Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Thursday, 3 March 2011

111 குழந்தைகள் பங்கு கொண்ட காதணி விழா

பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை ஏற்பாட்டில் 111 குழந்தைகள் பங்கு பெற்ற காதணி விழா இங்குள்ள புக்கிட் தெங்க மங்கள நாயகி அம்மன் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.
இந்த தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டு விழா மாநில இந்து இளைஞர் பேரவையின் தலைவர் அ.சூரியாகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்த விழாவில் பத்து  காவான் நாடாளுமன்ற ஒருக்கிணைப்பாளர் அ.மோகன் அவர்கள் நிகழ்வை அதிகரபூர்வமாக தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அவர் தமது உரையில் மிகவும் சிறப்பாக இந்த காதணி விழாவை தமது பத்து  காவான் தொகுதியில் நடைபெற அவன செய்த மாநில இந்து இளைஞர் பேரவைக்கு தமது நன்றியை தெரிவித்து கொண்டதுடன்,இளைஞர் அமைப்புகள் இந்திய சமுதாயத்தின் பண்பாட்டு நிகழ்வுகளை பாதுகாத்து அதை இளைய சமூகத்தினர் பின்பற்றும் நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த வரலாற்று நிகழ்வில் பினாங்கு மாநில ம இ.காவின் துணை தலைவர் எல்.கிருஷ்ணன்.மாநில ம இ.காவில் இளைஞர் பகுதி தலைவர்.ஜெ.தினகரன்,மாநில இந்து இளைஞர் பேரவையின் முன்னால் தலைவர் ஆர்.ரமணி.மங்கள நாயகி அம்மன் அலையை தலைவர் சேகரன்,ஜலன் பாரு முனிஸ்வரர் ஆலய துணை தலைவர் வீரையா,மாநில இந்து இளைஞர் பேரவையின் முன்னால் உதவி தலைவர் ஜகாதிசன் உட்பட காதணி ளவில் குழந்தைகளின் பெற்றோர் என திரளானோர் கலந்து கொண்டனர்.

 ஜாவியை சேர்ந்த வின்சன் உஷாராணி குடும்பத்தினர்  தமது  1 முதல்  12 வதுடைய பிள்ளைகளை இலவசமாக நடைபெற்ற இந்த காதணி விழாவில் பங்கு பெற்றதுடன் தமது நன்றியை மாநில பேரவைக்கு தெரிவிப்பதாக கூறினார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அங்கமாக மயிலாட்டம்,உருமிமேளம்,பொய்கால் குதிரை மற்றும் கரகாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட வருகையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இந்த நிகழ்வு சமுதாயத்தில் ஒரு மற்றதையும் சமூக ஒற்றுமையும் இணைக்கும் அறிய முயற்சியாக இந்த காதணி விழா என்றைக்கும் பறைசாற்றும் என்பது திண்ணம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற 101  குழைந்தைகள் அடங்கிய ஓளி நாடவை இணையத்தில் கண்ட அமெரிக்க நிறுவனம் இந்த காதணி விழாவில் பங்கு பெற்ற குழந்தைகள் அணியும் தங்க தோடை இலவசமாக வழங்கி அதரவு வழங்கினர் என்பது குறிப்பிடதக்கது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home