Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Monday 25 March 2019

பிஎம்ஆர் தோட்டம் பத்து பூத்தே ஸ்ரீ இராமர் ஆலய கும்பாபிஷேகம்,

திரளான பக்தர்கள்  கலந்துக்கொண்டனர்,ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

கூலிம் 

மார்ச் 26.3.2019

ஆர்.ரமணி 


பிஎம்ஆர் தோட்டம் பத்து பூத்தே பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ இராமர் ஆலயத்தின் மகா  கும்பாபிஷேகம்  கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

ஆலய தலைவர் இரா.வெள்ளையன்  தலமையில் மற்றும் ஆலய நிர்வாகஸ்தினர்களின்  ஒத்துழைப்பில் சிறப்பான கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டடிருந்தது. மகா கும்பாபிஷேகத்தில் கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரெ.சண்முகம்,பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் தொழிலதிபர் எம்.கருப்பையா,டத்தோ லோகநாதன் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் உடன் கலந்து சிறப்பித்தனர்.

மகா  கும்பாபிஷேகத்தை தமிழ்நாட்டை சேர்ந்த திருமலைவிஞ்சைமூர் லஷ்மி நரசிம்ம பட்டாச்சாரியார் அவர்கள் தலைமையில் நடத்தபட்டது. காலை மணி 10.21 மணி முதல் 11.21 மணிக்குள் ரிஷிப லக்கினத்தில் மகா கும்பாபிஷேகம் பிரதான ஆலய கும்பத்திற்க்கு புனித நீர் உற்றப்பட்டு தொடங்கியது.

கருடன் கும்பபிஷேக அறம்பிக்க சற்று நேரத்தில் வருகையளித்தது ஆலய நிர்வாகம் மற்றும் பக்த பெருமக்களிடையே மகிழ்சசியை ஏற்படுத்திய வேளையில்,வருகையளித்த பக்த பெருமக்களுக்கு புனித நீர் தெளிக்கபட்டதில்ல பொது மக்கள் உற்சாகம் அடைந்தனர்.

பினாங்கு மாநிலதை சேர்ந்த ஆறுமுகம் கலக்குழிவினரின் கோலாட்டம்,மயிலாட்டம் கண்போரை கவர்ந்தது.நன்பகல் 1.00 மணியளவில் சிறப்பு பூஜைக்கு பிறகு,பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.


கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரெ.சண்முகம் குறிப்பிடுகையில் சிறப்பாக கும்பாபிஷேகதை நடத்திந இராமர் ஆலய நிர்வாகஸ்தர்களுக்கு தமது வாழ்தை தெரிவித்துக் கொண்டார்,மாநில ஆரசாங்கதின் இந்திய சமூகத்திற்க்கு மற்றும் ஆலயங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.இதனிடையே பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் தொழிலதிபர் எம்.கருப்பையா குறிப்பிடுகையில் சிறப்பாக ஆலயத்தை எழுப்பியுள்ள இராமர் ஆலய நிர்வாகத்தை பாரட்டிய அவர் ஆலயத்துக்கு தேவையான உதவிகளை வழங்க ஆவன செய்யபடுவதுடன்ன,இப்பகுதியில் உள்ள மக்கள் ஒற்றுமெயாக இருந்தால் பல காரியிங்ஙகளை சாதிக்க முடிவதுடன்ன ஆலயத்தை முறையாகவும் கணக்கு வழக்குகளை சரியாக  வழிநடத்தினால் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறப்பு விருகையாளர்களான கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரெ.சண்முகம்,பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் தொழிலதிபர் எம்.கருப்பையா,டத்தோ லோகநாதன் இரானுஜம் மற்றும் அழைக்கபட்ட பிரமுகர்களுக்கு ஆலய நிர்வாகஸ்தினர் பொன்னாடை அணிவித்து மலர் மாலை இட்டு சிறப்பு செய்தனர்.லியோபார்ட் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் மூலமாக பிரதான கும்பத்திற்கு மலர் தூவியது சிறப்பு அம்சமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அன்றைய இரவு இராமர் சீத்தா திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடைபெற்றதால்,திரளான பக்த பெருமக்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home