Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Sunday, 19 April 2009

இல்லறத்தில் ஆன்மீகம்

இறையுணர்வு என்பதே அன்புவுணர்வுதான். அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்.
அன்பு என்பது கடவுளிடம் மட்டும் அன்றி கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் அன்பு செய்ய வேண்டும். அருள் நெறி என்பது அன்பு நெறியின் நீடிய தோன்றமாகும்.

எனவேதான் அருள் என்னும் அன்பு ஈன்று குழுவி என்கிறார் வள்ளுவர். உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துது இறைவனுக்கு ஆற்றும் தொண்டிற்கு சமமாகும். உயிர்களின் இதயக் கோயிலே இறைவன் வாழும் கலைக்கோயிலாகும். அருள் நெறி என்று உயிர்களுக்கு அன்பு செய்ய சமய வாழ்வு வாழ்கிறோம் எனில் அது சமுதாய வாழ்வுடன் இணைந்ததாக அமையவேண்டும். இந்த வகையில் இல்லறத்தில் என்றும் இறைவனை அடையலாம் என்பதை இந்து சமயம் காட்டுகிறது.

இல்லறத்தை நல்லறமாக மாற்றி வாழ வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை- என்கிறார் வள்ளுவர்

இல்வாழ்க்கையின் பண்பு அன்புடமை. பயன் அறனுடையமையாகும். மனைவி சுற்றம் என்று விரியும் அன்பிலே வாழும் ஒருவன் உலகனைத்தின் பாலும் விரிந்த அன்பு பூணும் மனப்பக்குவம் அடைகிறான். மனைவியும் அதே அன்புசால் மனப்பக்குவம் அடைகிறாள்.
உலகனைத்தையும் அன்புக்கண்களிலே காணும் இந்த விரிந்த மனோபக்குவம் அடைய இல்லறம் வழிகாட்டுகிறது. அன்பும், அறனும் இல்வாழ்க்கையினை சிறப்பாக்குகிறது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் -வள்ளுவர்.

இல்லறம் நடத்தியே இறைவனை அடைந்தாகச் சொல்லப்படும் நாயன்மார்களுடைய கதைகளிலும், ழ்வார் கதைகளிலும் தனை நாம் அறியலாம்.

"காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றி
ஓடே எடுத்தென்ன? உள்ளன்பில்லாதவர் ஓங்கு செல்ல
நாடேயிடை மருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர் பால்
வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுமே"

இங்கு இல்லறத்தானும் வீடுபேறு பெறமுடியுமென கூறப்படுகிறது.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்ததை ஒழித்துவிடின் -

இதைதான் சமயம் கூறுகிறது. உனக்கிட்ட கடமைகளை ஒழுங்காக செய். அதுவே உன்னை உயர்நிலையை அடையும் தகுதியை வளர்த்துக் கொடுக்கும்.

இந்து தர்மத்தின் முக்கிய நூலாக போற்றப்படுவது பகவத்கீதை. இந்த கீதையை உபதேசித்தவனும் கேட்டவனும் சந்யாசிகள் அல்லர். குடும்பவாழ்விலிருந்தோர்,
மன்னாளும் மன்னர்கள்.

கீதையிலே பரமாத்மா கிருஷ்ணன் சொல்கிறான் :

"அர்சுனா, மூன்று உலகங்களிலும் இனி மிஞ்சிற்கும் செயல்,செய்கை ஒன்றும் எனக்குக் கிடையாது. அடையத்தக்கது, அடையப்படாது என ஒரு பேறுமில்லை.
எனினும் நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் தொழில்
செய்யாது வாளாவிருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும், என் வழியையே பின் பற்றும்.
அதனால் இந்த உலகம் அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரணமாகாமல் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். ஓயாமல் தொழில் செய்பவன் சிறந்த கர்மயோகி. அவன் ஜிவாத்மாவை இடைவிடாது துதிக்கிறான். சம்சாரத்தை நேசிக்கிறான். குடும்பத்தை காக்கிறான். மனைவி, மக்களை காக்கிறான்.
சுற்றதாத்தாரை, அயலவரை போற்றுகிறான். எல்லாவற்றையும் துறந்து சென்றால் அவன் முத்திக்கு
தகுதியுடைவனாக மாட்டான். எல்லாவற்றையும் துறந்து செல்கிறவன் கடவுளுடைய இயற்கை
விதிகளை துறந்து செல்பவனாகிறான்...


இவ்வாறு நாம் பாக்கும் போது இல்வாழ்க்கையில் முற்று முழுதாக
விடின் இறைவனை அடையலாமா? என்ற கேள்வி எழும். வாழ்வில் பற்றை விலக்க
வேண்டுமே ஒழிய வேண்டியதில்லை.
'படகு தண்ணீரில் இருக்கலாம். தண்ணீர் படகினுள் இருக்ககூடாது'
என்று அருமையாக வழிகாட்டுகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

இல்லறத்துறவை காட்டிலும், உள்ளத்துறவு சதகோடி மடங்கு மேலானதாகும்.
இல்லாள் அகத்திருக்க இல்லாததது ஒன்றில்லை. கற்புடைய மனைவியை
காதலுற்று, அறம்பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கைகையாகும்.
கடவுள் அனைத்து உயிர்களிலும் இருக்கிறார். இல்வாழ்க்கையில் இருந்து கொண்டு உற்றார்,உறவினர், உலகத்தாருக்கும் உபசாரம் செய்து கொண்டு அறவழியில் இன்பங்களை அனுபவித்து ஆண்டவனை தொழுது அதனால் மனிதத் துன்பங்களில் இருந்து விடுபட்டு மேன்மையான வாழ்க்கை வாழ்வது மேலான வழியாகும்.

இதனை வள்ளுவப் பெருந்தகை அன்புடைமை, வாழ்க்கை துணைநலம், புதல்வரைப் பெறுதல், விருந்தோம்பல், இனியவை கூறல் என்ற அதிகாரங்களில் வாழ்வின் ஆன்மீக வழிகாட்டியில் காணலாம்.

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போ ஓய்ப் பெறுவதெவன் "

இல்லறத்தினை ஒழுங்காக நடத்துபவன் துறவறத்திற்கு போய் பயன் ஒன்றுமில்லை.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் முயல்வாருள் எல்லாம் தலை"

இல்லறத்தை சா¢யாக நடத்துகிறவன் புலன்களை அடக்கி முயல்கிற எல்லாரினும்
தலை சிறந்தவன்.

"அற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து"

சா¢யான முறையில் இல்லறம் நடத்துகிறவன் , துறவறத்தானை விட பொறுப்புகளும் சகிப்புகளும் உள்ளவன். இல்லறத்தான் பிறருக்குக்குற்ற துன்பங்களையும் தனக்கு வந்தது போல் எண்ணி அதை நோக்கும் பொறுப்புடையவனாகிறான்.

"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அ·தும்
பிறன் பழிப்ப தில்லாயின் நன்று"

மனிதனுக்கு அறம் என்று நூல்களால் தீர்மானிக்கப்பட்டதே இல்லறம்
ஆகவே, இல்லறத்தை சா¢யாக நடாத்துகிறவன் வானுறையும் தெய்வதுள்
வைக்கப்படுவான்.

எதனைத்தைப் பற்றி ஆராய்ச்சி இல்லாமலே கர்ம ஒழுக்கங்ளினால்
இல்லறத்தில் நின்று வீடுபேறு அடைய முடியும். இல்லறம் பொறுப்புகளும்,
சகிப்புத் தன்மையும் உடையது. இல்லறத்தை நாம் கர்மயோகமாக கருதினால் அதுவே சமுதாயத்துக்கு பயனுள்ளது.

பொ¢யபுராண வரலாறு மூலம் "அடியார்கள் இல்லறத்தை நடத்தி இறைவனை அடைந்ததைக் காணலாம்.
"இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணக் கடை"

என்பதற்கேற்ப நன் மனைவியைப் பெற்ற இளையான் குடிமாற நாயனார், இல்லறத்தில் அன்று வறுமை வந்துற்றபோதும் , காரைக்காலம்மையால் வரலாறும் இல்லறத்தில் நின்று கொண்டே ஆன்மீகத்தில் உயர்ந்து போ¢ன்ப பெருவாழ்வு பெற்றதை அறியலாம்.
இல்லற வாழ்விலே தர்மத் தளத்தில் நின்று செய்யும் கடமைகள் ஆன்மீக உணர்விற்கு
வழிவகுக்கும் என்பதை அறியலாம்.


ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம் எனில் அது மக்கள் வாழ்க்கை நலத்துடன் இணைந்ததா¡க இருக்க வேண்டும். அவ்வாறு அமைவதற்கு இல்லறம் சிறந்த வழியாகும். இந்துமத தத்துவக் கருத்துக்கள் மூலமும் இவற்றை நாம் உய்த்துணரலாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home