் எம்.பார்த்திபன்
 இளைஞர் சேவகன் ஜகதிசன்
 இளைஞர் சேவகன் சுப்ரமணியம்

 இளைஞர் செகவன் பத்மா



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home