Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Thursday 31 December 2009

2010 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழர் வாழ் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 . இந்த புத்தாண்டு சகல செல்வங்களையும் கொடுக்க எல்லாம் வல்ல முருக பெருமானை வேண்டி கொள்கிறேன்.அனைவரின் புத்தாண்டு  பிராத்தனைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்


முருகனின் ஆறு படை வீடுகள்

Thursday 17 December 2009

கவியரசு கண்ணதாசன் மறைந்தபோது கவிஞர் வைரமுத்து எழுதியது)

ஒரு
தேவகானம்
முடிந்து விட்டது

எங்கள்
தமிழ்ச்சங்கம்
கலைந்து விட்டது

சரஸ்வதியின்
வீணையில்
ஆனந்த நரம்பொன்று
அறுந்து விட்டது

அந்த விமானத்தில்
எங்கள் ராஜ குயிலின்
கூடுமட்டுமே
கொண்டு வரப்படுகிறது

வார்த்தைக்கு ருசிதந்த
வரகவியே

உன்னை
வரவேற்கக் காத்திருந்த
வர்ணமாலைகளை
உன்
சடலத்தின்மேல் சாத்தவா?

எழுத முடியவில்லை
என்னால்

கண்ணீரின்
கனம் தாங்காமல்
வார்த்தைகள்
நொண்டுகின்றன

காற்றுக்கு
நன்றியில்லையா?

கவிதை வரிகளால்
காற்று மண்டலத்தையே
இனிப்பாக்கினாயே

உனது சுவாசத்துக்கு
அந்தச்
சண்டாளக் காற்று ஏன்
சம்மதிக்க மறுத்தது?

அந்நிய மண் என்பதால்
மரணம் – உன் உயிரை
அடையாமல் தெரியாமல்
அள்ளிப் பருகியதா?

எத்தனை இலக்கியம்
எழுதிய விரல்
எத்தனை கவிதைகள்
முழங்கிய குரல்
எத்தனை கருத்தை
நினைத்த மனம்


மரணத்தின் கஜானாவே

நீ திருடிய பொக்கிஷத்தைத்
திருப்பிக் கொடுத்து விடு
என் தாய்க் கவிஞனே
உன்னை இனி தரிசிப்பதெப்படி?
சாவின் மாளிகைக்கு
ஜன்னல்களும் கிடையாதே

நீ காதலைப் பாடினாய்
அது
இளமையின் தேசிய கீதமானது

நீ சோகம் பாடினாய்
அது
ஆயிரங் கண்ணீருக்கு
ஆறுதல் ஆனது

நீ தத்துவம் பாடினாய்
வாழ்க்கை தனது
முகமூடியைக் கழற்றி
முகத்தைக் காட்டியது

அரசியல் – உன்னை
பொம்மையாக நினைத்தபோதும்
நீ
உண்மையாகத் தானிருந்தாய்

உன் எழுத்து
ஒரு
கால் நூற்றாண்டுக்
கலாசாரத்தில் கலந்திருக்கிறது

“மரணத்தின் பின் என்னை
விமர்சியுங்கள்” என்று
வேண்டிக் கொண்டவனே

இன்று மரணத்தையன்றி
வேறொன்றையும் எமக்கு
விமர்சிக்க வலிமையில்லை

எவரேனும் இறந்தால்
உன் இரங்கற்பாப் படித்து
இதயம் ஆறுவோம்
இன்று இரங்கற்பாவே
இறந்து விட்டதே

உன்னை சந்தித்துப் பேசும்
சர்க்கரைப் பொழுதுகளில்
உன்
கண்களில் வெளிச்சத்தைக்
காதலித்தேனே

இனி அந்த வெளிச்சம் -
உன்
இமைகளைப் பிரித்தாலும்
இருக்குமா?

முப்பது வருஷத் தென்றலே
நீ நின்றுவிட்டதால் -
மனசில் புழுக்கம்
விழிகளில் வியர்வை

உன்
பூத உடலில் விழும்
பூவிலுள்ள தேனெல்லாம்
கண்ணீராய் மாறிவிடும்
கவிஞனே ..

உன்னைச் சந்திப்பது இனிமேல்
சாத்தியமில்லையா?

உடைந்த இருதயம்
ஒட்டாதா?

சொர்க்கத்தில் சந்திக்கலாம்
என்று
சொல்லுகிறார்களே

இந்த மூட நம்பிக்கை
நிஜமாய் இருந்தால்
எனக்கு நிம்மதி கிடைக்கலாம்

வைரமுத்து (1981)

Swami Vivekananda

Swami Vivekananda                                                                                                                                                       

Monday 14 December 2009

படித்து விரும்பிய துபாய் கணவன் உங்களுக்காக

 
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?


ٌ திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!ٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!ٌ சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!ٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சுpன்னப்பையனைபோல.... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...அழுவதும்... அணைப்பதும்...கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...இடைகிள்ளி..... நகை சொல்லி...அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு.....எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!ٌ கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?ٌ 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்..... ...

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!ٌ இது வரமா ..? சாபமா...?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா..... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்ٌ விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...தேவை அறிந்து... சேவை புரிந்து....உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து......தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

ٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

Friday 11 December 2009

உத்துசான் மலேசியாவின் நையாண்டி பேச்சு

உத்துசான் மலேசியாவின் நையாண்டி பேச்சு இந்தியர்களை வருந்த செய்கிறது .தேவையற்ற கட்டுரையை அதன் பத்திரிக்கையாளர் எழுதிருப்பதை இந்திய சமூகம் கடுமையாக கண்டனம் தெரிவிப்பதை காண முடிகிறது.ஒற்றுமையாக உள்ள நமது நாட்டில் தேவையற்ற கருத்துகளை அதுவும்  நாட்டின்  முக்கிய தினசரியாக திகழும் இந்த தினசரிக்கு அழகல்ல.மற்ற தினசரிகள் தவறுகளை நோட்டமிடும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு இதன் பத்திரிகை தர்மத்துக்கு சரியான தண்டனையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய சமூகம் எதிர்பார்கிறது.

இந்த நாட்டின் இன சகிப்பு தன்மைக்கு பாதகம் உண்டாக்கும் இதுபோன்ற கருத்துகள் கண்காணிக்க பட வேண்டும்.உள்துறை அமைச்சர் கடுமையான நடவடிக்கைள் இறங்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர் .

Thursday 3 December 2009

அனைத்துலக இந்திய வியாபாரிகள் கண்காட்சி

அனைத்துலக இந்திய வியாபாரிகள் கண்காட்சி அண்மையில் பினாங்கு மாநிலத்தில் நடைபெற்றது.இந்தியர்கள் பயன்படுத்தும் பொருட்கள் இந்த கண்காட்சியில் விற்பனை செய்யபட்டது.அதிகமான மக்கள் இந்த காட்சியில் கலந்து கொண்டனர் .அங்கு பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை தகவல் சேவை மையத்தை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு  தேவைப்படும் தகவல்கள் வழங்க்கபட்டது.



Tuesday 1 December 2009

101 குழந்தைகளுக்கு காதணி விழா

தமிழரின் பெருமையை பறைசாற்றும் உன்னத கலாச்சாரங்களில் ஒன்றான காதணி விழாவினை,அண்மையில் இங்குள்ள தண்டாயுதபாணி நாட்டு கோட்டை செட்டியார் ஆலயத்தில் 101 குழந்தைகளுக்கு இனிதே நடைபெற்றது .

தமிழர் பண்பாடுகளில் வீரத்தின் மரபினை மெய்பிக்கும் இந்த உன்னத கலாச்சாரம் கலா ஓட்டத்தில் தொய்வு கண்டுவிட்ட நிலையில் பினாங்கு மாநில இந்து இளஞர் பேரவை அதற்கு புத்துயிர் அளிக்கும் விதமாக இங்குள்ள 101 குழந்தைகளுக்கு அதனை இலவசமாக நடத்தி சாதனை புரிந்தனர் .

இந்த இலவச காதணி விழாவுக்கு மாநிலத்தில் ஆதரவற்ற குழந்தைகளும்,வசதி அற்ற இந்திய குடும்பங்களை சேர்ந்த  குழந்தைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .
இந்த நிகழ்வே மாநில இந்து   இளைஞர் பேரவை தலைவர் ஆர்.ரமணி அவர்களின் தலைமையில் நடந்ததுடன்,இந்த நிகழ்ச்சின் ஏற்பட்டு குழுவின் தலைவராக சூரியாகுமார் செயல் ஆற்றினார் .

இந்த விசேச நிகழ்வுக்கு மாநில கேரகன் கட்சி சார்பில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கோ கலந்து கொண்ட வேளையில்,மலேசியா இந்து  இளைஞர் பேரவை தலைவர் கா.ராசசெல்வம், மாநில மா இ கா  தொடர்புக்குழு தலைவர் டத்தோ பி.கே சுப்பையா,இளைஞர் பிரிவு தலைவர் தினகரன் , நாட்டு கோட்டை செட்டியார் ஆலய அறங்காவலர் டத்தோ  ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

101 குழந்தைகள் ஒரே இடத்தில காதணி விழா நடைபெறுவது முதல் தடவை என்பாதல் அதிகமான் மக்கள் இந்த வைபவத்தை காண வந்திருந்தனர்.மயில் ஆட்டம் ,பொய்கள் குதிரை,உருமிமேளம் வருகைபுரிந்த வருகையாளர்களை மிகவம் கவர்திருந்தது.

காதணி விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள்   
  

Monday 30 November 2009

101 children get ears pierced at ceremony


GEORGE TOWN: S. Puvarasan, three, sat quietly on his mother’s lap while onlookers surrounded them in the Nattukottai Chettiar Temple in Jalan Waterfall here.A man then applied alcohol spray on both his ears.He cringed a little but remained calm until the man pierced his ear lobe with a needle.
 
He started to struggle and kicked about but his parents, V. Kilimoli, 26, and K. Selvarajah, 31, managed to console their blind son.

Puvarasan, who lost sight in both eyes to retinoblastoma (eye cancer) when he was about a year old, was among 101 children, aged between three and nine, who had their ears pierced for free.Many children, especially the younger ones, were teary-eyed, screamed at the top of their voices and fought when it was their turn to have their ears pierced.The coming of age ceremony –

The Awaken Tradition: 101 Ear Piercings Ceremony – was organised by the Penang State Hindu Youth Council (HYO).Organising chairman A. Suriakumar said the ceremony was the first of its kind.
“The children are from welfare homes or from poor families,” he said.Prior to the ear-piercing ceremony, a group of children performed the traditional Indian peacock and horse dances.

Tuesday 24 November 2009

Benarkan Banggarma keluar Islam

Majlis Perundingan Bagi Agama Buddha, Kristian, Hindu, Sikh dan Tao Malaysia (MCCBCHST) menggesa S Banggarma dibenarkan menganut Hindu, dan sekali gus meninggalkan Islam, tanpa perlu melalui proses biasa di mahkamah.
Presidennya Dr Thomas Philips berkata wanita itu harus dibenarkan memilih agama yang diingininya kerana pertukaran kepada Islam dibuat semasa beliau masih kecil dan tidak pernah menghayati agama barunya itu.

Banggarma (kiri), juga dikenali Siti Hasnah Vengarama Abdullah, mendakwa agamanya ditukar sewaktu berada di rumah kebajikan di Kepala Batas kira-kira 20 tahun lalu sewaktu usianya masih 7 tahun.

Sementara Jabatan Kebajikan Masyarakat (JKM) pula mendakwa agama wanita 27 tahun itu ditukar oleh bapanya sendiri di Rompin, Pahang sewaktu usianya setahun.

Jawapan JKM ini berhubung perkara tersebut bagaimanapun dipertikaikan oleh Banggarma, antaranya kerana beliau tidak mempunyai dokumen seperti didakwa jabatan tersebut.

Tuesday 17 November 2009

குழந்தைகளுக்கு காதணி விழா


Friday 13 November 2009

இளைஞர்களும் இயக்கங்களும்

இந்நாட்டில் உள்ள இந்திய இளைஞர்கள் இளைஞர் சங்கங்களில் உறுப்பினர் பெற தவறிய காரணத்தால்,பல தகவல் பறிமாற்ற செய்திகளை பெற தவறுகின்றனர்.இந்த நிலை மாற வேண்டும்.தகவல் பெற்ற சமூகமாக இளைஞர்கள் மாற வேண்டும், இது காலத்தின் கட்டாயம்.இந்திய சார்புடைய சங்கங்கள், இயக்கங்கள் நமது நாட்டுல் நிறையவே இருக்கின்றது.அவற்றை தெரிந்து வைத்திருக்கின்ற அளவுக்கு இளைஞர்களுக்கு போதிய நேரம் அவர்களுக்கு இருப்பதில்லையே என்ற ஆதங்கம் எனக்கு ஏற்படுகின்றது.

என் இந்த நிலை சற்று ஆராய்வோம்.15-40 வயதுடைய இளைஞர்கள் இளைஞர் இயக்கங்களில் சேரலாம் என்ற நிலையை அரசாங்கம் நிர்நயத்துள்ளதை  நான் சுற்றிக்காட்ட விரும்புகிறேன்.காலம் கடந்து இயக்க்கங்க்களில் இணைவது இளைஞர்கள் முற்றாக தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.தகவல் தொடர்பு கண்ட ஒரு சமுகம் மற்ற சமுகதுடல் உயர்வு கொண்ட சமுகமாக இருக்கும் இன்பத்தில் சந்தேகம் இல்லை.

தங்களை வாழ்கையில் முன்னேற்றி  கொள்ள துணை புரியும் என்பது   எவ்வித சந்தேகமும் இல்லை .தொடரும் ......

Friday 6 November 2009

101 குழந்தைகளுக்கு காதணி விழா

 

பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை ஏற்பாட்டில் எதிர்வரும் 29.11.2009ஆம் நாள்,காலை மணி 8.00க்கு, இங்குள்ள பினாங்கு நகரத்தார் திருமுருகன் ஆலயத்தில் 101 குழந்தைகளுக்கு காதணி விழா சிறப்பாக ஏற்பாடு செய்யபட்டுள்ளது.இந்த விழாவில் 5 முதல் 7 வயதுடைய குழந்தைகள் கலந்து சிறப்பு செய்வர்.


இந்நிகழ்வில் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஆசிரம  குழந்தைகளும்,வசதி குறைந்த இந்திய குடும்பங்களின்  சேர்ந்த குழந்தைகளும் கலந்து கொள்வார்கள் மலேசியா திருநாட் டின் முதன் முறையாக அதிகமான குழந்தைகள் பங்கு பெறும் விழாவாக இந்த  காதணி  விழா நடைப்பெறுகின்றது.

கெரக்கான் கட்சியின் மாநில தலைவர் டத்தோ,டாக்டர் தெங் ஹாக் நான் அவர்கள் திரப்புரையாற்றி அதிகாரபூர்வமாக நிகழ்ச்சியை தொடக்கி வைப்பார்.இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக மலேசிய இந்து இளைஞர் பேரவையின் தேசிய தலைவர் கே.ராச்செல்வன்,பினாங்கு மாநில மஇகா  தொடர்புகுழுவின் தலைவர் பி.கே.சுப்பையா,பினாங்கு மாநில இந்து சங்க தலைவர் டாக்டர் ரவிசந்திரன்,பத்து கவான் நாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் அ.மோகன் மற்றும் சிலர் கலந்து கொள்வார்கள்.

Tuesday 3 November 2009

மலேசிய இந்திய வளர்ச்சி கூட்டுரவு கழகம்


மலேசிய இந்திய வளர்ச்சி கூட்டுரவு கழகம், அண்மையில் மலேசிய கூட்டுரவு கழகத்தால் அங்கிகாரம் பெற்றுள்ளது.இக்கழகம் மலேசிய இந்து இளைஞர் பேரவையின் கிழ் செயல்படும்.இக்கூட்டுரவு கழகத்தின் வழி இந்திய இளைஞர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.

இக்கூட்டுரவு கழகத்தில் வெ100 கொடுத்து உறுப்பினர் ஆகலாம்.1 பங்கின் விலை 100 ரிங்கிட் என்று விலை நிர்ணயம் செய்யபட்டுள்ளதால் ஒருவர் எத்தணை பங்கை வேண்டும் என்றாலும் வாங்கலாம்.நாடு தளுவிய இந்து இளைஞர் இயக்கங்களில் உறுப்பியம் பெற்றவர்களுக்கு  முதல் சலுகை வழங்கப்படும்.

இக்கூட்டுரவு கழகத்தின் வழி நமக்கு சேவை அடிப்படையிளான தொழில் துறை நமது கழகத்திற்க்கு வழங்கபட்டுள்ளது, உதாரத்திற்க்கு மினி மார்கேட்,தங்கும் விடுதி, சலவை நிலயம்,முடி திருத்தும் நிலையம்,  உணவகம் மற்றும் பல.

நமது கூட்டுரவு கழகத்தின் பதிவு என் W-6-0571.மேல் விபரம் பெற மலேசிய இந்து  இளைஞர் பேரவையிடம் தொடர்பு கொள்ளலாம்.

தலைவர் கே .ராசசெல்வம் 016-6264713  

 

Monday 26 October 2009



fatimacard

Wednesday 21 October 2009

அம்மா பஹவான் ஸ்ரீமூர்த்தி


  ஓம் சச்சிதானந்த பரபிரம்ம
         புருஷோத்தம பரமாத்மா
          ஸ்ரீ பஹவதி சமேத
         ஸ்ரீ பஹவதே நமஹ



 


எனது சேவகர்கள் மனித குலத்தின் மாற்றத்திற்கு மிகவும் ஆர்வத்துடன் செயல்புரிபவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். கண்களைத் திறந்து உங்களை சுற்றியுள்ள உலகைக் கூர்ந்து கவனியுங்கள். எங்கு பார்த்தாலும் துயரமும் கண்ணீரும் தானே… இந்த உலகம் சீராக இல்லை. இந்த உலகத்திற்கு ஏதோ ஒரு வழியில் உதவ வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவரிலும் தவறாமல் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட தவிப்பு உங்களுக்குள் இருந்தால் என்னுடைய சக்தியை உங்களுக்குள் பாயச்செய்வேன்!
மாற்றமடைவதற்கு உலகம் அனைத்தும் இங்கு வரமுடியாதல்லவா… அதற்காகவே, இந்த சக்தியைப் பெற்று நீங்களே மக்களிடம் செல்ல வேண்டும். தீட்ஷை சக்தி மூலம் மற்றவர்களை மாற்றக்கூடிய சக்தியை அறுபத்து நான்காயிரம் பேருக்கு வழங்க இருக்கிறேன்! நீங்கள் வளர்ச்சி அடைந்தவுடன் அந்த சக்தியை உங்களுக்கு வழங்குவேன். அதன் மூலம் நீங்கள் இந்த உலகத்தை மாற்றுவீர்கள்! 

இது நடைபெறுவதற்கு “இவ்வுலகம் மாறவேண்டும்” என்ற தவிப்பு உங்களுக்கு இருக்க வேண்டும். அது போன்ற கருணை இருந்தால் மட்டுமே இந்த தீட்ஷை சக்தி உங்களுள் பரிபூரணமாக நிலைத்து நிற்கும்!

அது போன்ற சேவகர்கள் மூலம், மனிதர்களுள் தவறாமல் மாற்றம் நிகழும்! உங்களைச் சுற்றி எத்தனையோ பேர் இதற்கு நேரடி சாட்சிகள்… மனிதன் மனிதனாக இல்லாமல், தெய்வீகத்தை வளர்த்துக் கொண்டால் ஒழிய, இவ்வுலகத்திற்கு விமோக்ஷனம் இல்லை. இதைத்தானே ரமண மகரிஷி, பரமஹம்சர், மகாத்மா காந்தி போன்றோர் காட்டினார்கள்.

ஒரு முறை உங்களுடைய நாட்டைப் பாருங்கள். இந்த நாட்டிற்கு ஏதாவது ஒரு வகையிலாவது உதவி புரிய முடிந்தால் செய்யுங்கள். இந்த நாட்டை நாம் மாற்றமுடியும்… மாற்றமுடியும் என்பதை செயல்முறையில் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.ஸ்வர்ணயுகம்உதயமாகவேண்டும்… உதயமாகிக்கொண்டிருக்கிறது!!!
- ஸ்ரீ பகவான் -





Tuesday 20 October 2009

பாலிம் இந்து இளைஞர் இயக்கம்



பாலிம் இந்து இளைஞர் இயக்கம் ஏற்பாட்டில் நடந்த 
காற்பந்து நிகழ்வுகள்







தீபாவளி பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு.

பினாங்கு மாநில இளைஞர் அமைப்பு நடத்திய
திறந்த இல்ல உபசரிப்பு



Thursday 15 October 2009

கவிச்சக்கரவர்த்தி கம்பன்

கவிச்சக்கரவர்த்தி கம்பன் - Kambar - was a medieval Tamil poet and the author of the Tamil Ramayanam known as Kambaramayanam), the Tamil version of Ramayana. Kavi Kamban was born in the 9th Century in Therazhundur, a village in the culturally rich Tanjavur district in the modern state of Tamil Nadu in South India. The poet belongs to a family who had Lord Narasimha (another avatar of Lord Mahavishnu, Who emerged from Kamba (pillar) to save the child devotee Prahlada) as their family deity. His devoted parents named his as Kamban.

Kamban was a great scholar of India's two ancient and rich languages, Sanskrit (Indo-European) and Tamil (Dravidian). The "Ramavataram" of Kamban is an epic of 10,000 odd verses, of 4-lines each. Kamba Ramayana is not a translation of the Sanskrit epic by Adikavi Valmiki, but an original retelling of the story of Sri Rama, as the incarnation of Lord Tirumal (Mahavishnu). The lyrical beauty, brilliant use of rhyme, simile and the astonishing variety of his poetry yet still conforming to the strict classification of verses in classical poems in Tamil language earned him the title, Kavicakravarti (Emperor among poets). He is also known as "Kamba Nattalvar", as he revived the greatness of Tamil language through his work during the medieval period.

Justice M M Ismail, an erudite Tamil scholar especially in Kamba Ramayana, brings out the uniqueness of Kamban in the following statement: "Kamban sang the story of Rama as of God come down on earth to suffer, chasten, uplift, help and guide men. Apart from this difference in the treatment of the hero, there is considerable difference in the poetic form between Valmiki and Kamban. Kamban's Ramayana is a lyric, while Valmiki's is an epic. The lyrical sparkle of Kamban and Tulsi Das goes well with their constant reminder that Rama is the Supreme Being Himself."

கம்ப இராமாயணம் பாடிப் பெரும் புகழ்பெற்றவர் கம்பன். தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம். வால்மீகியைப் பின்பற்றி எழுதியிருப்பதாகக் கம்பரே சொல்லுகிற போதிலும், கம்பராமாயணம் சமஸ்கிருத மூல நூலின் மொழிபெயர்ப்பு ஆகாது; அதன் தழுவலும் இல்லை; கதை நிகழ்ச்சிகளைச் சொல்லுகிற பொழுதிலும், அதன் முக்கிய பாத்திரங்களைப் படைக்கும் முறையிலும், கம்பன் தனித்த உத்திகளை வால்மீகியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கையாளுகிறான். ஆழமான கவிதை அனுபவத்தையும் புலமைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் கம்பனின் கைவண்ணமாகப் பார்க்கிறோம்.


எத்தனையோ பெரும் புலவர்கள் இந்திய மொழிகளையும் கீழைநாட்டு மொழிகளையும் இராம கதை எழுதிப் பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே கம்பனும் தன்னுடைய கதையில், அதன் வருணனையில் தன் காலத்து நிகழ்ச்சிகளையும் தான் வாழும் தமிழ்நாட்டின் சாயலையும் இடையிடையே புகுத்துகிறான் அல்லது படம் பிடித்துக் காட்டுகிறான். எனவே அவன் காட்டும் கோசலநாடு சோழநாடே என்று கூறலாம். நிலாவின் பெருமையை எடுத்துரைக்கும் பொழுது அவனுக்கு ஆதரவு வழங்கிய வள்ளலான திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் புகழ் போல, நிலவின் ஒளியும் எங்கும் பரவியிருந்தது என்று சொல்லி தன் வாசகர்களைக் கம்பன், காந்தம் போல தன்பாலும் தன்னைப் புரந்த(ஆதரவளித்த) வள்ளலின் பாலும் ஈர்க்கிறான். சமஸ்கிருத மொழியில் எவ்வாறு சொல்வன்மை பெற்றிருந்தானோ அவ்வாறே, கம்பன் தமிழ் மொழியிலும் சொல்வன்மை(நாவன்மை) பெற்றிருந்தான்.


சில சமயம், கம்பனும் ஏனைய தமிழ்ப்புலவர்கள் போல, பாவியல் மரபில் சிக்கிக் கொள்கிறான்; அவற்றின் போக்குக்குக் கட்டுப்பட்டு விடுகிறான். சான்று: மிதிலைக்கு இராமன் வந்தவுடன் எதிர்பாராத விதமாக இராமனும் சீதையும் சந்தித்துவிடும் சந்தர்ப்பத்தில் அவர்களுடைய உணர்ச்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை, மிக விரிவாக விவரிக்கிறான். இராமனுடைய மோதிரத்தை அநுமான், சீதையிடம் கொடுத்த பொழுது சீதைக்கு இருந்த உணர்ச்சிகளையும் கம்பன் விவரிக்கிறான்; கணவனுடன் மீண்டும் கூடி விட்டது போலச் சீதை நினைத்து மகிழ்ந்தாள் என்று மட்டும் வால்மீகி சொல்லியிருக்கிறான். கம்பன் அதோடு நிறுத்தவில்லை, அதை இன்னும் விரிவாகக் கூறுகிறான். ஆனால், தசரதனுடைய அசுவமேதயாகம் முதலியவற்றை வால்மீகி சொல்வதைவிடச் சுருக்கமாகவே கம்பன் தெரிவிக்கிறான்.

கம்பனைப் பற்றிய பல கட்டுக்கதைகள் உண்டு. அவற்றிலிருந்து சில உண்மைகள் நமக்குத் தெரியவருகின்றன. அவையாவன: அவன் தகப்பன் பெயர் ஆதித்தன்; பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் மாயூரம் வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழந்தூர் ஆகும். ; சாதியால் உவச்சன்;எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. புதுவையில் திரிகார்த்த சிற்றரசனாக விளங்கிய சரராமன் என்ற சடையப்ப வள்ளலால் பாராட்டப்படும் வாய்ப்பு கம்பனுக்கு தன் இளமையிலேயே ஏற்பட்டது. இந்த வள்ளல் பெயர் விக்கிரம சோழன் உலாவிலும், மூவலூரிலும் திருக்கோடிக் காவலிலும்(ஆண்டு குறிப்பிடாமல் உள்ள)கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இவன் கங்க வமிசத்து சேதிரையன் என்று இக்கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கம்பனை அவன் காலத்துச் சோழ அரசனும் பாராட்டி அவனுக்கு கம்பநாடு என்று பெயரிடப்பட்ட பெருவாரியான நிலத்தை அன்பளித்தான்; கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் சோழ அரசனே அவனுக்கு வழங்கினான்.


அவன் இராமாயணத்தை எழுதினான், அந்தக் காவியத்தில் அதன் கருப்பொருளில் அவனுக்கு இருந்த பக்தி அளவு கடந்தது. அதனாலேயே இதைத் தமிழில் எழுத முன்வந்தான். இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பி வந்து முடிசூட்டிக் கொள்ளும் வரை மட்டுமே கம்பன் எழுதியது எனினும், உத்தர காண்டம், ஒட்டக்கூத்தனாலோ அல்லது வாணிதாசன் என்ற வாணியன் தாதன் என்பவனாலோ எழுதப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.


அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிக் கூறப்படும் விவரங்கள் அவ்வளவு நம்பகத்தக்கவை அல்ல. திருவொற்றியூரில் சதுரானன பண்டிதருடைய சைவமடத்தில் வள்ளி என்ற தாசியைச் சந்தித்து அவள் மீது கம்பன் காதல் கொண்டானாம். வள்ளியின்பால் கம்பன் கொண்ட காதலையும் அவனைக் காதலிக்கும் மற்றொருத்தியிடம் அவனுக்கு ஈடுபாடு இல்லாததையும் "தமிழ் நாவலர் சரிதை"யில் சில செய்யுள்கள் தெரிவிக்கின்றன. பாண்டியன், காகதிய ருத்திரன் உட்பட்ட தன் காலத்திய அரசர்கள் எல்லோராலும் கம்பன் பாராட்டப் பெற்றான். இவனுடைய பெரும் புகழ்க்கண்டு சோழ அரசனே பொறாமையடைந்து, இவனை கொன்றுவிட சதி செய்ததாகவும், தானே இருந்து அவனைக் கொலை செய்ததாகவும் கட்டுக்கதைகள் உண்டு. இவற்றை சரிபார்க்க ஆதாரங்கள் இல்லை.

கம்பனின் காலம்

கம்பனின் காலத்தைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் உண்டு ஒட்டக்கூத்தன், சேக்கிழார் ஆகியோருக்கு அவன் சமகாலத்தவன் அல்லது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினன் என்று உறுதியாகச் சொல்லலாம். சடையப்ப வள்ளலின் பெயர் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்களில் உள்ள லிபியும் தியாக மாவிநோதன் என்பவனுக்கு உரிய சோழநாடு என்று கம்பன் சொல்லியிருப்பதும் இந்தக் கருத்தை உறுதிபடுத்துகின்றன. தியாக மாவிநோதம் என்பது மூன்றாம் குலோத்துங்கனின் பட்டப் பெயர்களுள் ஒன்று. சீவக சிந்தாமணியின் எதிரொலியையும் கம்பன் காவியத்தில் பார்க்க முடிகிறது. எனவே இது சீவக சிந்தாமணியின் காலத்தை அடுத்தது கம்பனின் காலம் என்று சொல்லலாம்.


இராமாயணம் தவிர ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, மும்மணிக்கோவை(இப்போது மறைந்துவிட்டது) ஆகியவற்றை கம்பன் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. மும்மணிக் கோவையை விமர்சனம் செய்த வாணியந்தாதன், கம்பனின் கவிதையைத் தாக்கியுள்ளான். ஏரெழுபது, திருக்கை வழக்கம் இரண்டும் உழவுத் தொழிலில் ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கும் வேளாள மரபுக்கு ஏற்றம் தர எழுதப்பட்டவை. ஏரெழுபது ஒரு பேரவையில் படித்து அரங்கேற்றப்பட்டது. அவ்விழாவில் சடையன்(சடையப்ப வள்ளல்) மகன் சேதிராயன் பாம்பு கடியால் இறந்தான். உடனே, கம்பன் இரண்டு வெண்பாக்கள் பாடி உயிர்ப்பித்தான் என்றும் செவிவழிச் செய்தி உள்ளது.


இராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றிய போது, அங்குப் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமாளை வேண்டி ஒரு அந்தாதியும் கம்பர் இயற்றினார். தன் பக்தர்களுள் பிரியமான சடகோபர் மீது 100 பாடல்கள் பாடவேண்டுமென்று திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் பெருமான், கம்பனுக்கு கட்டளையிட்டாராம். சிற்றிலக்கியங்கள் சிறு நூல்கள் ஆகியவற்றை நாடறிந்த பெரும் புலவர்கள் இயற்றினார்கள் என்று சொல்லி அவற்றுக்கு பெருமை தேடுவது இந்திய இலக்கியங்களுக்கு பொதுவான மரபு. இந்த இரு நூல்களுள் பொருளாழமோ இலக்கியச் சிறப்போ மருந்துக்கும் இல்லை. எனவே அவை கம்பனின் படைப்பு என்ற கருத்து ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல.

இவரது நூல்கள்

* சடகோபர் அந்தாதி
* சரசுவதி அந்தாதி
* திருக்கை வழக்கம்
* கம்பராமாயணம்

கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி

கடவுள் வாழ்த்து

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய
வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே
யிருப்பளிங்கு வாரா திடர்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

நூல்

கலித்துறை

சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்
றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்
பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. 1

வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்
சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே
பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்
உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. 2

உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்
தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை
வரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. 3

இயலானதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு
முயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
அயலா விடாம லடியேனையும் உவந்து ஆண்டருளே. 4

அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு
மருக்கோல நாண்மல ராள் என்னை யாளு மடமயிலே. 5

மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூ ரிருட்கோர்
வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே. 6

பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே
ஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே. 7

இனிநான் உணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்
கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்
றனிநாயகியை அகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்
பனிநாண் மலர் உறை பூவையை யாரணப் பாவையையே. 8

பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய
நாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கு நறுங்கமலப்
பூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே. 9

புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ
வந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்
சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ
உந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே. 10

ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை
இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்
திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே. 11

தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே. 12

புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை
அரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்
தெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற
விரிகின்ற தெண்ணெண் கலைமானுணர்த்திய வேதமுமே. 13

வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து
நாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே. 14

நாயக மான மலரக மாவதுஞான வின்பச்
சேயக மான மலரக மாவதுந் தீவினையா
லேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்
தாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே. 15

சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்
உரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற்
சிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும்
ஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே. 16

கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்
அருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத்
தருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்
பெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே. 17

தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்
எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா
மனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்
கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே. 18

கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்
கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்
கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே. 19

காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்
நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு
வாரணன் தேவியு மற்றுள்ள தெயவ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே. 20

அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு
முடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்
விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே. 21

வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்
கூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்
மாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்
சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே. 22

சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்
சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து
சாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா
மாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. 23

அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை யுபநிடதப்
படையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே. 24

தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து
விழுவார் அருமறைமெய் தெரிவா ரின்பமெய் புளகித்
தழுவா ரினுங்கண்ணீர் மல்குவா ரென்கணாவ தென்னை
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வத்தவரே. 25

வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே. 26

பொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ
மருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்
தருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்
கிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே. 27

இலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே
துலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்
கலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே. 28

கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய
சரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்
புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்
பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே. 29

பெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில்
இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில் எல்லாவுயிர்க்கும்
பொருந்திய ஞானந்தரு மின்பவேதப் பொருளுந் தருந்
திருந்திய செல்வந்தரு மழியாப் பெருஞ் சீர்தருமே. 30

Wednesday 7 October 2009

தமிழ் நாட்டிற்க்காண முதல் பயணம்





அன்புள்ள நண்பர்களே வணக்கம்.

அண்மையில் எல்லாம் வல்ல முருகன் திருவருளால் தமிழ் நாட்டிற்க்கு சுற்றுலா ஒன்றில் கலந்துக் கொள்ள மலேசிய இந்து இளைஞர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.இப்பயணத்தில் 12 பேர் கொண்ட குழுவிற்க்கு பேரவையின் தேசிய தலைவர் கா.ராச்செல்வம் தலைமை ஏற்றார்.

24.7.2009 காலை 7.30 கோலாலம்பூர் அனைத்துலக நிலையத்திலிருந்து புரப்பட்ட நாங்கள் 3.45 மணி இடைவேளைக்கு பிறகு திருச்சிரபள்ளி விமான நிலையத்தில் நாங்கள் பயணித்த ஏர் ஏசிய விமானம் தரையிரங்கியது.எனக்கு தமிழ் நாட்டிற்க்காண முதல் பயணம் என்பதுடன், எங்களின் பயணக் குழுவில் சிலருக்கு அது புது அனுபவத்தை தந்தது.

இப்பயணத்தில் திருச்சி,மதுரை,பழநி,பிள்ளையார் பட்டி,தஞ்ஞாவூர்,
அகிய இடங்களுக்கு   நாங்கள் பயணபட்டோம்.

எங்களின் பயணத்தில் நாங்கள் தரிசித்த முதல் ஆலயமாக ஸ்ரீ ரங்கம் ஆலயம் அமைந்தது, அதனை தொடர்ந்து சமையபுர மாரியம்மனை தரிசித்தோம் அதன் பிறகு நாங்கள் பழநீக்கு பயணமானோம்.
 பழநீ முருகனின் மூன்றாம் படை வீடாகிய  பழநீக்கு செல்லும் வழியில் பசுமையான விலை நிலங்களை காண நேரிட்டது.சாலையில் இருமருங்கிலும் தென்னை தோப்புகள் காட்சியளித்தது,பசுமை எழில் கொஞ்சும் வண்னம் இயற்கை வனப்பு கொண்டது பழநீ. நாங்கள் பழநீயை அடைந்த போது இரவாகிவிட்டதால் ஆலயத்திற்க்கு செல்லவில்லை.மலையின் அடிவாரத்தில்  உள்ள தங்கும் விடுதியில் அணைவரும் தங்கினோம்.

காலையில் முருக பெருமானை தரிசணை செய்ய அன்றைய இரவே ஆயுத்தமானோம்.நாளைய தரிசணத்திற்கான ஏற்பாட்டிணை எங்களுக்கு உதவியாக பழநீ திருதளத்தின் அனுமதி பெற்ற ஆடவர் ஒருவர் தேவையான ஏற்பாட்டை செய்தார்.

மறுதினம் காலையில் எங்கள் குழுவில் இருந்த 2பெண்கள் மற்றும் 6 ஆடவர்கள் பழநீ முருகனை தரிசிக்க புரபட்டோம்.எனது வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளை தங்கிய இந்த தரிசணம் அடங்கும் என்று, இன்று எனது வாழ்வில் நடந்த மாற்றத்தை என்னி பூரிப்பு அடைகிறேன்.

எனது வாழ்வில் எனக்கு தெரிந்து முடிக் காணக்கை செய்த்தே இல்லை என்னை அறியாமல் அந்த பழநீ ஆண்டவனுக்கு முடியை காணிக்கை செய்தேன்.               நாதஸ்வர மேல தாளங்கள் முழங்க பழநீ மலையை நோக்கி நாங்கள் புரப்பட்டோம்.

எங்களின் ஏற்பாட்டாளர் நாங்கள் சிறப்பு தரிசணம் செய்ய போதிய ஏற்பாட்டை செய்திருந்தார்.காலையில் சென்றதால் ஆலயத்தில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.சிறிது நேரத்திற்க்கு  பிறகு பழநீ முருகனை அருகில்   தரிசித்த   அந்தக் கண் கொள்ளா காட்சியை இன்று நிணைத்தாலும் மனம் ஏங்குகிறது.

முருகனை அருகில் நின்று தரிசிக்க அவன் திருஉருவத்தை காண கண் கோடி வேண்டும்.தரிசணம் முடிந்த பிறகு ஆலய வாலகத்தை நாங்கள் சூற்றி வலம் வந்தோம்.அதனுடன் பஞ்ஞாமிருதம்,திருநீறு மற்றும் இதர பொருட்களை    
அங்கு இருந்த கடைகளில்  நாங்கள் வாங்கினோம்.

பழநீ முரிகனை தரிசித்த பிறகு, எங்களின் பயணக்குழு தமிழகத்தின் நெட்களஞ்ஜியமான தஞ்ஜாவூரை நோக்கி புரப்பட்டது.இரண்டு மணி இடைவேளைக்கு பிறகு தஞ்ஜாவூரை அடைந்தோம், அங்கு உள்ள உணவகம் ஒன்றில் நாங்கள் மதிய உணவு உட்கோண்டோம்.தொடரும்.........

நமது பொருளாதாரம் நாம் நமது கையில்

தீபாவளி திருநாளை முன்னிட்டு,நமது இந்திய வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி அதரவு அளிப்போம்.நமது இந்திய மக்களின் பொருளாதாரம் நமது கைகளில் உயர்வதை நாம் பாதுகாக்க வேண்டும்.நமது  மக்களுக்கு நாம் வழங்கும் அதரவு நம்மிடையே பொருளாதார நிலயை மேம்படைய செய்யும் என்பதி ஐயமில்லை.

நமது மக்களின் வளர்ச்சிக்கு நாம் அதரவு வழங்க்கவிட்டல் யார் வழங்கப் போகிறார்கள்?.இந்த கருத்தை ஒரு மனதாக ஏற்று இவ்வருட தீபாவளி சிந்தனையாக கொள்வோம்.நன்றி வணக்கம்.

இனிய தீபாவளி வாழ்த்துகள்

இந்து பெருமக்கள் அனைவருக்கும்,பினாங்கு மாநில இந்து இளைஞர் சார்பில் நெஞ்சம் நிறைந்த தீபாவளி திருநாள் நழ்வாழ்த்துக்கள்.தீ்மை அளிந்து நன்மை கிட்டும் இன்னாளில் இந்து மக்கள் எல்லாச் சகலமும் பெற்று வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.நன்றி

இக்கண்
பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை தலைவர் நிர்வாக குழுவினர்

Tuesday 1 September 2009

சிந்தனையில் மேடை கட்டி

Monday 17 August 2009

இருதரப்பு ஒத்துழைப்பு கம்போங் புவா பலாவை காக்கட்டும்





பினாங்கு மாநிலத்தில் ஒரு பாரம்பரிய கிராமத்தை பாதுகாக்க ஒரு கிராமத்து மக்களே தொடுத்த அரப்போராட்டம் இது.கம்போங் புவா பலாவை பிரச்சணை ஒரு இனத்தின் பிரச்சணை என்று ஒதுங்கிக் கொன்ட மாநில அரசாங்கம், அம்மாநில பொதுத் தேர்தல் வெற்றிக்கு கிடைத்த தர்மகாரியமா இது?கிராமத்தை 1.09.2009க்குள் காலி செய்ய வேண்டும் என்ற கெடு.

கிராமத்தை பாதுகாக்க எத்தனையோ அரப்போராட்டகளை சந்தித்த இந்த கிராமத்து
மக்கள் கொண்ட சோதணைகள் கணக்கில் அடங்கா.காலத்தின் கட்டாயம்,இரு தரப்பையும் அழைத்து பேச வேண்டிய கடப்பாடு பினாங்கு மாநில அரசுக்கு தேவை.நாமும் அதை நாமும் வரவேற்போம்.

பினாங்கு மாநிலத்தை பொருத்தவரை சீனர்களுக்கும்,மலாய்காரர்களுக்கும் பாரம்பரிய கிராமங்களை மாநில அரசாங்கம் ஒதுக்கிது போல் இந்தியர்ளுக்கு கம்போங் புவா பலாவை
இந்தியர்களான தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை நியமானதே.கம்போங் புவா பலா வீட்டுன் உரிமையாளர்களை அழைத்து சுமுகமான தீர்வை கொண்டா ஒழிய அங்கு எதிர்வரும் 1.09.2009 க்குள் நிரந்தர தீர்வு பிரக்கும் என்று நம்பலாம்.

வீடமைப்பு நிருவனத்திர்க்கு சாதகமாக உயர்நீதிமன்றம் வீட்டுன் உரிமையாளர்கள்
காலி செய்ய உத்தரவு விடுத்ததை தொடர்ந்து கடந்த வாரம் சனிக்கிழமை வீடுகளை உடைக்க வந்த வீடமைப்பு நிருவனம்,தற்காலிகமாக ஒத்தி வைத்தது என்பது குறிப்பிடதக்கது.

Wednesday 22 July 2009

 
 பினாங்கு மாநில இந்து  பேரவை அண்மையில் பொன் மலை பொழுது என்ற கலை இரவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது .இக் கலை இரவில் பிரதமர் துறை துணை அமைச்சர் மாண்புமிகு எஸ்.கே .தேவமணி அவர்கள் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.மாநில தலைவர் ஆர்.ரமணி அவர்கள் அன்னாருக்கு மலை அனுவித்து சிறப்பு செய்த பொது படத்தில் காணலாம்.

Labels:

PON MALAI POLUTHU

KANIVEL BELIA

மலேசிய இந்து இளைஞர் பேரவை தமிழக சுற்றுலா






மலேசிய இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் 13 பேர் அடங்கிய பேராளர்கள் தமிழக சுற்றுலா மேற்கொண்டனர்.இச்சுற்றுலாவிற்க்கு பேரவை தேசிய தலைவர் க.ராசாசெல்வம் தலமை தாங்கினார்.24.07.2009 ம் நாள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பரப்பட்டு திருச்சி நகரம் வந்தடைந்தனர்.இரு நாட்டு உறவுகளை வளர்கும் நோக்கத்தில் இச்சுற்றுலா ஏற்பாடு செய்யபட்டது.இதில் முக்கிய அங்கமாக திருச்சி மாநகர ஆச்சியாளரிடம் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யபட்டது.திருச்சி நகரத்தின் ஒரு மயில் கல்லாக விமான நிலையம் நவினமாக இருந்தது.விமான நிலையத்தில் காத்திருந்த நான்கு சக்கர வாகனமுலம்,பேராளர் குழுவினர் மரகதம் உணவகத்தில் மதிய உணவை உண்டோம்.அந்த உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவுகள் சுவையாக இருந்ததுடன் புதிய பரினாம்மாகவும் இருந்தது.மதிய உணவுக்கு பின் நாங்கள் ஸ்ரீ ரங்க பெருமாளை தரிசிக்க ஸ்ரீரங்கம் சென்றோம், அங்கு நன்கு திவ்விய தரிசனம் எங்களுக்கு கிட்டியது.அதனை தொடர்ந்து அன்றைய முதல் நாளில் பழனி புரப்பட்டு சென்றோம்.படங்களை விறைவில் காணலாம்

Saturday 4 July 2009

PENANG YOUTH DAY 2009




Monday 22 June 2009

சிலப்பதிகாரத்தில் இலக்கியம்





சிலப்பதிகாரம் வெறும் கற்பனைக் காப்பியமல்ல. அது, தமிழ்சமுதாயத்தின் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட கலாச்சார மேம்பாட்டினையும், வாழ்க்கை நெறிமுறைகளையும்
விளக்கும் வரலாற்று நூல்.

''மனிதர் யாரும் பண்போடு, பிறருக்கும் பயன்படும் நெறியோடு , உயிருக்கும் அஞ்சாது
நீதிக்குப் போராடும் உணர்வோடு வாழ்ந்தால், அவரை இந்த உலகம் தெய்வமாகக் கொண்டாடும்''
என்ற உண்மையை கண்ணகி மூலம் நமக்கு உணர்த்தி இருக்கிறார் இளங்கோவடிகள்.
தமிழ்ச் சமுதாயத்தின் நல்வினைப் பயன் காரணமாக வரலாற்றுப் பின்னணியை நமக்கு
படம் பிடித்துக் காட்டும் சாசனமாக ஒரு காவிய மாளிகையைச் சமைத்துத் தந்துள்ளார்.
தமிழன் என்னும் மனவுணர்வை வளர்த்து, தமிழ் வழங்கும் நிலப்பகுதி உண்மை என நிறுபனம்
காட்டுவது சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரக் கதை சிறிதளவே கற்பனை தழுவிய வரலாறு ஆகும். காப்பியத் தலைவனும்
தலைவியும் தமிழ் இனத்தார் பெருமைப்படத்தக்க வரலாற்று நாயகியும் நாயகனுமாவர். தமிழனத்தின்
வரலாற்று களஞ்சியமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது.
தமிழர்களின் பண்பாடுகளை தெளிவாகக் காட்டும் தமிழ் நூல் சிலப்பதிகாரத்திற்குப் பின்பு
தோன்றவில்லை. இது , அந்தப் பெருங்காப்பியத்திற்குரிய தனிப்பெருமையாகும்.
ஆகவேதான் , '' நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ் நாடு ''
என்று டாக்டர் சாமிநாதய்யரும் ; '' யாமறிந்த புலவரிலே... இளங்கோவைப்போல் பூமிதனில்
யாங்கனும் பிறந்தில்லை... '' பாரதியும் சிறப்பித்துள்ளனர்.

சிலப்பதிகாரத்தின் கருப் பொருள்களாக அறிமுகப்படுத்தியவை:
'' அரசியல் பிழைத்தோர்க்கு
அறங் கூற்றாவதூ உம்
உரைசால் பத்தினிக்கு
உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து
ஊட்டும் என்பதூ ஊம்.... '' கும்.

அவர் கருத்துப்படி :- (1) அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
(2) உரைச்சால் பத்தினியை உயர்ந்தோரேத்துவர்.
(3) ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
என்ற மூன்றுமே ஆகும்.
எந்த இலக்கியமும் அது தோன்றிய காலத்தில் நியதிகளைக் கூறுவதோடு அமையாமல்,
பிற்காலத்திற்குத் தேவைப்படும் நீதிகளைப்போதிப்பதாகவும் இருக்கவேண்டும். சேர நாட்டு
கவிஞர் தந்த சிலப்பதிகாரத்திற்கு இந்தச் சிறப்புண்டு. ஆகவேதான் காலத்தை வென்ற
இலக்கியமாக - காப்பியமாக இன்றும் நிலைத்து நிற்கிறது. சிலப்பதிகாரத்திக் கதை
புனைந்துரை அன்று ; உண்மையில் நிகழ்ந்த வரலாறு. காப்பியத்தை அழகு செய்யவும்,
படிப்போர்க்கு சுவைதரவும் அங்குமிங்கும் குறைந்த அளவில் கற்பனைகளையும் வைத்துள்ளார்.

இளங்கோ கவிஞர்.
இந்த காப்பியத்திலே இளங்கோவடிகள் வெளிப்படையாகக் கூடியுள்ளவற்றை விட
இலைமறை காயென மறைத்துவைத்துதுள்ளவையே இலக்கிய நயம் மிகுந்த சுவை அதிகம்
எனலாம். அப்படி மறைக்கப்பட்டுள்ளவற்றில் ஒன்று கோவலனின் மதுரை பயணம் பற்றிய அந்தரங்கம்.

அதில் ''யாழிசை மேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்த தன் விளைவாகக் கடலும்,
காவிரியும் கலக்கும் இடத்திலே பல்லாண்டு தன்னோடு கலந்து வாழ்ந்த மாதவியைப் பிரிந்து
மறுகணமே கண்ணகி இல்லத்தை நோக்கிச் செல்வது.'' கண்ணகியை பல்லாண்டுகளாக பார்க்கத்
தவறி விட்டவனாதலால் அவளுடைய வாடிய மேனி அவனுக்கு வருத்தம் அளிக்கிறது. வரும்
வழியிலேயே நன்கு ஆலோசித்து எதிர்காலம் பற்றித்தான் எடுத்த முடிவை எதிர் மறையில் கண்ணகிக்கு அறிவிக்கிறான்.
அது ..

''சலம் புணர் கொள்கைச்
சலதிய டாடிக்
குலந்தரு வான்பொருள்
குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணுத்
தரும் எனக்கு....'' - என்பதாகும்

கண்ணகியின் வாடிய மேனி அவனுக்கு வருத்ததத்தைத் தந்திருந்தும், அதனை வெளிப்படையாக
கூறாது, மதுரை செல்லும் வழியில் எங்கும் கூறாது, மாதரி இல்லத்தில் மட்டும் கூறி,
'சிறுமுதுக் குறைவிக்கும் சிறுமையும் செய்தேன்' என்று கூறி, கண்ணகியின் வருத்தத்தைத்
துடைக்க முயல்கிறேன். இது ஆண்களுக்குகே இருக்கிற வீம்பு அல்லது தயக்கம் எனக்கூறலாம்.
இதனை பூகாரில் கூறாது மதுரையில் கூறுவது கவிஞர் மன இயல்புகளையும் அறிந்துவைத்துள்ளார்.
கண்ணகி தேவியின் வருத்தத்தை தீர்க்க- அம்மாபத்தினி மீண்டும் வாழ்வாங்கு வாழ வாய்பளிக்க,
வாணிபம் செய்ய பொருளீட்டவும் தன் கையில் மூலதனம் இல்லை என்பதனைச் சொல்லாமல்
சொல்லுகின்றான் கோவலன். '' பாம்பறியும் பாம்பின் கால் '' என்பது போல், வணிக மகளானகண்ணகி தன் கணவன் கூறிய வாசகத்தின் உட்பொருள் அறிந்து, '' சிலம்புள, கொள்ளுங்கள் ''
எனக்கூறினாள். தன் எண்ணம் பலித்ததறிந்த கோவலன்,

'' சிலம்பு முதலாகச்
சென்ற கலனோடு
உலந்த பொருளீட்டுத
லுற்றேன் மலர்ந்த சீர்
மாட மதுரை யகத்துச் சென்ற
என்னோடு ங்கு
ஏடலார் கோதாய் எழுக !''

என்று கூறி, கண்ணகியை அழைத்துக்கொண்டு மதுரை புறப்படுகிறான்.
மாதவியைப் பிரிந்துபின் கண்ணகியின் இல்லத்தை நோக்கி வழி நடந்தபோது தன் எதிர்காலம்
பற்றிக் கோவலன் எடுத்த முடிவு ? எப்படியேனும் சிறிது மூலதனத்தைத் தேடிக்கொண்டு,
மீண்டும் தன் குலத்தொழிலான வாணிபத்தில் ஈடுபட்டுக் கண்ணகியுடன் கூடி வாழ்வாங்கு வாழ
வேண்டும் என்பதாகும். அவனது முடிவுக்கு எதிர்பாராத வகையில் தன் காற்சிலம்புகளைத் தந்து
மூலதனம் திரட்ட வாய்ப்பளித்து விட்டாள் கண்ணகி.

சிலம்பை விற்று மூலதனம் தேடி வாணிபம் செய்து பிழைக்கக் கோவலன் மதுரை செல்வது,
அதனை '' பொருள் வயிற் பிரிவு '' என்கின்றன பண்டைய நூல்கள். பொருள் தேடும் பொருட்டுத்
தலைவன் தன் தலைவியைப் பிரிந்து நாடு விட்டு நாடு சென்றால், அது '' பொருள்வயிற் பிரிவு ''என்ற
இலக்கணத்தின் பாற்படும்.
இதற்கு பொருள் உரைத்த இளம்பூரணர், '' இதுவும் பொருள்வாயிற் பிரிவதோர் இலக்கணம்
உணர்த்துகிறது. இங்கு அதிகரிக்கப்பட்ட பிரிவு காலிந்பிரிவும் கலத்திற் பிரிவும் என
இருவகைப்படும். அவற்றுள் கலத்திற் பிரிவு தலைமகளுடன் இல்லை என்றவாறு '' என்று
விளக்கியுள்ளார். நச்சினார்க்கினியார் '' கலத்திற் பிரியும் காலத்தில் மட்டுமின்றி, காலிற் பிரியும்
காலத்திலும் தலைவியை அழைத்துச் செல்லும் வழக்கம் தலைவனுக்கு இல்லை '' என்கிறார்.

இதனை

'' ஓதலும் தூதும் பொருளுமாகிய மூன்று நீர்மையாற் செல்லுஞ் செலவு தலைவியோடு
கூடச் சேறலின்று என்றவாறு.''
''தலைவியை உடன் கொண்டு செல்லாமை முற்கூறிய உதாரணங்களிலும், ஒழிந்த
சான்றோர் செய்யுட்களுள்ளுங் காண்க. இதுவே சிரியர்க்குக் கருத்தாதல் வேண்டும்.
தலைவியோடு கூடச் சென்றாராகச் சான்றோர் புலனெறி வழக்கஞ்
செய்யாமையான உணர்க ''
'' கலத்திற் பிரிவு ' என்பது, மரக்கலத்தின் வாயிலாகச் செல்லும் கடற்பயணமாகும். ' காலிற்
பிரிவு ' என்பது நிலவழிச் செல்லும் கால்நடைப்பயணமாகும். கோவலன் சோழ நாட்டின்
தலைநகரிலிருந்து புறப்பட்டுப் பாண்டிய நாட்டின் தலைநகருக்குச் சென்றதனால் அவனுடைய பிரிவு
கலத்திற் பிரிவு காது ; காலிற் பிரிவேயாகும் என்கிறார்.
மதுரை நகரில் சிலம்பு விற்கும் பொருட்டாக மாதரி இல்லத்தில் கண்ணகியிடமிருந்து விடை
பெற்றுச் செல்லும் கோவலன்,

''வழுவென்னும் பாரேன் மாநகர் மருங்கு ஈண்டு
எழுக என எழுந்தாய் என்செய்தனை ''

என்று கண்ணகியிடம் கூறுங்கால்,பொருள் காரணமாகப் புகாரைவிட்டுப் பிரிந்தவன்
தலைவியையும் உடன் அழைத்துச் சென்றது ' வழு ' என்பதை ஒப்புக்கொள்கிறான்.
'' நம்முடைய நகரிடத்து நின்றும் இந்நகரிடத்து வருவதற்கு ' எழுக ' வென்றேனாக, அது
முறைமயன் என மாறாது என்னோடு ஒருப்பட் டெழுந்தாயே ! '' என்கிறான் கோவலன்.
தமிழினத்து வணிகர் மரபுப்படி பொருள் காரணமாகப் புகாரை விட்டுப் பிரிந்த கோவலன்
தன்னுடன் கண்ணகியை அழைத்துச் சென்றிருக்க கூடாது. அது வணிக மரபுக்கு மாறுபட்ட
இழுக்குடைய செயல். இதனை உணர்ந்தே '' உன்னை நான் அழைத்து வந்தது வழுவுடைய
செயல் '' என்பதைக் கண்ணகியிடமே கூறுகிறான் கோவலன்.
சமணரான இளங்கோவடிகள் தமிழர்களின் பண்பாடு ,கலாச்சாரம், இலக்கணம் அறிந்துள்ளது
நயமான இனிமையாகும்.

தமிழ் வணிகருடைய மரபுக்கு மாறாகக் கண்ணகியைக் கோவலன் தன்னுடன் அழைத்துச்
செல்லக் காரணம் என்ன? இந்தக் காரணத்தை வெளிப்படையாகக் கூறாமல், இலைமறை
கனியென மறைத்து வைத்துள்ளார் இளங்கோவடிகள். அவர் மறைத்த பொருளை உவமை
நயமாக பார்ப்போம்.

கம்ப ராமாயணத்தில், தந்தையின் வாய்மையைக் காக்கும் பொருட்டு ராமன் கானகம்
செல்கிறான். தொல்காப்பியர் கூறுகின்ற மூவகைப் பிரிவுகளுக்கும் ராமன் அயோத்தியை
விட்டு பிரிந்ததற்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் சீதையை உடன் அழைத்துச் செல்ல
ராமன் விரும்பவில்லை. அவள் உடன் வர விரும்பியும் மரபுக்கு மாறுபட்ட செயல் என்று
கூறாமல், '' பாலைவனம் உன் பாதத்தைச் சுடும் '' என்கிறான். அவளை அயோத்தியில் நிறுத்த
முயல்கிறான். '' நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு '' என்று கூறி, பிடிவாதம் பிடிக்கவே
வேறு வழியின்றி அவளை அழைத்துச் செல்கிறான்.
கோவலன் கண்ணகி கேளாத நிலையில் தன்னுடன் வருமாறு அழைத்துச் செல்கிறான்.
'' மரபுக்கு மாறாக உடன் வருமாறு உன்னை அழைத்தபோது நீயேனும் மரபின் மாண்பை
நினையூட்டி உடன் வர மறுத்திருக்கலாம் ?'' என்று மாதரி இல்லத்தில் கோவலன் கண்ணகியிடம்
சொல்லாமல் சொல்கிறான். தற்கு, ''வழுவென்னும் பாரேன் மாநகர் மருங்கீண்டு எழுகென எழுந்தாய்
என் செய்தனை '' என்று கோவலன் கூறியதே சான்று.

மதுரை புறப்பட நினைத்த கோவலன் திரும்பவும் சோழ நாட்டுக்கு வருவதில்லை என்ற
முடிவு செய்து கொண்டு , கண்ணகியையும் உடன் அழைத்து செல்கிறான். திரும்பவும்
புகார் நகருக்கு வரும் எண்ணம் அவனுக்கு இருந்திருந்தால் பொருள்வயிற் பிரியும்
தலைவனுக்குரிய நெறிப்படி தான் மட்டுமே சென்றிருப்பான்.
கோவலன் மிக சிறந்த தன்மானம் கொண்டவன். மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் மானமுடையவன்.
மாதவியைப் பிரிந்து கண்ணகி இல்லம் புகுந்த கோவலன், அவள்
வாழ்ந்த ஏழுநிலை மாடமுடைய மாளிகையில், வேறெந்தப் பகுதிக்கும் செல்லாமல்,
'' பாடமை சேக்கைப் பள்ளியுள் புகுந்தான் ''.
பல்லாண்டு கண்ணகியைப் பிரிந்து கோவலன் மீண்டும் வந்ததும் நேரே பள்ளி அறை
புக வேண்டும். இங்குதான் ளங்கோ பாத்திரப் படைப்பின் பண்பை இலக்கிய நயமாக
விலக்குகிறார். பள்ளியறை கணவன் - மனைவி இருவம் மட்டும் செல்லக்கூடிய
அந்தரங்க அறை. வேறு யாரும் தம்மைப் பார்த்துவிடக்கூடாது என்ற நினைப்பில்,
எண்ணத்தில் பள்ளியறை புகுகிறான். காரணம் , கண்ணகி வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்
போதே மறுநாள் காலை புகாரை விட்டு வெளியேற முடிவு செய்துக்கொண்டான்.
கையால், புகாரில் தான் தங்கியிருக்கும் இரவு பிறர் கண்ணில் பாடமல் மறைந்திருக்க
விரும்பினான்.

மறுநாள் காலைக் கதிரவன் அடிவானத்தில் தன் சுடர்களை வீசி எழுவதற்கு முன்பே -
இருளிலேயே தான் பிறந்த பதிவிட்டு பெயர்கிறான். இதுவும் அவனது தன்மானத்திற்கு
சான்றாகும். புகாருக்கு வெளியே கவுந்தியடிகளைச் சந்தித்தபோது,

'' உருவும் குலனும்
உயர்பே ரோழுக்கமும்
பெருமகன் திருமொழி
பிறழா நோன்பும்
உடையீர் ! என்னே
உறுக ணாளரிற்
கடைகழிந்து இங்ஙனம்
கருதிய வாறு ....''
என்று கேட்டபோது, ' மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன் ' என்கிறான் கோவலன்.

அபோதும் கூட ' பொருள் தேடும் பொருட்டு மதுரை மூதூர் செல்கின்றேன் ' என்கிறான்.
அந்த சமயத்தில் கூட , ' என் மனைவியின் காற்சிலம்பை விற்றுப் பொருள் தேடப் போகிறேன் 'என்று
சொல்லவில்லை. அப்படிக் கூற மானமுள்ள அவனது நெஞ்சு மறுத்திருக்க வேண்டும்.
மதுரையில் , கோவலனைக் காட்டிப் பொற்கொல்லன் கூற, அவனது கூற்றை ஒரு வார்த்தை
கூட கோவலன் கூறவில்லை. ம் ;, தன்னைக் காட்டி. '' இவனே கள்வன் '' என்று
பொற்கொல்லன் கூறக் கேடோதே மானமுடைய கோவலன் மாண்டுபோய் விட்டான்.
கையால், கல்லாக் களிமகனான காவலன் ஒருவன் தந்து கையிலிருந்த வாளால்
வெட்டியபோது, '' கோவலன் கொலையுண்டான் '' என்று கூறாமல்,

''கல்லாக் களிமகன்
ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன்
விலங்கூடு அறுத்தது ''
என்கிறார் இளங்கோவடிகள். '' விலங்கூடு அறுத்தது '' என்னும் சொல் ஆ ழ்ந்த பொருளுடையது.

இங்கும் இளங்கோவடிகளின் இலக்கிய உவமை நயத்தினைக் காணலாம். தான் கள்வன்
என்று கேட்டப்போதே கோவலன் மாண்டு போய்விட்டான் என்பதனை நினைவூட்டும் வகையில்
காவலன் வீசிய ஒளி பொருந்திய வாளானது கோவலன் உடலைக் குறுக்காகத் துண்டாடியது
என்கிறார் ளங்கோ. ம் ; உயிர் முன்பே போய்விட்டதால் ,வெறும் உடலை வெட்டினான் கொலைஞன்.
' கள்வன் ' என்னும் பழிசொல்லை, இழிசொல்லை கேட்டபோதே உயிர் நீத்தான்.
மொழி நுட்பம் -அடுக்கு மொழி ற்றல் :
கணவனை இ ழந்த பாண்டிவேந்தன் அரண்மனை வாயிலை அடைந்து வாயிற் காவலனுக்குக்
காட்சி அளிக்கிறாள். '' வாயிலோயே , வாயிலோயே !'' என்று வாயிற்காவனை விளித்து,

வாயிலோயே ; வாயிலோயே !
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே !
இணையரிச் சிலம்பொன் ஏந்திய கையன்
கணவனை இழந்தாள் கடையகத்தான் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே ! [ என ]

கண்ணகியைக் கண்ட வாயிற்காவலன் நடுநடுங்கிப்போனான். தென்னவன் செழியவன்
அரண்மனை வாயிலியே, அதற்கு முன் கண்ணகியின் கோலத்தில் வேறு யாரும் வந்து
வாயிற் காவலனை கண்டதில்லை. அதனால் கண்ணகியின் வரவு கண்டு அஞ்சி அவளது
வரவை அறிவிக்க உள்ளே ஓடுகிறான்.

வாழி ! எம் கொற்கை வேந்தே வாழி !
தென்னம் பொருப்பின் தலைவ வாழி !
செழிய வாழி ! தென்ன வாழி!
பழியடு படராப் பஞ்சவ வாழி
அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடமேறிய மடக்கொடி
வெற்றிவேற் அடக்கைக் கொற்றவை யல்லன்;
அறுவர்க் கிளைய நங்கை, இறைவனை
டல் கண்டு அருளிய அணங்கு, சூருடைக்
கானகம் உகந்த காளி ; தாருகன்
பேருரம் கிழிந்த பெண்ணும் அல்லன்;
பொற்றோழில் சிலம்ம்பென் ஏந்திய கையன்
கணவனை இழந்தாள் கடையகத்தாளே !

மன்னனைக் கண்டதும் ' வாழி ' என ஒரு முறை வாழ்த்துகிறான். ' என் கொற்கை வேந்தே, வாழி
'என்று திரும்பவும் ஒரு முறை வாழ்த்துகிறான். அதாவது, வாயிற்காவலனின் வாய் ' வாழி 'என்று கூறிய
ஒவ்வொரு சமயத்திலும், அவன் தலை வணங்கிக் கொண்டே இருந்ததாம் !
ஆ ம் ; பாண்டியன் நெடுஞ்செழியனை வாயிற் காவலன் இனிமேல் வாழ்த்தப் போவதில்லை.
அவன் தலையும் வணங்கப்போவதில்லை. அதனால், ஆ று முறை வாழ்த்தியும் வணங்கியும்
அவலச்சுவையை வெளிப்படுத்துகிறான். இதுதான் இறுதியான வாழ்த்தும் வணக்கமும்
என்று இளங்கோவடிகள் சொல்லமல் சொல்கிறார்.

கோவலன் கள்வனல்ல என்பதனைக் கண்ணகியால் அறிந்த பாண்டிய வேந்தன்,
' பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்டேன் ' இது அவனது தீர்ப்பின் முதல் வாசகம்.
இதிலே மறைந்திருப்பது , ' அமைச்சர்களின் சொல் கேட்கத் தவறினேன் ' என்பதாகும்.
ம் ; கேட்க வேண்டிய அமைச்சர்களின் சொல் கேட்கத தவறியது ஒரு குற்றம் ;
கேட்கத் தகாத பொற்கொல்லன் சொல் கேட்டது மற்றொரு குற்றம். ஒன்றை
வெளிப்படையாக சொல்கிறான். மற்றொன்றை அதனுள்ளேயே மறைந்து கிடக்கிறது.
மன்னன் சொன்ன மறுவாசகம், '' யானோ அரசன் ?'' என்பதாகும். இதிலே . ' யான் அரசல்லன் '
என்ற பொருளும் மறைந்து கிடக்கிறது.
அடுத்து, 'யானே கள்வன்' என்றான். 'யானே ' என்பதிலுள்ள பொருள் கோவலன் கள்வனல்லன்
என்னும் பொருளைத் தருகிறது.
இவ்வளவு பொருள் புதைந்த, அருள் நிறைந்த, அறஞ் செறிந்த தீர்ப்பை , தமிழ் மொழியிலேதான்
கூறமுடியும்.

தமிழ் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் மிகச் சிறந்த நாடகக் காப்பியமாகும்.
' நாடகம் ' என்ற சொல்லுக்கு நாடு முழுவதையும் -அதாவது நாட்டிலுள்ளஅனைத்தையும் தன்னகத்தே
காட்டுவது என்று பொருளாகிறது. சிலப்பதிகாரம் நாடு முழுவதையும் தன்னத்தே காட்டும் தன்மை
உடையதாகும். சேர-சோழ- பாண்டிய மண்டலங்களைக் கொண்டதாக காண்கிறோம்.
அந்தணன், அரசர்,வணிகர், வேளாளர்ள கிய நால்வகையாளலிருந்தும் பாத்திரங்களை
அறிமுகப்படுத்தியுள்ளார்சிரியர்.

இலக்கண முறைப்படி குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம்,பாலை என ஐவகை நிலங்களை
பிரித்துக் காட்டியுள்ளார். ஐவகை நிலங்களை யன்றி, ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தனித்தனித்
தெய்வங்களை அந்தந்த நிலமக்கள் வழிபடுவதையும் தெளிவாக சாட்சிப்படுத்தியுள்ளார்.
மருதத்தில் இந்திர விழா , பாலையில் கொற்றவை வழிபாடு, குறிஞ்சியில் முருகன் வழிபாடு,
முல்லையில் திருமால் வழிபாடு, நெய்தலுக்குரிய வருணன் வழிபாடு என்று வகைப்படுத்தி,
'கானல் வரி'ப்பாட்டின் றுதியில், ''மாக்கடல் தெய்வம் நின் மலரடி வணங்குவதும்'' என்று
கடல் தெய்வத்தின் வழிபடுதலைக் காண்கிறோம்.

பாத்திரங்களில் [மக்களில்] பன்னிரண்டு வயதுடைய கண்ணகி முதல் முதியோளான
இடைக்குல மாதரி வரையிலும் பலவேறு பருவத்தினரையும் சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம்.
இப்படி, நாடு முழுவதையும் தன்னகத்தே காட்டும் தலைசிறந்த நாடகக் காப்பியமாகிய
சிலப்பதிகாரத்திலே குறுநடை பயிலும் குழந்தை நடமாடக் காண்கிறோம். இந்த காப்பியத்திலே
இளங்கோவடிகள் வெளிப்படையாகக் கூடியுள்ளவற்றை விட இலைமறை காயென மறைத்து
வைத்துதுள்ளவையே இலக்கிய நயம் மிகுந்த சுவை அதிகம் எனலாம்.

சிலப்பதிகாரம் பயில்வோர், தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் போதித்த வாழ்க்கை
நெறியோடு சிலப்பதிகாரப் பாத்திரங்களைப் பொருத்தி ராய்வார்களாயின், எத்தனை
எத்தனையோ இலக்கிய இன்பங்களை , உவமை நயங்களை அனுபவிப்பர். '' நவில் தொறும்
நூல் நயம்போல் '' என்று வள்ளுவர் கூறினாரே, அதற்குச் சான்றாக அமைந்த பெரு நூல்,
காப்பியம் மகாகவி இளங்கோ தந்த சிலப்பதிகாரம்.