Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday 1 January 2016


பட்டர்வொர்த் இந்து சங்கம் ஏற்பாட்டில்
முறையாக வழிபாடு செய்யும் முறை ஒரு நாள் பயிற்சி


அண்மையில்  பட்டர்வொர்த் இந்து சங்கம் ஏற்பாட்டில் முறையாக வழிபாடு செய்யும் முறை ஒரு நாள் பயிற்சியை,இன்ன்குள்ள கம்போங் காஜா சங்க கட்டிடத்தில் சிறப்புடன்  நடைபெற்றது.இந்த பயிச்சிக்கு  பட்டர்வொர்த் இந்து சங்கம் சங்க தலைவர் கோ.சண்முகன்நாதன் அவர்கள் தலைமையேற்றார்.
 
 
இந்த நிகழ்வில் வரவேர்புரை ஆற்றிய இச்சங்கத்தின் தலைவர் முறையாக இல்லங்களில் வழிபாடு முறைதனை இந்து மதம் ஏற்படுத்தி உள்ளது என்றும் அதை முறையாக செய்வதன் மூலம் சிறந்த பலனை பெற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தர்.மேலும் முறையான வழிபட்டு முறைதனை  மக்கள் தெரிந்து கொண்டு கடைபிடிக்கும்  போது அவற்றை தங்களின் குடும்ப உறுப்பினர்களும் பின்பற்ற உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.இந்து போன்ற பயிற்சிதனை மதம் ஒரு முறை நடத்த திடமிட்டிருப்படகவும் அவர் சொன்னார். 
 
இந்த ஒரு நாள் முறையாக வழிபாடு செய்யும் முறை பயிற்சிதனை பட்டர்வொர்த் இந்து ஆலயங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆர்.எம்.சுப்பிரமணியம் சிறப்புடன் நடத்தினார்.இந்த பயனான நிகழ்வில் 10 குடும்பங்களை சேர்த்த 100 மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
 
 
பட விளக்கம் 
 
1.பயிற்சியில் கலந்து கொண்ட குடும்ப மாதர்களின் ஒரு பகுதினர்.
 

செய்தி : ஆர்.தசரதன்
ஜன       : 3
பினாங்கு



தைப்பூச திருநாளை புனித ஆன்மீக திருவிழாவாக  கொண்டாடுவோம்

வே.நந்தகுமார் வலியுறுத்து

 
அண்மையில் பினாங்கு மாநில இந்துதர்ம  மாமன்ற அருள்நிலயத்தின் ஏற்பாட்டில் "முருகன் தரிசனமும் தைப்பூச வழிபாடும்" என்ற தலைப்பில் பினாங்கு கொம்தார் 5வது மாடியில் உள்ள மாநாட்டு அறைதனில் கருத்தரங்கம் ஒன்று சிறப்புடன் நடைபெற்றது.
 
மலேசியா இந்து மாமன்ற தலைவரும்,பினாங்கு மாநில அருள்நிலைய தலைவருமாகிய தர்ம சிகாமணி திரு.வே.நந்தகுமார் வரவேற்புரை ஆற்றினார்.அவரின் உரையில் மலேசியா இந்துக்கள் தைபூச விழாவை ஒரு புனித ஆன்மீக திருவிழாவாக கொண்டாட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார்.தமிழ் கடவுளாகிய முருகவேலுக்கு தங்களின் வேண்டுதலை முறையாக விருதமிருந்து,நமது அருளாளர்கள் காட்டிய வழியில்,சமய நெறிமுறைகளை உணர்ந்து தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
 
மேலும் அவரின் உரையில் தைப்பூச நாளில் அதிக அளவில்  விரயமாகும் சிதறு தேங்காய்கள்,அபிஷேக பால்,அன்னதான வழங்கப்படும் உணவுகள் ஆகியவற்றை கேட்டுக்கொண்டார்.ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைப்பதற்கு பதிலாக ஒரு சில தேங்காய்களை உடைத்து,பாக்கியுள்ள  பணத்தை தர்ம காரியங்களுக்கு செலவு செய்தல் இறைவனின் கருணைக்கு பாத்திரமாகலாம் என்றார்.
 
அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலின் செம்பு பெரிய அளவில் இருப்பது அவசியமில்லை மாறாக சிறு அளவில் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்தலும் முருகன் அருள்பளிப்பர் என்றும் அவர் சொன்னார்.தைப்பூச நாளில் அதிக அளவில் விரயமாவதை அனைவரும் சித்திக்க வேண்டும் என்பதுடன் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல் பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த கருத்தரங்கில் அழைக்க பட்ட பிரமுகர்களுடன் அருள்நிலைய மாமன்ற உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
 
பட விளக்கம்'
 
 
1.ஏற்பாட்டுக்கு குழுவினருடன் பினாங்கு மாநில அருள்நிலைய தலைவர் வே.நந்தகுமார்

2.கருத்தரங்கில் கலந்து கொண்ட ஒரு பகுதியினர்.

3.நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினர்.