Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Monday 16 October 2017


தீபாவளி நல் வாழ்த்துக்கள் 


அன்பு தந்தையார் ராஜகோபால் மீனாட்சி,ஊடக துறை நண்பர்கள்,டத்தோ டாத்தின், அன்பு உடன் பிறப்புகள்,சகோதர சகோதரிகள் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் மங்கள பொங்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.மலேசிய நண்பன் சார்பிலும் எனது தீபாவளி வாழ்த்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.இந்த நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியாகவும் அணைத்து நலன்களை பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி வணங்குகிறேன் 

அன்புடன் 

ஆர்.ரமணி மாலா @தசரதன் குடும்பத்தினர் 
பினாங்கு 

Monday 25 September 2017

மருத்துவர் ஜெய  ஸ்ரீ சீனிவாசன் இல்ல நவராத்திரி விழா  கொண்டாட்டம்

ஜார்ஜ்டவுன்

செப் 27.09.2017

ஆர்.தசரதன்


பினாங்கு பந்தாய்  தனியார் மருத்துவமனையின் புற்று நோய் பிரிவு  மருத்துவர் நிபுணர்   ஜெய ஸ்ரீ   சீனியவாசன்  அவர்களின் இல்லத்தில் நடந்த நவராத்திரியை விழாவில் திறளானோர் கலந்து கொண்டனர்.அண்டை அயலார் சுற்றத்தார் வழங்கிய கலை நயம் கொண்ட சிற்பங்கள்  கொலுவில் வைக்கப்பட்ட நிலையில் நவராத்திரி விழாவில் கலந்துக் கொண்ட வருகையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஜாலான் ஜெலுத்தோங்கில்  அமைந்துள்ள மருத்துவர் ஜெய ஸ்ரீ அவர்களின்  இல்லத்தில் இந்த நவராத்திரி கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு அங்கமாக முருகனின் ஆறு படை வீடுகளின் தனித்துவத்தை விளக்கும்  சிற்ப அலங்கரங்கள்   அணிவகுத்து  நின்ற காட்சி காண்போரை கவர்ந்தது.

வருடம் தோறும் ஒரு குறிப்பிட்ட   கடவுளின் வரலாற்றை விளக்கும் வகையில் கலை  நய சிற்பங்களை அழகுற அலங்கரம் செய்து வரும் மருத்துவர் ஜெய ஸ்ரீ சீனிவாசன் குடும்பத்தினர்,அழைக்கப்பட்ட வருகையாளர்களுக்கு  நவராத்திரி விழா வழிபாட்டில் கலந்துக் கொண்டு பிராத்தனையில் ஈடுபடுத்துவதுடன், பல்வேறான அரு  சுவை உணவுகளை வழங்கி வருகையாளர்களின் நன்மதிப்பை பெற்று திகழ்கிறார்.

நவராத்திரி விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு தேங்காய் ,பழம்,பாக்கு வெற்றிலை  போன்ற  மங்களகரமான பொருட்களை  இன்முகத்துடன் கொடுத்து வருகை மேற்கொண்டவர்களை மனதை நிறைவு செய்து ஒவ்வொருவரையும் வழி  அனுப்பி வைக்கும் முறையானது   அவரின் உயரிய குண நலன்களை பறை சாற்றுகிறது என்பது குறிப்பிடதக்கது.

பினாங்கை  பொது பஜனை குழுவை சேர்த்த  ராமா என்பவற்றின் இன்னிசை திருமுறை பாடல்கள்   பாடி  நவராத்திரி விழா நிறைவடைந்தது.இந்த நவராத்திரி சிறப்பு நிகழ்வில் ஸ்ரீ  டெலிமா சட்டமன்ற உறுப்பினர்  நேதாஜி இராயர் உள்ளிட்ட அழைக்கப்பட்ட சிறப்பு பிரமுகர்கள்   கலந்துக் கொண்டு  சிறப்பித்தனர்.


பட விளக்கம்

நவராத்திரி விழாவில் கலை நயம் கொண்ட சிற்பங்கங்கள் கொலுவில் வைக்கப்பட்டுள்ள  காட்சி

நவராத்திரி விழாவில் கலந்துக் கொண்டவர்களின் ஒரு பகுதியினர்.

மருத்துவர் ஜெய ஸ்ரீ சீனிவாசன் மற்றும் சிறப்பு பிரமுகர் நேதாஜி இராயர் அவர்கள் 




Tuesday 19 September 2017

பினாங்கு மாநில முத்தமிழ் சங்கம் சேவையாளர்களுக்கு கௌரவிப்பு 

செபராங் ஜெயா 

செப்   21.09.2017

ஆர்.தசரதன் 

பினாங்கு மாநில முத்தமிழ் சங்க ஏற்பாட்டில் அண்மையில் இங்குள்ள செபராங் ஜெயாவின் உள்ள ஜெயா கேட்டரிங் உணவகத்தில் நடந்த விருந்தோம்பல் நிகழ்வில்,பினாங்கு ஆளுநர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டம் பெற்ற சங்கத்தின் சேவையாளர்களுக்கு சிறப்பு  செய்யும் நிகழ்வு சிறப்புடன் நடைப்பெற்றது.

இந்நிகழ்வுக்கு மாநில முத்தமிழ் சங்கதின் தலைவர் முத்தமிழ் மணி க.உ.இளங்கோவன்  அவர்களின் தலைமையில் நடந்தது.இந்நிகழ்வில் உரையாற்றிய க.உ.இளங்கோவன் அவர்கள் சேவையாளர்களின் சேவையை  என்றும் அங்கிகரித்த அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதன் வழி அவர்களின் சேவைகளை சமுதாயதுக்கு மேலும்  வழங்க ஊக்கம் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகவுக்கு சமூக சேவையாளர் டத்தோ மேஜர் நவநீதம் அவர்கள் ஆதரவு வழங்கி உரை யாற்றினார்.அவரின் உரையில் சேவையாளர்களை பாராட்டுவது அவர்கள் சமூக சேவையில் பல காலமாக செய்த சேவைகளுக்கு பாராட்டு ஒரு அங்கிகாரமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்க தலைவர் நசீர் முகைதீன்,பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டுக் கழக தலைவர் எம்.பாலன்,புக்கிட் மெர்தாஜாம் தமிழ் இளைஞர் மணிமன்ற காப்பாளர் சேகர் ராமையா,சுங்கை புயூ மகா மாரியம்மன் ஆலய தலைவர் பெரியவர் முத்தையா மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பைத்தனர்.

இதனிடையே சபினாங்கு மாநில முத்தமிழ் சங்கத்தின் சார்பில் எஸ்.இராமச்சந்திரன்,எம்.பழனியாண்டி,நா.வேணுகோபால் எம்.பூங்கொடியாள் இளங்கோவன்,இந்திய மேம்பாட்டு கழகத்தின் திருமதி தேவி,மற்றும் மலேசிய நண்பன் பத்திரிக்கை நிருபர்  ஆர்.தசரதன் மற்றும் தமிழ் மலர்  செய்தியாளர்  டி.ஆர்.ராஜா ஆகியோர் சிறப்பு செய்யப்பட்ட சேவையாளர்கள்  என்பது குறிப்பிடதக்கது.

 பட விளக்கம் 


சிறப்பு செய்யப்பட்ட சேவையாளர்களுடன் ஏற்பாட்டுக் குழுவினர் உடன் க.உ.இளங்கோவன் மற்றும் டத்தோ நவநீதம் 






Monday 14 August 2017

ஆ.மோகனிஸ்வரன் எலெக்ட்ரிக்கள் துறையில் டிப்ளமோ பெற்றார் 


புக்கிட் மெர்தாஜம் 

ஆக.  : 16.08.2017

ஆர்.தசரதன் 

புக்கிட் மெர்தாஜம் மத்திய மாவட்டம் புக்கிட் தெங்காவை  சேர்ந்த மோகனிஸ்வரன் த/பெ ஆறுமுகம் எலெக்ட்ரிக்கள் ஏர்கோர்ன் துறையில் டிப்லோமா  பெற்றார்.புக்கிட் மெர்தாஜமில் அமைந்துள்ள இளைஞர் விளையாட்டு அமைச்சின் தொழில் நுட்ப கல்லூரியில் அவர் அப்பட்ட படிப்பை முடித்தார்.அண்மையில் புத்ராஜெயாவில் உள்ள பிஐசிசி மாநாட்டு மண்டபத்தில்  நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு எலெக்ட்ரிக்கள் மற்றும் ஏர்கோர்ன் துறைக்காண  டிப்ளோமா பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.தமது வெற்றிக்கு அர்ப்பணிப்பை தந்த தமது தாயார் பத்மா ரத்னம் அவர்களுக்கும்,தமது கல்லூரி ஆசிரியர்களுக்கும் அவர் தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் மலேசிய நண்பனிடம் கூறினார்.

பட விளக்கம் 

மோகனிஸ்வரன் த/பெ ஆறுமுகம் 

Thursday 10 August 2017

பினாங்கு தாமரை மன்ற ஏற்பாட்டில் இந்திய புது மண தம்பதிகளுக்கு பயிற்சி முகாம் 

குடும்ப உறவுகளின் பலம்  சமூகத்தின் மேன்மை ..சார்ஜன் முருகையா 



ஜார்ஜ்டவுன் 

ஆக.   12.08.2017

ஆர்.தசரதன் 




பினாங்கு மாநிலத்தில்  நற்சேவைகளை  ஆற்றிவரும் தாமரை மன்றத்தின் ஏற்பாட்டில் இந்திய தம்பதிகளுக்கு குடும்ப நல பயிற்சி முகாம் நிகழ்வு அண்மையில் சிறப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வு மன்ற தலைவர் திருமதி பாக்கியலெட்சுமி  அவர்கள் தலைமையற்றார்.பினாங்கு மாநில குடும்ப,சமூக  நல்வாழ்வு அமைச்சின்   இணை ஆதரவில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு இங்குள்ள சென்ட்ரல் தங்கும் விடுதியில் சிறப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய  செபராங் பிறை காவல் துறையை சேந்த  சார்ஜன் முருகையா சிறப்பு பிரமுகரான கலந்துக்  கொண்டு சிறப்பித்தார்.

அவரின் தலைமையுரையில் குடும்ப உறவுகளிடையே அணுக்கமான உறவு இருப்பது அவசியம் என்றும்,இதனால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள குண்டர் கும்பல் கலாச்சாரம் விட்டொழிக்க முடியும் என்றும்,குடும்ப செழிப்புக்கு கல்வி மற்றும் தன்னிலையை உயர்திக் கொள்ள மேலும் பயிற்சிகளில் கலந்துக்க கொள்வது அவசியம் என்றும் அவர் கூறினார்.மேலும் அவரின் உரையில் குடும்ப உறவுகளின் பலம்  சமூகத்தின் மேன்மை பெறுவது திண்ணம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


இந்நிகழ்வில் 30 இந்திய புது மண தம்பதிகள் கலந்துக் கொண்டனர்.புதியதாக திருமணமான இந்திய  தம்பதிகளுக்கு வாழ்வில் எதிர் நோக்கும் சவால்கள் அதனை கடக்கும் வழிமுறைகள் மற்றும் சீராக  குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழவும் வழி  முறைகள் ஆகியவை பயிற்சியாக அனுபவம் நிறைந்த பயிச்சியாளர்களின் மூலமாக நடத்தப்பட்டதாக இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான திருமதி பாக்கியலெட்சுமி குறிப்பிட்டார்.

இரண்டாம் ஆண்டாக  இது போன்ற நிகழ்வு நடத்தபட்டதாக கூறிய அவர்,இந்திய  தம்பதிகளிடமிருந்து நல்ல  ஆதரவு கிடைத்ததினால்   இந்நிகழ்வு நடத்தப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

குடும்பங்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது என்றும் அவை சமுதாய முன்னேற்றத்துக்கு குடும்ப உறுப்பினர்களின் பங்கு அவசியமானது என்பதால்,குடும்பங்களில் ஒன்றிணைந்த  ஒற்றுமை பேனப்படுவதால்  சமூக ஒற்றுமை மேலோங்கி அவை சமூக மாறுதலுக்கு வழி  வகுக்கும் என்ற நோக்கத்துக்காக இந்த  நிகழ்வு நடத்தப்பட்டதாகற்கான  திருமதி பாக்கிலெட்சுமி தமது உரையில் கூறினார்.

 பட விளக்கம் 

குடும்ப நல்வாழ்வு பயிற்சி முகாமில் கலந்துக் கொண்ட இந்திய தம்பதிகளின் ஒரு பகுதி 

சார்ஜன் முருகையா அவர்களுக்கு பாக்கிலெட்சுமி நினைவுசின்னம் வழங்கிய போது 


Saturday 8 July 2017

பினாங்கு மாநில அரசின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்.
மாநில ஆளுநர் சிறப்பு வருகை


பெருநாள் நாள் கொண்டாட்டத்தில் ஒன்றிணைந்த ஒற்றுமை பேணுவோம்
லிம் குவான் எங்


பாலிக் பூலாவ்

ஜூலை 09.07.2017


ஆர்.தசரதன்



பினாங்கு மாநில அரசின் நோன்பு பெருநாள் கொண்டாட்டத்துடன் பினாங்கு மாநில ஆளுநரின் 79 ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று சிறப்புடன் நடைப்பெற்றது.

இக்கொண்டாட்டம்இங்கு பாலிக் பூலவில் உள்ள பினாங்கு நகர சபை மண்டபத்தில் நடந்தது.

இந்நிகழ்வில் பினாங்கு மாநில ஆளுநர் துன் டாக்டர் அப்துல் ரஹ்மான் அப்பாஸ்,பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்,பினாங்கு துணை முதல்வர் டத்தோ ரஷீத் ஹாஸ்நோன்,சுகாதார துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹில்மி யஹாய.மாநில அரசின் செயலாளர்டத்தோ  ஸ்ரீ பாரிசான் டாருஸ்,பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ.டாக்டர்  வான் அஜிசா வான் இஸ்மாயில்,பினாங்கு மாநில மாநகர் மன்ற தலைவர் டத்தோ மைமூனா முஹமாட் ஷரிப்பினாங்கு மாநில காவல் துறை தலைவர் டத்தோ வீரா சுவா ஜி லாய்  சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்லின மக்கள் இந்த நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து சிறப்பித்தனர்.


பல்வகை உணவுகள் இந்த நோன்பு பெருநாள் உபசரிப்பில் வருகையளித்த மக்களுக்கு வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் உரையாற்றிய பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் குறிப்பிடுகையில்,கடந்த 9 ஆண்டுக் கால பாக்கத்தான் ராக்யாட் மக்கள் கூட்டணியில் வாயிலாக திறமையான,வெளிப்படையான மற்றும் பொறுப்புடைமைமிக்க மிக்க ஆட்சியை மாநிலத்தில் புரிந்து வருவதை பெருமிதத்துடன் கூறினார்.


இதனிடையே மாநிலதில் உள்ள 1.6 லட்சம்  மக்கள்  ஊழல் தடுப்பினால் பகுத்தளிக்கபட்ட வெ 412.63 இலட்சம் ஈவுத்தொகை கொடுக்கப்பட்டடுள்ளதை  மாநில அரசாங்கதுக்கு பெருமை அளிப்பதையும் அவன் எடுத்துரைத்தார்.


மாநிலத்தில் பெருகியுள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் நாட்டின் முதல்  பசுமை மாநிலமாககடந்த ஜூன் மதம் தொடக்கம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தியதையும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாநில அரசின் ஏற்பாட்டில் நடக்கும் நோன்பு பெருநாள் கொண்டாத்தில் கலந்து கொள்ள நேரம் ஒதுக்கிய பினாங்கு மாநில ஆளுநர் துன் டாக்டர் அப்துல் ரஹ்மான் அப்பாஸ் மற்றும் துணைவியார் தோ புவான் மஜிமோர் ஷெரீப் அவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

நோன்பு பெருநாள் கொண்டதின் மூலமாகபல்லின  மக்களுடன் ஒன்றிணைத்து ஒற்றுமை பேணுவோம் என்ற முழக்கத்துடன் அவர் தமது உரையை நிறைவு செய்தார்.
















பிறையில் மூன்று தொழிற்ச்சாலைகள் தீக்கிரையானது

பிறை

ஜூலை 09.07.2017

ஆர்.தசரதன்


பிறை தாமான பிளாங்கி பகுதியில் உள்ள மூன்று தொழிற்சாலைகள் நேற்று காலை 11.00 மணியளவில் நடந்து தீ விபத்தில் தீக்கிரையானது.

பிளாஸ்டிக் ரக தொழிற்சாலையான அந்த தொழிற்சாலைகளில் ஒன்றில்   தீ ஏற்பட்டதாக பினாங்கு மாநில தீயணைப்பு பாதுகாப்பு துறை பேச்சாளர் கூறினார்.

காலை மணி 11.00 மணியளவில் பெறப்பட்ட தொலை அழைப்பை தொடர்ந்து 35 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு விறைத்து தீயை அணைக்க முற்பட்டதாக மேலும் அவர் சொன்னார்.

20 சதவீத அளவிலான வகையில் தீயினால் அந்த மூன்று தொழிற்சாலைகளும் பாதிப்புக்குஉள்ளதாக கூறிய அவர்,45 மணி போராட்டத்துக்கு பிறகு தீயை முற்றாக அணைத்ததாக அவர் சொன்னார்.

இந்த தீ சம்பவத்தில் எவ்வித உயிர்களும் பாதிக்கப்படவில்லை என்று குறிய அவர் தீ ஏற்பட்டதிற்கான காரணம் மாற்று சேத மதிப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்  கூறினார்.

கரும் மேக புகைகள் சூழ்ந்த நிலையில்,பினாங்கு தீவு  பகுதியிலிருந்து பல கிலோ  மீட்டர் தூரம் இதை காண முடிந்தது என்பது குறிப்பிடதக்கது.


பட விளக்கம் 

தீயினால் பாதிப்படைந்த தொழிற்சாலைகலலிருந்து ஏற்பட்டது ஏற்பட்ட புகை மூட்டம் 




Saturday 1 July 2017

பினாந்தி ஸ்ரீ வீர ஜடா முனி ஆலய ஸ்தாபன பூஜை


ஜூலை    : 03.07.2017

பினாந்தி 

ஆர்.தசரதன் 


எதிர்வரும் 09.07.2017 ஆம் நாள் ஞாற்றுக்கிழமை காலை மணி 9.45 முதல் 11.00 வரை என் 804 முக்கிம் 19 பினாந்தி  புக்கிட் மெர்தாஜாமில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஜடா முனி ஆலய ஸ்தாபன பூஜை நடைபெறும் என்று இந்த ஆலயத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலன் நம்பியார் தெரிவித்தார்.இந்த சிறப்பு பூஜையில் சுற்று வட்டார மக்கள் கலந்துக் கொள்ள அழைக்கப் படுவதாக அவர் மேலும் சொன்னார்.

இந்த ஆலய ஸ்தாபன பூஜைக்கு பினாங்கு மாநில அரசு சார்பாக வெள்ளி 5,000 ஆயிரமும்,பினாங்கு இந்து அறப்பணி சார்பாக வெள்ளி 5,000 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர்,தற்போது இந்த ஆலயம் கடந்த மாதங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் சிலைகள் உடைக்கபட்டு சர்சையிளான ஆலயம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


பட விளக்கம் 

ஸ்ரீ வீர ஜடா முனி ஆலய ஸ்தாபன பூஜை ஏற்பாட்டுக்  குழுவினருடன் 
பாலன் நம்பியார் 

Friday 30 June 2017

பினாங்கு முத்தமிழ் சங்க ஏற்பாட்டில் கின்னஸ் சாதனை புரிந்த நடனமணிகளுக்கு பாராட்டு  விழா .




ஜூலை    01.07.2017

பட்டர்வொர்த்

ஆர்.தசரதன்




அண்மையில் தமிழகம் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த உலக பரதநாட்டிய சாதனை நிகழ்ச்சியில் பினாங்கு மாநில முத்தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த  கோகிலா நடனக் குழுவைச் சேர்ந்த நடனமணிகள் சாதனை புரிந்ததுடன் கின்னஸ் சாதனை விருதையும் பெற்றனர் 

அவர்களை பாராட்டும் இகழ்வு ஒன்று அண்மையில் இங்கு செபராங் ஜாயாவில் அமைந்துள்ள உணவாக ஒன்றில் சிறப்புடன் நடைபெற்றது 


பினாங்கு மாநிலத்தில் இந்தியக் கலைகளை பாதுக்காத்தும் அதனை அழியாமல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு  குறிப்பாக அக்கலைகள் இளைய தலைமுறையினர் பயின்றுவித்து வரும் பலம் பெரும் இயக்கமாக திகழும் பினாங்கு முத்தமிழ் சங்கம் இந்த பாரட்டு விழாவினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வுக்கு சங்கத்தின் தலைவர் கா.வு இளங்கோவன் அவர்கள் தலைமையேற்ற வேலையில்,உடன் இந்நிகழ்வில் சமூக சேவையாளர் டத்தோ நவநீதன் அவர்கள் சிறப்பு பிரமுகரான கலந்துக்க கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய  பினாங்கு மாநில முத்தமிழ்ச் சங்க தலைவர் முத்தமிழ் மணி கா.வு.இளங்கொவன் அவர்கள், இந்தியக் கலைகள் இந்த மண்ணை விட்டு மறையாமல் காப்பது அவசியம் என்றும்,இளைய தலைமுறையினர் அக்கலைகளை காற்றுக்க்கொள்வதன் மூலமாக தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியும் என்பதுடன் அக்கலைகளை அழியாமல் காக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வை தொடக்கி வைக்க வந்திருந்த டத்தோ நவநீதன் அவர்கள் தமதுரையில் கின்னஸ் சாதனை  புரிந்துள்ள பினாங்கு முத்தமிழ் சங்கத்தை சேர்ந்த நடனமணிகள் பினாங்கு மாநிலத்துக்கு மட்டும்மின்றி மலேசிய  திருநாட்டுக்கு உயரிய கௌரவித்தை ஏற்படுத்தி தந்துள்ளதை   அவர் வெகுவாக பாரட்டினார்.

நிகழ்வில் இறுதியில் கின்னஸ் சாதனை புரிந்த நடனமணிகளான தே.யோகவர்தினி,சா.மிஷாந்தினி இ.திவ்யதர்ஷினி ஆகியோருக்கு கின்னஸ் புத்தகத்தின் நற்சான்றிதழ்,முதுதமிழ் சங்கத்தில் சார்பில் நற்சான்றிதழ் கொடுக்கப்பட்டது மாலை அணிவித்து அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக டாக்டர்  குணா,பினாங்கு  மாநில இந்திய மேம்பாட்டு கழக தலைவர் தமிழ் மறவன் பாலன்,நடன மாஸ்டர் கோகிலா  உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.





















Saturday 24 June 2017

செய்தி   : ஆர்.தசரதன் 

மே          : 30.05.2017

ஜூரு 

ஜூரு தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழா கோலாகல திருநாளில் அனைவரும் சங்கமம் 

பள்ளி மேன்மைக்கு ஜூரு வாழ் பொது மக்களின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன் டத்தோ க.அன்பழகன் 


ஜூரு தமிழ்ப்பள்ளியின் நுற்றாண்டுவிழா கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை  சிறப்புடன் நடைபெற்றது.இவ்விழாவினை பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக் குழு  தலைவர் முனைவர் டத்தோ க.அன்பழகன் தொடக்கி வைத்தார்.ஒரு கூட்டு பறவைகளாக தாய் வீட்டீல் சங்கமிக்கும் இடமாக சனிக்கிழமை அன்று நடந்த  கொண்டாட்டத்தில் ஜூரு தமிழ்ப்பள்ளி திருளால் கோலம் பூண்டது.பல ஆண்டுகளாக பல்வேறு பகுதியில் இடம்மாறி சென்று மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற உன்னத நோக்கில் அனைவரும் வருகையளித்து நூற்றாண்டு விழாவினை சிறப்பித்தனர்.இவ்விழாவில் பள்ளியின் பிதா மகன்களாக கருதப்படும் முன்னாள் தலைமை ஆசிரியர்களான கு.மோகன் மற்றும் டேவிட் பாபு அவர்களுக்கு பொன்னாடை போற்றி  மலர் மாலை அணிவித்து ஏற்பாட்டுக்  குழுவினர் சிறப்பு செய்தனர்.

நூற்றாண்டுகளை  கடந்து பினாங்கு மாநிலத்தில் தன்னிகற்ற நிலையில் செழுமையுடன் வாழ்த்து வரும் ஜூரு தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு   கை கொடுத்த ஜூரு வாழ் பொது மக்களுக்கு பாராட்டையும் நன்றியையும் முனைவர் அன்பழகன்  தெரிவித்துக் கொண்டதுடன்.பள்ளியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய முன்னாள் இந்நாள் ஆசிரியர்களுக்கும் அவர் தமது நன்றியை கூறினார்.பினாங்கு மாநிலத்தில் பல சிறப்பு அம்சங்களை கொண்ட பள்ளியாக ஜூரு  தமிழ்ப்பள்ளி திகழ்வதுடன்,மாநில அரசாங்கத்தின் சிறப்பு நிதி ஒதுக்கீடும் உதவிகளும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பள்ளியின் வாரிய குழு தலைவர் டாக்டர் சரவணன் தமது  வரவேற்புரையில் குறிப்பிடுகையில்,நூற்றாண்டு காலமாக  ஒரே இடத்தில் செயல்படும் பள்ளியாக ஜூரு தமிழ்ப்பள்ளி விளங்குவது சாதாரண விஷயம் இல்லை என்றும் பள்ளியின் முன்னேற்றத்துக்கு அர்பணிப்புகளை  செய்த அனைவரையும்  எண்ணுவது சிறப்புடைத்து என்றும் குறிப்பிட்டார்.

இந்நூற்றாண்டு விழா சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம்,பள்ளி வாரிய குழுவினர்,பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர்,பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள்,பள்ளியின் தற்போதைய ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் த.முனியாண்டி தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.4மாடி கொண்ட கட்டிடமாக ஜூரு தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியை மேலும் தூரிதப்படுத்த மாநில  அரசாங்கம் ஒரு நிலத்தை ஜூரு தமிழ்ப்பள்ளிக்கு அவனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அவரின் உரையில் டத்தோ க. அன்பழகன் அவர்களின் கவனத்திற்கு அவர் முன் வைத்தார்.

நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொண்ட பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் டேவிட் பாபு ,தமது நினைவலைகளை மலேசிய  நண்பனிடம் பகிர்ந்து கொண்டதில் பள்ளி கடும் புயலினால் பாதிக்கப்பட்டது விழுந்த நிலையில்  அதற்க்கு மாற்று கட்டிடம்  வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் முடிவு செய்த வேளையில்,ஜூரு தோட்டத்தில் பிறந்து வளர்ந்த அச்சமயத்தில்   காட்டிட நிர்மாணிப்பாளர் இருந்த மா .ராஜகோபால் அவர்கள் ஜூரு பள்ளியின் புதிய பரிணாம வளர்ச்சி தோற்றுனராக திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

நுற்றாண்டு விழாவில் முன்னாள் மாணவர்களின் சிறப்பு வருகை நூற்றாண்டு விழாவுக்கு பெருமை சேர்த்து மட்டும் அல்லாமல் கொண்டாட்டத்திற்கு உறு துணையாக இருந்து செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.என்றும் நீங்கா நினைவுகளுடன் பழைய நினைவுகளை வரவழைத்து அக்கால  பள்ளி பருவ நினைவலைகள் மனதில் நிழலாடி அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு தங்களுக்கு கல்வி கண்ணை திறந்த ஆசிரியர்கள் நூற்றாண்டு விழாவில்  வருகையால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நூற்றாண்டு விழாவில் முனைவர் டத்தோ க. அன்பழகன்,ஜூரு தமிழ்ப்பள்ளி வாரிய குழு தலைவர் டாக்டர் பெ.சரவணக்குமாரன்,வாரிய ஆலோசகர் மா.ராஜகோபால் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வீ.சந்திரசேகரன்,ஜூரு  தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் த.முனியாண்டி ஷான் பூர்ணம் மெட்டல் நிறுவன உரிமையாளர் எஸ்.செல்வகுமாரன்,பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் இயக்குனர் திருமதி.சகுந்தலா,சக்குரா நிறுவனர் எம்.சந்தனதாஸ்,முன்னால் தலைமையாசிரியர்கள் கு.மோகன்,டேவிட் பாபு,திருமதி தமிழ்ச்செல்வி,போத்தா ராஜு,ஜெயவேலு,என்.வீராசாமி,ஜாவி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சௌந்தராஜன்,சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் நாதன், மற்றும்  அழைக்கப்பட்ட பிராமுகர்கள் பலரும் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


 பட விளக்கம் 

ஜூரு தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை தொடக்கி வைக்கும் டத்தோ க.அன்பழகன் 

சிறப்பிக்கப்பட்ட முன்னால் ஜூரு தமிழ்ப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கு.மோகன் மற்றும் டேவிட் பாபு அவர்கள் 

டத்தோ க.அன்பழகன் அவர்களுக்கு பள்ளி வாரிய  தலைவர் .சரவணகுமார் நினைவு சின்னம் வழங்கிய போது 

பள்ளி மாணவர்களின் கலை படைப்பு 

முன்னாள் மாணவர்கள்  ஆசிரியர்களை  குழுப் படம் 

பினாங்கு மாநில தமிழ் பிரிவு  கல்வி இயக்குனர் திருமதி சகுந்தலா நினைவு சின்னம் பெறுகிறார்.














Putham Puthu Olai Video Song | Vedham Pudhithu | Raja, Amala

Tuesday 11 April 2017

செய்தி     : ஆர்.தசரதன்

ஏப்            : 07.04.2017

பட்டர்வொர்த்



பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக ஏற்பாட்டில் நல்லெண்ண விருந்து


பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சமூக தலைவர்களை  சிறப்பிக்கும் வகையில் அண்மையில் நல்லெண்ண விருந்து நிகழ்வு ஒன்று இங்குள்ள பால்மின் தங்கும் விடுதியில் சிறப்புடன் நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு கழகத்தின் தலைவர் தமிழ் மறவன்  எம்.பாலன் அவர்கள் தலைமையேற்றார்.

இந்நிகழ்வுக்கு சிறப்பு பிரமுகர்களாக சமூக சேவையாளரும் மலேசிய குற்ற தடுப்பு அறவாரியத்தின் பினாங்கு மாநில துணை தலைவர் டத்தோ.கே.ஆர்.புலவேந்திரன்,பாகன் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் அ.தனசேகரன் டத்தோ மேஜர் நவநீதம்,மலேசிய இந்திய மேம்பாட்டு கழக உதவி தலைவர் தமிழ்செல்வன்,தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்க தலைவர் நசீர்.பினாங்கு முத்தமிழ் சங்கத்தின் தலைவர் க.வு.இளங்கொவன்,செபராங்  பிறை அம்மன் பொது நல  சங்கத்தின் தலைவர் எம்.வீரையா,ஜூரு சந்திரோதயம் எம்.ஜி.ஆர் சமூக நல மன்ற தலைவர் பகவதி,துணை தலைவர் விஜயன்,துணை செயலாளர் ம.ராஜகோபால் மற்றும்  உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கலந்துக்க கொண்டு தலைமையுரையாற்றிய எம்.பாலன் அவர்கள் சமூக சேவையாளர்கள் என்றும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்றும்,அவர்கள் தன்னலம் கருதாமல் சமூகத்துடன் இணைத்து அவர் ஆற்றுகின்ற சேவைகளை காலத்துக்கு ஏற்ப நிலையில் அவர்களை 
சிறப்பிப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன்,டத்தோ நவநீதம்,சமூக ஆர்வலர் செல்வம் சடையன் ஆகியோர் சிறப்பு செய்யபட்டனர்.இந்நிகழ்வை திறந்து  வைத்து சிறப்புரையாற்றிய டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் அரசு சாரா இயக்கங்கள் இளைஞர்களை சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்திய இளைஞர்கள் தற்போது குற்ற செயல் சம்பவங்களில் ஈடுபடுவது வருத்தம்  அளிப்பதாகவும் அதற்க்கு,அரசு சாரா இயக்கங்கள் அவர்களையும் இணைத்து அவர்களின் தேவைகளை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்றும் சொன்னார்.பினாங்கு இந்திய மேம்பாட்டு கழகம் சிறப்புடன் சேவையாற்றி வருவது பாராட்டத்துக்குரியது என்று கூறி  அவர் மேலும் சமூக நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் சமூகதில் சில மாற்றங்களை   காண பல வகைகளில் அவை துணையாக  என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட பாகன் டாலாம் சட்ட மன்ற உறுப்பினர் அ.தனசேகரன் அவரின் உரையில்,தமது நீண்ட நாள் கனவான பாகன் டாலாம் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளியை கட்ட வேண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பதாகவும்,அதற்க்கு மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கினால் மாநில  அரசு உதவியுடன் பள்ளியை கட்டும் பணி தொடங்கலாம் என்றும் அவர் சொன்னார்.கழகத்தின் துணை செயலாளர் இராஜசேகரன் அவர்களின் நன்றியுரையுடன் நல்லெண்ண விருந்து நிகழ்வு ஒரு நிறைவடைந்து 











Thursday 23 March 2017

செய்தி   : ஆர்.தசரதன்

மார்ச்     : 25.03.2017

பினாங்கு

இளம் இந்திய பெண்ணின் மத மற்றம்,சட்ட விதிகள் மீறப்பட்டடுள்ளது?

பாலன் நம்பியார் கேள்வி?



கெடா கூலிம் வட்டாரத்தை சேர்ந்த இந்திய இளம் பெண்ணின் மதம் மாற்றம் தொடர்பில் பினாங்கு மாநில கலை கலைச்சார சமூக சேவை நற்பணி மன்றம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மன்றத்தின் தலைவர் பாலன் நம்பியார் கூறினார்.


இளம் பெண்ணின் மத மாற்றம் தொடர்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் மேலும் அவர் கருத்துரைத்த அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு அப்பெண்ணின் 14வது வயதில் ஓர் இந்திய ஆண்டவரால்  மத மற்றம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இப்பெண்ணின் தந்தை புத்த மதத்தை சேர்த்தவர் என்றும் தாயார் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று கூறிய அவர் அத்தம்பதிகளுக்கு பிறந்த  சியோங் மே லீங்  {வயது 18} அவர் சொன்னார்.மேலும் அவர் கூறுகையில் அப்பெண் 14 வயது இருக்கும் போது ஒரு இந்திய முஸ்லீம் ஆடவரால் சமய இலாக்காவுக்கு கொண்டு சென்று மத மற்றம் செய்யப்படதாக கூறினார்.


சில மாதங்களுக்கு பிறகு புதிய அடையாள அட்டையை பெற வேண்டி தேசிய பதிவிலாகாவின் அலுவலகத்துக்கு அப்பெண் சென்ற போதுதமது அடையாள அட்டையில் சியோங்  மே லீங்  பதிலாக பாத்திமா பிந்தி அப்துல்லா என்ற பெயர் மற்றம் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டதுடன் புதிய அடையாள அட்டை தமக்கு வேண்டாம் என்று கூறி மறுப்பு தெரிவித்தார் என்று பாலன் நம்பியார் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் அப்பெண் சம்பந்தப்பட்ட இந்திய ஆடவரால் மத மாற்றம் தொடர்பில் ஏமாற்றப்பட்டதை அறிந்த சியோங்  மே லீங் தமக்கு தமக்கு உதவுமாறு அரசியல் கட்சி தலைவர்களையும்,அரசு சாரா இயக்கங்களின் தலைவர்களையும் அணுகி உதவி கேட்ட போது யாரும் முன்வராததை தொடர்ந்து பினாங்கை சேர்ந்த பினாங்கு மாநில கலை கலாசார சமூக சேவை நற்பணி மன்றத்தின் உதவியைநாடியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் கூறிய அவர் நாட்டின் சட்ட விதியின் படி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே  பெற்றோர்களின் சம்பந்தத்துடன் பிற மதத்தை தழுவ அனுமதி உள்ள நிலையில்,14 வயதுடைய பதின்ம வயதுபெண்ணை மத மாற்றிய சம்பவம் சட்டதுக்கு புறம்பானது என்றும் அவர் கருத்துரைத்தார்.

இவ்விகாரதை  தீர்ப்பதற்கு மன்ற  சட்ட ஆலோசகனுடன் ஆலோசனை நடத்தியும், இஸ்லாம்   சமய இலாக்கா  அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பாலன் நம்பியார் கூறினார்.

பட விளக்கம் 


மத மாற்றம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன்  பாலன் நம்பியார் 




Saturday 18 March 2017

செய்தி    : ஆர்.தசரதன்

மார்ச்       : 20.03.2017

பட்டர்வொர்த்



பினாங்கு தமிழ்ப்பள்ளி முன்னாள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தன்னலம் கருதாத தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்  சேவை அளப்பரியது டத்தோ கே.ஆர்.புலவேந்திரன்


பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்கம் ஏற்பாட்டில் 11 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் இங்குள்ள ஸ்ரீ அனந்தபவன் விருந்து மண்டபத்தில் கடந்த ஞாற்றுக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.இந்நிகழ்வு மன்ற தலைவர் ந.க.பக்கிரிசாமி  அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளர்களாக மலேசிய குற்ற புலனாய்வு அரவாரியத்தின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன்,பினாங்கு கழிவு இலாக்கா தமிழ் பிரிவு  அதிகாரி சகுந்தலா,பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்க தலைவர் ந.க.பக்கிரிசாமி,இயக்க துணை தலைவர் நா.குப்புசாமி,செயலாளர் சே.பாண்டியன் ஆலோசகர் கு.மோகன்,ஜாவி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சௌந்தரராஜன்,ஜூரு தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் முனியாண்டி,பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயவேலு,பிறை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை ஜெசிந்தா மற்ற இதர ஆசியர்கள் கலந்துக்  கொண்டனர்.

நிகழ்வின் தொடக்க அங்கமாக தமிழ் வாழ்த்தினை முன்னாள் ஆசியர் சு.முருகப்பன் பாடினார்.அதனை தொடர்ந்து  தலைமையுரை ஆற்றிய பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்க தலைவர்  ந.க.பக்கிரிசாமி அவர்கள் தமதுரையில் முன்னாள் தமிழ்ப்பள்ளியில் சேவையாற்றிய இயக்க உறுப்பினர்களுடன்   கெடா சுல்தான் மற்றும் பினாங்கு மாநில ஆளுநரிடம் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் "நினைத்து பார்க்கிறோம் நெஞ்சம் நெகிழ்கிறோம் "என்ற நிகழ்வின் வழி சிறப்பு செய்வதில் மகிச்சி  கொள்வதாக கூறினார்.இயக்கத்தில் 50 உறுப்பினர்கள் அங்கம் வகிகின்றனர் என்றும் அதி பல வகையான நிகழ்வுகளை குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு கவிதை போட்டி,பேச்சி போட் டி மற்றும் இவ்வாண்டு சிறப்பாக நடைபெற்று வரும் 240 இடை நிலை பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட  தமிழ் மொழி பயிற்சி மற்றும் கவிதை பட்டறைகளை சிடிக் இந்திய பொருளாதார மேம்பட்டு உதவியுடன் நடத்தி வருவதாக கூறினார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய   மலேசிய குற்ற புலனாய்வு அரவாரியத்தின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் அவர்கள் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்கம் சிறப்பாக செயல்படுவதாகவும்,சமூக மேம்பாட்டில் முன்னாள் ஆசியர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும் தன்னலம் கருதாத சேவைக்கு அவர் புகழாரம் சூட் டினார்.தொடக்க கல்வியை தமிழ்ப்பள்ளியில் பயின்ற  மாணவர்கள் அண்மையில் வெளியான எஸ்பிஎம் தேர்வில்  சிறப்பு தேர்ச்சி பெற்றமைக்கு முக்கிய  காரணம் அவர்கலின் சிலர் தமிழ்பள்ளியில் பயன்றதுடன்  அதில் முக்கிய பங்கு  தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது என்றும் அவர் குறிப்பிடு இயக்க பொதுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் தமிழ்ப்பள்ளியை சேந்த ஆசிரியர்கள் திருமதி சரோஜினி குணசேகரன்,முன்னாள் பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் அ.வீராசாமி மற்றும் அ சுப்ரமணியம் ஆகியோருடன் அ.வீராசாமி பினாங்கு ஆளுநரிடம் டிஜேன் விருது பெற்றமைக்கு,ஆர்.லோகாம்பாள் பி.ஜே.எம் விருது பெற்றமைக்கும்,எ.குணசேகரன் அவர்கள் கெடா சுல்தானிடம் பி.கே.எம் விருது பெற்றமைக்கு நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் முன்னாள் தமிப்பள்ளிகளின் அமைப்பாளர் அ.வீராசாமி அவர்கள் நிகழ்வுக்கு  வருகையளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.











Wednesday 1 March 2017

செய்தி    : ஆர்.தசரதன் 

பிப்           : 27.02.2017

பட்டர்வொர்த் 


வாழ்வோ தாழ்வோ இந்தியர்கனின் அரணாக மஇகா என்றும் துணை இருக்கும் 

டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் 


இந்நாட்டில் பல அரசியல் காட்சிகள் இருக்கின்றன,அனால் இந்தியர்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் மேம்பட்ட வளர்ச்சிக்கும் என்றும் பாதுகாப்பாக இருப்பது மஇகா என்று,இங்குள்ள பட்டர்வொர்த் காம்போங் பங்காலி பொது மைதானத்தில் நடந்த பினாங்கு மாநில மஇகா ஏற்பாட் டில் நடந்த ஒற்றுமை பண்பாட்டு விழாவை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றிய மஇகா தேசிய தலைவரும்,மலேசிய  சுகாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை பினாங்கு மாநில மஇகா தொடர்புக்கு குழு தலைவர் டத்தோ கே.தங்கவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளர்களாக பினாங்கு மஇகா தொடர்புக்குழு துணை தலைவர் டத்தோ ஞானசேகரன்,செயலாளர் எஸ்.எஸ்.டி.முனியாண்டி,பொருளாளர் இளங்கோ,இளைஞர் பகுதி தலைவர் பிரகாஷ்,மகளிர் பகுதி தலைவி திருமதி பிரேமா,டத்தின் வள்ளி முத்துசாமி,மஇகா மத்திய செயலவை உறுப்பினர் ஜெ.தினகரன்,மாநில  மஇகா தொகுதி தலைவர்கள்,வட்டார ஆலய தலைவர்கள்,மாநில  அரசு சாரா இயக்க தலைவர்கள் உட்பட 1200 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் பேசிய டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் இந்தியர்கள் இந்நாட்டில் கல்வி,பொருளாதாரம் ஆகிய துறைகளில் மேம்பாடு காண வேண்டும் என்று,நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களிடம் இந்தியர்களுக்கு தேவையானவை என்ன என்று தெளிவாக அவரிடம் கூறி,பல நன்மை பயக்கும் திட்டங்களாக  தெக்குன் சிறு தொழில் கடனுதவி திட்டம் ஆகியவற்றை மஇகா பெற்று தந்துள்ளது.மேலும் தமிழ் பள்ளியின் கல்வி மேம்பாட்டிற்கும் புதிய பள்ளிகள் கட்டுவதற்கும் 80 கோடி வெள்ளியை 2010 ஆண்டு தொடங்கி 2017 ஆண்டு வரை மஇகா சமூக முன்னேற்றத்துக்கு வழங்கியிருப்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

இந்தியர்கள் பொருளாததில் மேம்பாடு காண கடந்த 6 வருடங்களாக 22 கோடி வெள்ளி தெக்குன் கடனுதவி திட்டத்தின் மூலம் 22,000 ஆயிரம் சிறு வணிகர்கள் பயன் அடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.சமூகத்தின் வளர்ச்சியில் என்றும் மஇகா துணை இருக்கும் என்று கூறிய சுகாதார அமைச்சர்,மக்கள் நன்மைபெறும் பொது அதனை மக்கள் மஇகாவிற்கு ஆதரவு கொடுப்பதன் மூலமாக 
தொடர்ந்து மக்களுக்கான சேவையை  கடமையுணர்வுடன் செயலாற்ற மஇகா தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

வருகின்ற பொது தேர்தலின் மஇகாவின் முக்கிய சட்டமன்றமாக  இருக்கும் பிறை மற்றும் பாகான்  டாலாம் சட்டமன்ற பகுதியில் உள்ள மக்கள்,மஇகா மேற்கொண்டிருந்த பல்வேறு திட்டங்களினால் அப்பகுதியில் உள்ள மக்களின் ஆதரவு பெருகி வருவதால் அந்த சட்டமற்ற பகுதியினை வரும் பொது தேர்தலில் வெற்றி கொள்ளு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மஇகா பினாங்கு மாநில தொடர்புக்குழு தலைவர் டத்தோ கே.தங்கவேலு தமதுரையில் இந்தியர்களிடம் ஒற்றுமை உணர்வை மேலோங்க செய்வதற்கு ஒற்றுமை பண்பாட்டு நிகழ்வினை மாநில மஇகா ஏற்பாடு செய்திருப்பதாகவும் இதன் மூலமாக இந்தியர்களிள் மத்தியில் ஒற்றுமை உணர்வு மேலோங்குவதுடன் மாநில மஇகா செயலாற்றும் திட்டங்களுக்கு மக்கள் ஒன்றிணைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.பினாங்கு மாநில மஇகாவின் அழைப்பேன் பேரில் கலந்துக்கொண்ட 30க்கு மேற்பட்ட ஆலய தலைவர்கள் மற்றும் அரசு சாரா இயக்க தலைவர்கள் அனைவருக்கும் அவர் நன்றி கூறினார்.இதனிடையே இந்நிகழ்வில் சுகாதார பரிசோதனை மற்றும் சிறப்பு அதிர்ஷ்ட குலுக்கு இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



















Tuesday 14 February 2017

செய்தி    : ஆர்.தசரதன்

பிப்           : 04.02.2017

செபராங் ஜெயா

பினாங்கு தைப்பூச திருநாளில் குற்ற செயலை தடுக்க

மலேசிய குற்ற தடுப்பு அரவாரியம் தீவிர முயற்சி.டத்தோ புலேந்திரன்



பினாங்கு மாநிலத்தில் எதிர்வரும் தைப்பூச திருநாள் சுபிச்சமாகவும் அமைதியாகவும்,குற்ற செயல் அற்ற மாநிலமாக இருப்பதை உறுதி படுத்த ஆக்கப்பணிகளை செய்திருப்பதக்க மலேசிய குற்ற தடுப்பு அரவாரிய ஆட்சி மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலேந்திரன் தெரிவித்தார்.கடந்த வியாழக்கிழமை இங்குள்ள செபராங் ஜெயாவில் உள்ள தமிழ் பண்பாட்டு அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் உரையாற்றினார். 

பினாங்கு மாநில காவல் துறையினர் அதிகமான ஒத்துழைப்பை மலேசிய குற்ற தடுப்பு அரவாரியத்துக்கு  வழங்கி வருவதன் மூலம்,இந்த ஆண்டு தைப்பூச தினத்தில் குற்ற சம்பவங்கள் அற்ற மாநிலமாக பினாங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்திருப்பதை போல இந்த ஆண்டும் அது உறுதிப்படுத்த மலேசிய குற்ற தடுப்பு அரவாரியம் செயல் திட்ட்ங்கள் கொண்டிருப்பதாக அவர் கூறினார் 

இந்த 2017 ஆம் ஆண்டும் தைப்பூச தினத்தில் பூஜ்யம் குற்ற சம்பவங்கள் பதிவு கொண்டிருக்கும் இலக்கை அடைய,மாநிலத்தில் உள்ள அரசு சார்பற்ற இயக்கங்கள் ஒருங்கிணைத்த முயற்சியிகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளது என்றும் மேலும் அவர் சொன்னார்.

இதற்கிடையே தைப்பூச விழாவில் கலந்துக்க கொள்ளும் பொது மக்கள் அதிகமான நகைகளை அணிய வேண்டாம் என்றும்,மது அருந்திவிட்டு தைப்பூச திருநாளின்  மாண்பை கெடுக்கும் அளவுக்கு நாமே காரணமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதனிடையே இந்த ஆண்டு தைப்பூச திருநாளில் பொது மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகையில்,மாநில காவல் படை தலைவர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் பலனாக மாநில  காவல் படையை சேர்ந்த 1000 காவல் படையினர் இவ்வாண்டு தைப்பூச நாளில் பணியில் அமர்த்தப்படுவதற்கும் மாநில காவல் துறை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக பினாங்கு மாநில குற்ற தடுப்பு அரவாரிய துணை தலைவர் (2) பொறுப்பு வகிக்கும் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் செய்தியாளர்களிடம் விவரித்து கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட மேஜர் காளீஸ்வரன் குறிப்பிடுகையில்,உலக நாடுகளிலிருந்து பல பாகங்களிலிருந்த சுற்று பயணிகளும் அதிக அளவில் கலந்து கொள்வது ஒரு புறம்மிருக்க,இந்துக்களின் மிக பிரபலமான தைப்பூசத்தை மாண்பை காப்பது ஒவ்வொரு இந்துக்களின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இவ்வாண்டு 2 இரதங்கள் ஒன்று தங்க இரதம் மற்றொன்று வெள்ளி இரதம் ஊர்வலமாக செல்வதினால் இது பினாங்கு மாநில இந்து பெருமக்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக கருதப்படும் அதே வேலையில்,இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு பொது அமைதி கெடும் என்ற கூற்றை அவர் நிராகரித்தார்.

இதனுடன் நடந்த  செய்தியாளர் கூட்டத்தில் மலேசிய குற்ற தடுப்பு அரவாரிய பொறுப்பாளராக  கலந்துக்கொண்ட ராஜா முனுசாமி அவர்கள்,தண்ணீர் பந்தல்களில் பக்தி பாடல்களை ஒளி பரப்ப பினாங்கு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம் முயல வேண்டும் என்றும்  இதன் மூலம்  பக்தி மார்க்கம் கொண்ட உன்னத திருநாளாக தைப்பூசம் விளங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


பட விளக்கம் 

மலேசிய குற்ற செயல் தடுப்பு அரவாரிய ஆட்சி மற்ற பௌப்பாளர்கள்,உடன் ராஜா முனுசாமி,டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் மற்றும் மேஜர் காளீஸ்வரன் 





  








செய்தி    : ஆர்.தசரதன்

பிப்            : 05.02.2017

ஜார்ஜ்டவுன்

பினாங்கு காப்பித்தான் பள்ளிவாசலில் சலவாத்து மஜ்லிஸ்


பினாங்கு மாநிலத்தில் உள்ள பிரபல வரலாற்று சிறப்புடைய  காப்பிதான் பள்ளி வாசலில்,அண்மையில் இரு தினங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட திக்ரு மற்றும் சலாவத்து மஜ்லிஸ் நிகழ்வுகள் சிறப்புடன் நடந்தேறியது.இந்த நிகழ்வில் தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் மௌலஷ அபுபக்கர் ரஷாதி அவர்கள் சிறப்புமிக்க சொற்பொழிவை ஆற்றினார்கள்.
கண்ணியத்துக்குறிய நாடறிந்த மார்க்க அறிஞரும், காப்பிதான் பள்ளியின் தலைமை இமாம் மனிதனல் சிறந்த முன் மாதிரி, மாமனிதர் மௌலானா டத்தோ அல்ஹாபிஸ் அப்துல்லா புஹாரி அவர்களின் துவாவுடன் நிகழ்வு தொடங்கியது.காப்பித்தான் பள்ளியின் தலைமை இமாம் மௌலவி அல்ஹாபிஸ் ஜியாவுல் ஹாக் பாக்கவி அவர்கள் ராத்தியத்துல் ஜலாலியா என்னும் திக்ரு என்னும் மஜ்லிஸை சிறப்புடன் வழி நடத்தினார்கள்.இந்நிகழ்வில் பொது மக்களுடன் சுமார் 20 உஸ்தாதுகள் உடன் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கண்ணியத்துக்குறிய சிங்கப்பூரை சேர்ந்த மௌலான அஹமது ஜபருல்லா ஆலிம் அவர்கள் சலவாத்து மஜ்லிஸை சிறப்புடன் வழி நடத்தினார்கள்.இச்சிறப்புப்பிகு நிகழ்வில் பினாங்கு,கெடா,பேராக்,பெர்லிஸ் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மதரஸா உஸ்தாதுகள்,மாணவர்கள் உடன் பொது மக்கள் 1400 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த  சலவாத்து மஜ்லிஸ் சிறப்புடன் நடைபெற உதவிகள் புரிந்த அனைவருக்கும் காப்பித்தான் பள்ளியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது. 



செய்தி   : ஆர்.தசரதன்


பிப்        : 03.02.2017


ஜார்ஜ்டவுன்




பினாங்கு தைப்பூச தினத்தை முன்னிட்டு தங்க இரதம் வெள்ளோட்டம்
ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்


பினாங்கு மாநில தைப்பூச தங்க இரதம் நேற்று வெள்ளோட்டம் கண்டது.காலை மணி 11.20 மணிக்கு ஸ்ரீ தண்டாயுதபாணி மலை கோயிலிலிருந்து கீழ் அடிவாரத்தில் உள்ள கணேசர்  ஆலயதிலிருந்து விதி உலா புறப்பட தயாரானது.இந்த வெள்ளோட்ட தின சிறப்பு விழாவில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவர் பி.இராமசாமி,ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலய தலைவர் ஆர்.சுப்பிரமணியம்,ஸ்ரீ டெலிமா சட்ட மன்ற தலைவர் ராயர்,பாகான் டாலாம் சட்ட மன்ற உறுப்பினர்அ.தனசேகரன்,பினாங்கு இந்து அறப்பணி  வாரிய  இயக்குனர் எம்.இராமசசத்திரன்,மலேசிய குற்ற செயல் தடுப்பு அரவாரிய உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன்,சமூக சேவையாளர் ஏ.சௌந்தரராஜன்,நம் தமிழர் இயக்க தலைவர் ப.த.மகாலிங்கம் மாற்று பொது மக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தங்க இரத்தத்தினை வடம் பிடித்து இழுத்தனர்.    

பினாங்கு மாநில 2017 ஆண்டுக்கான தைப்பூச திருநாளை முன்னிட்டு வருகின்ற பிப்பரவரி 8ஆம் நாள் அதிகாலை மணி 5.00 மணியளவில் குயின் ஸ்தீரிட்டில் அமைந்துள்ள மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து தங்க இரத்தில் வேலுடன் ஊர்வலம் வரும் என்றும்,பிப்ரவரி 10 ஆம் நாள் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்திலிருந்து மீண்டும்  குயின் ஸ்தீரிட்டில் அமைந்துள்ள மகா மாரியம்மன் ஆலயத்துக்கு தங்கரத்துடன் வேல் வைக்கப்பட்டது திரும்பும் என்று பேராசிரியர் பி.இராமசாமி கூறினார்.இந்த தங்க இரத்தமானது மக்கள் ரத்தமாக கருதப்படும் என்றும்,திட்டமிட்டபடி இந்த தங்க இரதம் வெள்ளோட்டத்துக்கு ஏற்பாடுகள் மிக கவனமாக செய்யப்பட்டது என்றும் பி.இராமசாமி மேலும் சொன்னார்.
இதனிடையே இந்த தங்க இரத வெள்ளோட்டத்தில் கலந்துக்க கொண்ட ஸ்ரீ பாலா தண்டாயுதபாணி ஆலய தலைவர் ஆர்.சுப்பிரமணியம் குறிப்பிடுகையில்.2017 ஆம் ஆண்டு தைப்பூசம் ஸ்ரீ பாலதண்டாயுத ஆலயத்தின் 231 தைப்பூசம் என்றும்,இந்த அந்நாட்டின் மகத்தான சிறப்பு தங்க ரத்தம் விதி உலா என்றும் மகிழ்ச்சியுடான் கூறினார்.பல சாதனைகளை கண்டுள்ள பினாங்கு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயம் மேலும் ஒரு மயில் கல் வளர்ச்சியாக தங்க இரத்தத்தினை பெற்றுள்ளது தனி ஒரு சிறப்பாக அமைந்துள்ளது என்றும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

பட விளக்கம் 











  

செய்தி   : ஆர்.தசரதன்

பிப்         :09.02.2017

ஜார்ஜ்டவுன்



பினாங்கு தைப்பூச திருநாளில் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் திரண்டு காணிக்கை செலுத்தினர்

குற்றச்செயல் அற்ற,தமிழர் கலை  பண்பாடு பெருநாள் தைப்பூச கொண்டாட்டம் மக்கள் பெருமிதம்


பினாங்கு மாநிலத்தில் தைப்பூச திருநாள் மிகவும் விமரிசையாகவும்,கோலகலமாக நேற்று முன்தினம் சிறப்புடன் நடைபெற்றது.இந்த 2017 ஆம் ஆண்டு அதிகமான மக்கள் உள்ளூர்  மற்றும் வெளி நாடுகளிலிருந்து   பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி  ஆலயத்தின் 231ஆது  தைப்பூச விழாவில் கலந்துக்கொண்டு தங்களின் நேர்த்திக் கடனை தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு செலுத்தினர்.இந்த தைப்பூச விழாவில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பால் குடங்களை செலுத்தப்பட்ட வேளையில் பல்லாயிரக்கணக்கான அழகுற செய்யபட்ட காவடிகள் இந்த ஆண்டு பினாங்கு தைப்பூசத்தினை வண்ணமய மாக்கியது.
வெளிநாடுகளின் சேர்ந்த சுற்று பயணிகள் இந்த ஆண்டு தைப்பூச விழாவில் கலந்துக்கொண்டதுடன்,சிறப்பு அம்சமாக இந்திய கலாச்சார உடைகளான வேட்டி சேலையுடன் காட்சியளித்தது இந்திய பண்பாட்டின் மாண்பை புலப்படுத்தியது.இவ்வாண்டு தைப்பூச விழாவில் 150 மேற்பட்ட தண்ணீர் பந்தல்கள் தனியார்,தொண்டூழிய ஊழியர்கள்,மன்றங்கள் மற்றும் பல அரசு சாரா நிறுவனங்கள் மூலமாக ஏற்படுத்தி மக்களின் தாகத்தையும் பசியை போக்கும் வண்ண அன்னதானங்களை வழங்கி பெரும் பங்கற்றினர்.

பினாங்கு மாநில காவல் துறையை சேர்ந்த 1000 க்கு மேற்பட்ட காவல் வீரர்கள் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த சிறப்புடன் செயல் ஆற்றினார்.மலேசிய குற்ற தடுப்பு அரவாரியாம்,மலேசில  இந்து சங்கம்,மாநில இந்து இளைஞர் பேரவை,பினாங்கு மாநில தமிழ் இளைஞர் மணிமன்றம்,பினாங்கு இந்து தர்ம மாமன்றம் ஒன்றிணைத்து பினாங்கு மாநில  தைப்பூச தினத்தில் குற்ற செயலை தடுக்கும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு  சிறந்த பலனை கொண்டு வந்தது என்றால் அது மிகையில்லை.

மக்களுக்கு தேவையான வசதி கொண்ட குளியல் அரை,கழிப்பிடம்,முடி காணிக்கை செய்ய போதிய வசதி கொண்ட இடம் ஆகியவற்றை  பினாங்கு இந்து அறப்பணி வாரியதின் உதவியுடன் அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலய தலைவர் சுப்பிரமணியம் ஆறுமுகம் தலைமையில் செயல்படும் ஆலய நிர்வாக குழுவினர் நிறைவுடன் செய்திருந்தனர்.

பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்,பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி,பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் ஏ .தனசேகரன்,மஇகா தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம், அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலய தலைவர் ஆர்.சுப்பிரமணியம்,டத்தோ ஆர்.ஏ.அருணாசலம்,மலேசிய குற்ற தடுப்பு அரவாரிய ஆட்சிமன்ற உறுப்பினர் டத்தோ/கே.ஆர்.புலவேந்திரன் ஆகியோர் தைப்பூச தினத்தன்று முக்கிய பிரமுகர்களாக ஆலய வழிப்பாட்டில் பங்கேற்றனர்.

சிறப்பு வழிபட்டதில் கலந்து கொள்ள வந்திருந்த பினாங்கு மாநில முதல்வர் லில் குவான் எங் உட்சாக பெருமகிழ்ச்சி அடைத்ததுடன்,பினாங்கு மாநிலத்தில் தைப்பூச திருநாளில் ஆண்டு தோறும் மக்கள் எண்ணிக்கை கூ டுவதன் மூலமாகவும் அதிகமான வெளி நாட்டு சுற்றுப் பயணிகளை ஈர்த்திருப்பது தனி சிறப்பாக கருதப்படுவதால்,ஒருவழி தொடர் போக்குவரத்து சேவையை அமுல்படுத்த பினாங்கு மாநில அரசு மேற்கொள்ளும் என்று தமதுரையில் அவர் கூறினார்.

இதனிடையே பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரிய தலைவர் பேராசிரியர் பி.இராமசாமி குறிப்பிடுகையில்,2017 ஆம் ஆண்டு பினாங்கு தைப்பூசம் ஒரு வரலாற்று தைப்பூசமாக மலை கோவிலில் வீற்றிருக்கும் அருள்பிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்துக்கு இரதம் இல்லையே என்ற குறையை தீர்க்க தங்க இரதம் ஒரு பெறப்பட்டடுள்ளது என்றும்,தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் பெரிய கோயிலாக விளங்கும் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலய தனி சிறப்பு வைத்துள்ளது இம்மாநிலத்தில் உள்ள தமிழ் மக்களுக்கும் மாறாக இந்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு பெருமை கொள்ளும் வகையில் அமைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இரவு வேளைகளில் தண்ணி பந்தல்களில் ஒளியூட்டிய வண்ண விளக்குகளும், கண்கவர் காவடிகள் மற்றும் சிறு ரக இரத்தங்களும்காண்போரை கவர்ந்தது.நள்ளிரவு  வரை மலைக்கோவில் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திலும் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் நள்ளிரவு தங்களின் இறுதி காணிக்கையை செலுத்தினர்.பினாங்கு மாநிலத்தை பொறுத்தவரை இந்த 2017 ஆம் ஆண்டு தைப்பூசம் சிறப்பான கோலாகலமான,குற்ற செயல் ஆற்ற சிறப்புக்குரிய தைப்பூசமாக திகழ்ந்தது என்றால் அதுமிகையில்லை.நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் தங்க இரதம் மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியார்ஆலயத்தின் பிரதான வெள்ளி இரதம் ஆகியவை தத்தம் ஆலயங்களிருந்து புறப்பட்டு மக்களுக்கு எல்லாம் வல்ல முருக பெருமான் காட்சியளித்தார்.
















செய்தி     : ஆர்.தசரதன் 

பிப்           15.02.2017

ஜார்ஜ்டவுன் 





  சாந்தி சமாதமான  நன்மை வாழ்வுக்கு  சகஜயோகா தியானம்!  
           
  பினாங்கு தைப்பூசத்தில் பக்தர்களுக்கு விளக்கம்!

    
                   
மனதினை  நிலையாக்கி தெளிவான சிந்தனையை  கொண்டு சாந்தமுடன் வாழ்வதற்கு,உற்ற வகையில் பங்கற்றிவரும் சகஜயோகா தியானப் பயிற்சியை, எல்லா தரப்பினரும் தெரிந்து  கொள்வதற்கு ஏதுவாக, அந்த உன்னத இறை நயம்  கொண்ட கலையை உள்ள  யுக்திகளை அம்மன்றத்தைச் சேர்ந்த தொண்டர்களின் அறிய முயற்சியில் ஒவ்வொரு தைப்பூசத்திலும் இலவசமாகவே நடத்தி நற்பணியாற்றி  வருகின்றனர்.


பினாங்கு தைப்பூசத்தில் இரு  நாட்களுக்கு இம்மன்றத்தின் பெயரில் பந்தல் நிர்மாணித்து, இங்கு வருகை புரியும்  பக்தர்களுக்கு அதனை இலவசமாக போதிப்பதுடன் பயிற்சி பெற்ற   தொண்டூழியர்களின் உதவியுடன் செய்து வருகின்றனர். தன்னலமற்ற சேவையின் பயனாக இங்கு வருகையளிக்கின்ற பக்தர்கள் பலர், இப்பயிற்சியை மேற்கொள்ளும் விதத்தை கற்றுணர்ந்து  பயன் பெறுகின்றனர்.

இல்லர வாழ்வில் எண்ணிலடங்க மன அழுத்தம், மிகையான உளைச்சல், நிம்மதியின்மை, விரக்தி குழப்பம் போன்ற காரணங்களில் பாதிப்புக்கு உள்ளன அனைத்துப் பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு தெளிவு பெறுவதற்கும் தன்னிலையை மேம்படுத்தி கொள்வதற்கும் சகஜயோகா தியானப் பயிற்சி உற்றத் துணை புரிவதால், இந்த அற்புதமான இறைமிகுந்த  கலைதனை முதியவர்கள் மட்டுமின்றி, இளையோர் மத்தியிலும் பிரபலமடைந்து வருகிறது என்தில் ஐயமில்லை.

இந்த உன்னத தியானப் பயிற்சியின் வழி  பொது மக்களிடையே மெய்யுக  மெய்ஞானத்தை  வளர்க்கும் தலையாய நோக்கத்தில், இம் மன்றத்தின் ஆலோசகரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான டத்தோ கே.ஆர்..புலவேந்திரனின் ஆதரவில், ஒவ்வெரு தைப்பூசத்தன்று இச்சேவையை வழங்க ஒருமித்த நற்பணியில், அண்மைய சில ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மக்களின் மன நிம்மதி கெடுவதற்கு மூல காரணமாக அமைவது விரக்தி, சஞ்சலம் தீருவதற்கும் சகஜயோகா தியான வழிபாடு, சிறந்த உன்னதபலனை அளிக்க வல்லது என்றும், திசைமாறித் தீய வழியில் செல்லும் இளைஞர்களின் நல்வாழ்வை வளம் பெற செய்து தூய சிந்தனையுடன் வாழ்வில் சிறந்து விளங்க  இந்த தியான வழிமுறை எண்ணிலடங்கா பலனை பெற உற்றத் துணை புரியுமென்று டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் கூறினார்.

இந்த தியான வழிபாட்டின் மகத்துவத்தை தைப்பூச பக்தர்களிடையே பரப்பி, அவர்களுக்கு நல்வழி காட்டும் உன்னத நோக்கத்தில், இச்சேவையை தைப்பூச தினத்தில் தாங்கள் மேற்கொண்டதாகவும் விவரித்த அவர், இந்த தியான வழிபாட்டுப் பயிற்சி வகுப்புகள் தங்கள் மன்றத்தின் ஆதரவில், மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் பொது மக்கள் நன்மைக்காக இலவசமாகவே நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


இதனிடையே, அன்றைய தினம் சிறப்பு வருகையளித்திருந்த சகஜயோகா தியான மன்றத்தின் தேசிய துணைத் தலைவர் கே.மோகன், இப்பயிற்சியை புரியும் விதம் தொடர்பில் பக்தர்கள் பலருக்கு விலாவாரியான விளக்கம் அளித்து வழிகாட்டினார். குழப்பத்தால் நிலை தடுமாறுகின்றவர்களும்,
 நிதானமின்றி சினம் கொள்பவர்களும் தாங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு, சகஜயோகா தியானத்தால் நல்ல பலன் கிட்டுமென்பதை அவர் சில உத்திகளால் செய்து காட்டிய விதம் இப்பயிற்சியை எடுத்துக் கொண்ட பக்தர்கள் பலருக்கு மனநிறைவை அளித்தது.

                                                 
பட விளக்கம்:

சகஜயோகா தியானப் பயிற்சியாளர்களுடன் டத்தோ புலவேந்திரன் மற்றும் கே.மோகன்